“பூஜா!”
ரோஹித்தின் குரல் பூஜாவை நிஜ உலகிற்கு அழைத்துக் கொண்டு வந்தது.
மனைவியின் முகத்தை ஆராய்வதுப் போல பார்த்தான் ரோஹித். அவளின் மனநிலையை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
“எங்கேயாவது சும்மா அவுட்டிங் போவோமா பூஜா?” மனைவியின் மனதை திசை திருப்ப கேட்டான் ரோஹித்.
“ப்ச்... வேண்டாம் ரோஹித்...” என்று மறுத்தாள் பூஜா.
“ஏதாவது மூவி?”
“ப்ளீஸ் ரோஹித்! என்னை டிஸ்டர்ப் செய்யாதீங்க...” கொஞ்சம் கோபமாக சொன்ன பூஜா, உடனடியாக தன் தவறை உணர்ந்தவளாக,
“சாரி ரோஹித், நீங்க எவ்வளவு பொறுமையா இருக்கீங்க, எனக்காக எவ்வளவு யோசிக்குறீங்கன்னு எனக்கு புரியாம இல்லை... ஆனால் இன்னும் என்னால நடந்த அசம்பாவிதத்துல இருந்து வெளியே வரவே முடியலை... நம்பவே முடியலை...” என்று உடைந்த குரலில் சொல்லி, தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்...
எத்தனை கட்டுப்படுத்தியும் அவளின் விசும்பல் சத்தம் மெல்லிய ஒலியாக கேட்க தான் செய்தது...
ரோஹித் அவளருகே வந்து அவளின் தலையை மென்மையாக வருடினான்...
அண்ணன் மீது பூஜாவிற்கு எந்த அளவிற்கு பாசம் இருந்தது எனபது ரோஹித்திற்கு தெரியும். சதீஷ் பூஜாவிற்காகவே வாழ்ந்ததுப் போல தான் எப்போதும் எதையும் செய்வான்... அவன் அவனுக்காக என்று எதையும் செய்ததாக ரோஹித் அறிந்திருக்கவில்லை... வாழ்வை அனுபவிக்காமல் இளம் வயதிலேயே சதீஷிற்கு ஏற்பட்ட துர்மரணம் அனைவர் மனதையுமே கலங்கடிக்க தான் செய்யும்...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Idhuvellam theriyamal Nand's indha moments relish seithuttu irukanga 😍😍😍 interesting update ma'am 👏👏👏👏👏👏
Aduthu ena agumnu therinjika waiting....
Thank you.