“வாவ் பூஜா! யூ லுக் கார்ஜஸ்!” என்றான் ரோஹித் விழிகளை விரித்து...
பூஜாவின் முகத்தில் வெட்கமும் மலர்ச்சியும் ஒன்றாக தோன்றியது...
“ஸ்டாப் இட் ரோஹித். தினம் தினம் இதையே சொல்றது உனக்கு வேலையா போச்சு.”
“நீ எப்போவும் அழகா இருக்க, நான் என்ன செய்றது? சரி, இன்னைக்கும் நாம லஞ்ச் டைம்ல மீட் செய்யலாம். சரியா?”
“ரோஹித், எனக்கு நிறைய வேலை இருக்கு. உனக்கே தெரியும் நான் இரண்டுப் பேர் வேலையை இப்போ செய்றேன்...”
ரோஹித் பதில் சொல்லும் முன் மனைவியை ஒரு வினாடி ஆராய்ந்தான்... எங்கே பூஜாவிடம் ஏற்பட்டிருக்கும் பாசிட்டிவ் மாற்றங்களுக்கு தடங்கல் வந்து விடுமோ என்ற பயம் அவனுக்கு...! அப்படி எதுவும் தெரியவில்லை.
“டேக் இட் ஸ்லோ டார்லிங்... ஏதாவது ஹெல்ப் வேணும்னா என் கிட்ட தயங்காம சொல்லு...” என்றான்.
ரோஹித்தின் மனதில் ஓடிய எண்ணத்தை பூஜாவால் எளிதாக ஊகிக்க முடிந்தது... அவளே அவனுக்காக தானே இப்படி மனதில் இருக்கும் வலியை மறைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறாள்!
“உங்க கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட கேட்பேன் ரோஹித். உங்க ஆசைப்படி லஞ்ச்க்கு போகலாம். நீங்க எனக்கு எத்தனை மணின்னு டெக்ஸ்ட் அனுப்புங்க.”
“ஓகே டார்லிங். நானே உன்னை வந்து பிக்கப் செய்துக்குறேன்.”
“சரி, நான் கிளம்புறேன் ரோஹித். ப்ரேக்ஃபாஸ்ட் ஆஃபீஸ்ல பார்த்துக்குறேன். அத்தை கிட்ட எனக்காக சொல்லுங்க ப்ளீஸ்...”
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
pavam nands evapum nands ke ella kastamu varuthu
eagerly
waiting 4 u r next epi
Thank you.