(Reading time: 8 - 16 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 37 - பிந்து வினோத்

PBS!”

வாசல் கதவு திறந்ததும் தன் வேலை முடிந்தது என்பதுப் போல திரும்பி நடந்துக் கொண்டிருந்த மஞ்சு அரை மனதுடன் திரும்பி மனோஜைப் பார்த்தாள்.

“என் புது வேலை எப்படி இருந்ததுன்னு கேட்க மாட்டீயா?”

“pbs, உனக்கே தெரியும் நான் எவ்வளவு மென்டல் ப்ரெஷர்ல இருந்தேன்னு... புரிஞ்சுக்கோடா...”

மஞ்சு கணவனைப் பார்த்து முறைத்தாள்.

“வா, நாம இரண்டுப் பேரும் பேசி எல்லாம் க்ளியர் செய்திருவோம்.”

“எனக்கு வேற வேலை இருக்கு.”

சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள் மஞ்சு.

மனோஜ் அவளை அப்படி போக அனுமதிப்பதாக இல்லை. தோளில் மாட்டி இருந்த பேகை அருகே இந்த சேரில் வைத்து விட்டு, வேகமாக சென்று மஞ்சுவின் கையை பிடித்து நிறுத்தினான்.

“மனோஜ்!” மஞ்சுவின் கோபம் அந்த ஒரே அழைப்பில் தெளிவாக தெரிந்தது.

“மஞ்சு, என் வாழ்க்கையில நானா விரும்பி தேடி, எனக்கு கிடைச்ச ஒரே ஸ்பெஷல் பெர்சன் நீ தான். கடந்த சில நாளா நான் நானாகவே இல்லை. நடந்து முடிஞ்ச தவறுகளை சரி செய்ய எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும். வா, நாம பொறுமையா பேசலாம்.”

இப்போது மஞ்சுவின் பொறுமை பறந்துக் கொண்டிருந்தது!!! அவள் அழுத்தம் கொடுத்து

4 comments

• wonderful chapter bindu. Manoj muyarchi seithalum Manju irangi vnathathu than inge mukiyam. well done Manju.
• Wow so inimel only ice age manoj pole 😁😁😍😍 Fantastic flow Bindu ma'am 👏👏👏👏👏👏 very realistic :hatsoff:

Ellam okay but ammu oda cold war mattum not okay... Mr n Mrs M oda cold war kuda thangikitten but Ammu odadhu :no: pavam Manju...

Manju oda tolerance level was awesome :hatsoff: I really loved the way you have portrayed Mrs Manoj :yes: :yes: ippadi Illamal irundha manoj ena agi iruparo...Devuda :D

Manoj konjame konjam porumaiya move seithu irukalam but indha corporate politics enna venumnalum panum and it is hard to balance our emotions at times facepalm everything was expressed so elegantly Bindu ma'am 👏👏👏👏👏

Thanoda sondha muyarchi la than mele varuvenu sollum manoj and his efforts are appreciable :hatsoff: eppadiyo patch up agitanga :dance: Yeippe!!

Ana ninga ivangalai vachi senjitinga pa 😁😁
Parkalam nanbigal ena pana poranganu..

Thank you
• :-) nallapadiyaga ondru sernthuvittargal magizhchi :grin: eagerly waiting 4 next epi :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.