விவேக் ஆதித்யா அறைக்கு வெளியே நின்று “ஆதித்யா” என பெயர் சொல்லி அழைத்தான்.
கதவை திறந்த ஆதித்யாவின் கண்களில் மெல்லிய சலிப்பு இருப்பது விவேக்கின் கூர்மையான கண்களுக்கு உடனே புலப்பட்டது.
ஆதித்யாவை தாண்டி உள்ளே பார்த்தவனுக்கு உடனே விஷயம் புரிந்துப் போனது. அறையில் ஒரு கருப்பு ஸ்க்ரீனில் வேகமாக வரிகள் ஓடிக் கொண்டிருந்தது.
“உன்னை டிஸ்டர்ப் செய்துட்டேன் போல இருக்கே. நீ வேலையை தொடர்ந்து முடி, நான் அப்புறம் பேசுறேன்,” எனத் திரும்பி நடக்கத் தொடங்கினான் விவேக்.
சிறிது தூரம் அவன் சென்றதும், “விவேக் சார், விவேக் சார்,” என அழைத்துக் கொண்டே ஆதித்யா பின்னே ஓடி வருவது புரிந்தது.
விவேக் ஆதித்யா அவன் பக்கத்தில் வருவதற்காக நின்று காத்திருந்தான்.
“என்ன ஆதித்யா?”
“சாரி சார். இன்னும் சரியான ஐடியா க்ளிக் ஆக மாட்டேங்குது. முன்னாடி நான் ரெடி செய்திருந்த கோட் ரன் செய்தா அதுவும் நிறைய எரர் காட்டுது!” என ஏமாற்றத்துடன் சொன்னான் ஆதித்யா.
விவேக் வந்தக் காரணத்தை மறந்து நண்பனாக ஆதித்யாவின் முதுகில் தட்டி தேற்ற முயன்றான்.
“வழில வர தடங்கல்கள் எல்லாமே நாம நம்ம கடைசி இலக்கை அடைய வரும் படிகற்கள், ஆதித்யா. மகாபாரதத்துல அர்ஜுன் கண்ணுக்கு இலக்கா இருந்த குருவி மட்டும் தெரிஞ்ச கதை நீயும் கேட்டிருப்பீயே? டார்கெட் செட் செய்து வச்சுட்டு நேரா ப்ளான் செய்து போயிட்டே இருக்கனும். வழில பல ஆயிரம் தடைகள் வரும். அதுக்காக டென்ஷன் ஆகாம ஈஸியா ஹாண்டில் செய்துட்டு போகனும். நீ இப்போ பதற்றத்துல இருக்க. அப்படி இல்லாம, இரண்டு
Yash has written more than 1 Tamil series in Chillzee and One Novel in Chillzee KiMo.