காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பூர்வி ஒரு காபி ஷாப்பில் ஆறுமுகமும் மாதவியும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். மாதவி சிரித்து சிரித்து எதுவோ பேசிக் கொண்டிருந்தாள். ஆறுமுகம் அதை கவனித்தானோ இல்லையோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கிரீன் சிக்னல் வந்து விடவும் காரை அங்கிருந்து நகர்த்திய பூர்வி கண்ணில் பட்டதை வைத்து பெரிதாக அதிர்ந்துப் போய் விடவில்லை.
இது போன்ற உறவுகளில் இருப்பவர்கள் அத்தனை எளிதாக அதில் இருந்து வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதை பற்றி அவள் கேள்விப் பட்டிருக்கிறாள்.
அவளும் இப்போது வீட்டில் இருந்து வேலை செய்வதால் மாதவியை நம்புவதா வேண்டாமா என்ற கேள்வி எழவில்லை. சில நாட்கள் போகட்டும் மாதவியிடம் ஏதாவது காரணம் சொல்லி வேலையில் இருந்து நிறுத்தி விடலாம். அந்த முடிவை எடுத்தப் பிறகு அதிகம் யோசிக்க வேண்டிய காரணம் இருக்கவில்லை.
இருந்தாலும் ஒரு விஷயம் மனதை உறுத்தியது. ஏன் மாதவியும் ஆறுமுகமும் அங்கே சந்தித்துக் கொள்கிறார்கள்? மாதவியின் வீடு அவள் வசிக்கும் அதே கம்யூனிட்டியில் தான் இருக்கிறது. ஐந்து நிமிடத்தில் இருக்கும் வீட்டை விட்டு விட்டு பொது இடத்தில் சந்திக்க காரணம் ஏதாவது இருக்குமோ?
அந்த கேள்வியுடன் வீட்டிற்கு வந்தவள், லேப்டாப்பை திறந்ததும் அதை மறந்துப் போனாள். அவள் ப்ராஜக்ட் தொடர்பாக பல ஈமெயில்கள் வந்திருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக படித்து பதில் அனுப்பிய பிறகு தனக்காக சிம்பிளாக மதிய உணவு தயார் செய்துக் கொண்டாள்.
உணவுடன் அமர்ந்து அன்று நடந்தவற்றை மீண்டும் யோசித்தாள். நிகிதா பற்றி நினைப்பதே வெறுப்பை கொடுத்தது. அதனால் அவளை விட்டு விட்டு, தாரிணி பற்றி சிந்தித்தாள்.
தாரிணியிடம் அனில் பற்றிய சந்தேகத்தை சொன்னது சரியா தவறா என்ற சந்தேகம் இன்னமும் அவளுக்கு இருந்தது. அதை விட தாரிணி அதை அனிலிடம் சொல்லி விடும்