அன்று மாலையே ரிசப்ஷனும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. வைஷ்ணவி நினைத்ததை விட ரிசப்ஷன் அருமையாக சென்றது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று எல்லாமே நன்றாக திட்டமிடப் பட்டு இருந்தது. அனைத்தும் நன்றாகவும் இருந்தது.
வைஷ்ணவி மட்டுமில்லை அர்ஜுனும் உறவினர்களுக்கும், போட்டோவிற்கு, ஈ என இளித்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவனின் இளிப்பை பார்த்து வைஷ்ணவியும், ரியாவும் ரகசியமாக கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
முதலில் அவர்களின் சிரிப்பை பொருட்படுத்தாமல் இருந்த அர்ஜுன், அவர்கள் இரண்டுப் பேரும் அவனைப் பார்த்து சிரிப்பது தெரிந்துக் கொண்டதும் கோபம் எகிர முறைத்தான். அதற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல பெண்கள் இரண்டுப் பேரும் இன்னும் அதிகமாக சிரித்தார்கள். அர்ஜுனை வெறுப்பேற்ற கிடைத்த வாய்ப்பை அவர்கள் விட்டு விடுவார்களா என்ன!
ரிஷப்ஷன் முடிந்து அனைவரும் ஒன்றாக கிளம்பினார்கள். நேராக அனைவரும் அர்ஜுனின் பங்களாவை அடைந்ததும் வைஷ்ணவிக்கு பயத்தில் வயிற்றை புரட்டியது.
பக்கத்தில் இருந்த ரியாவின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
“எதுக்கு பயப்படுற வைஷ்? அர்ஜுன் அம்மா உன் பக்கம். எதுவா இருந்தாலும் ஒரு அலறு அலறினேன்னு வை அவங்களே அவனை காலி செய்திருவாங்க.” ரியா மெதுவாக வைஷ்ணவியின் காதில் சொன்னாள்.
ரியாவின் பேச்சு வைஷ்ணவிக்கு தைரியத்தைக் கொடுத்தது.
தடபுடலாக அவளை வீட்டுக்குள் வரவேற்று அழைத்து சென்றார்கள்.
“இந்தப் புடவையை மாத்திக்கோ வைஷ்ணவி,” என ராகவி சொன்னதற்கு மறு வார்த்தை