(Reading time: 12 - 23 minutes)
Inspector Then
Inspector Then

“வாட்?”

  

“சாரி சார்! தப்பு தான்!”

  

“ஈசியா சொல்லிட்டீங்க... இது மாதிரி எவிடென்ஸ்ல கை வைக்குறது தப்பு!”

 

“இரு வினோதன்.” என நண்பனை தடுத்த தேன், கிருஷ்ணனிடம்,

  

“நீங்க செய்தது சரி கிடையாது தான். ஆனாலும் ஏன் செயதீங்கன்னு புரிஞ்சுக்க முடியுது. என்ன கண்டுபிடிச்சீங்க அதை சொல்லுங்க!” எனக் கேட்டான்.

  

ரோஹினியோட ஸ்டமக் கான்டன்ட்ல Sodium dichloro-s-triazinetrione dehydrate எனும் கெமிகல் இருந்தது சார்.”

  

“என்ன அது???”

  

“அது பொதுவா பாசி வராமல் தடுக்க மீன் தொட்டி, ஸ்விமிங் பூல் போல இருக்க தண்ணில பயன்படுத்துற கெமிக்கல் சார்.”

  

“மை காட்!”

  

“யெஸ் சார்! இது அந்த பாழடைந்த கிணத்துல இருக்க சான்ஸ் இல்லை. ஸோ ரோஹினி இறந்தது அந்த வீட்டுல தான். இதைப் பத்தி உங்களை தவிர வேற யார் கிட்டேயும் நான் சொல்லலை சார். சொல்லி இருந்தாலும் ஒரு பிரோயோஜனமும் கிடையாதுன்னு தெரியும்.”

  

“நீங்க டிபார்ட்மென்ட்க்கு தெரியாமல் இந்த டெஸ்ட் செஞ்சது சரி இல்லை. பட் இட் ஹாஸ் டைரக்டட் அஸ் இன் தி கரக்ட் பாத். தேங்க்ஸ் கிருஷ்ணன்!”

  

**************

   

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.