(Reading time: 7 - 13 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

  

அவன் போட்டிக்கு என்ன செய்ய வேண்டும்? புது டெக்னாலஜி திறமையை வெளிப்படுத்தும் ஐடியா கொடுக்க வேண்டும்.

  

இவ்வளவு அதிகமான பரிசு தருகிறார்கள் என்றால் புதுமையான ஐடியா மட்டுமல்லாமல், விற்க கூடிய ஐடியாவாக தான எதிர்பார்ப்பார்கள்.

  

அவர்கள் கொடுக்கும் ஐடியா பெயரளவில் இல்லாமல் ஒரு பொருளாகவோ, சர்வீசாகவோ விற்க கூடிய விதத்தில் இருக்க வேண்டும்.

  

ஆதித்யா இதை நோட் செய்து வைத்தான்.

  

தொடர்ந்து யோசித்தான். விற்பனை என்றாலே லாபம் பற்றிய கணக்கு இருக்கும், ஆனால் போட்டி என்று வரும் போது வெறும் லாபத்தை மட்டும் மனதில் வைத்து முடிவு செய்ய மாட்டார்கள். சுற்று சூழலுக்கு உதவுவதாக அல்லது மனித இனத்திற்கு உதவுவதாக இருந்தால் இன்னும் அதிக நன்மை கொடுக்கும்.

  

ஆதித்யா இதையும் நோட் செய்தான்.

  

இப்படியே தொடர்ந்து பல பாயிண்டுகளை யோசித்து நோட் செய்தான்.

  

அடுத்ததாக அவனிடம் இருக்கும் ஐடியாக்கள் ஒவ்வொன்றாக பட்டியல் இட்டான்.

  

ஆட்டோமேட்டிக் பஸ் சர்வீஸ், டாக்ஸி சர்வீஸ் என்று தொடங்கி மனதில் பட்ட பல ஐடியாக்களை பட்டியல் இட்டான்.

  

அப்போது அக்ஷரா தயக்கம் நிறைந்தவளாக வந்தாள்.

  

“ஆதி, நீ பிஸின்னு தெரியும். காம்படிஷன் வேலை செய்றேனா நானும் ஜாயின் செய்யட்டுமா? உன்னை தொல்லை செய்ய மாட்டேன். நீ என்ன செய்ற எப்படி செய்றேன்னு பார்க்கிறேன்.”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.