காதல் சில சமயங்களில் முரண்பட்டவர்களிடமும் தோன்றும் அது போல இங்கு இயற்கைக்கு முரண்பாடான புதிய உறவின் உருவாக்கத்தால் இருவருக்குள் உருவான காதல் அந்த புதிய உறவை ஏற்குமா அல்லது அந்த உறவால் இந்த காதல் காணாமல் போகுமா? என்பதே இக்கதையின் கருவாகும்.
சென்னை
பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் அந்த மருத்துவமனையின் டீன் 50 வயதை கடந்த ரமணி பரபரப்பாக இருந்தார், அவரின் முகத்தில் அப்படியொரு பதட்டம் பயம், சாகும் தருவாயில் உயிருக்காக போராடுபவரின் மனநிலைமையில் இருந்தார், அவரிடம் என்றுமே இருக்கும் கனிவான முகம், அமைதியான பார்வை, மென்மையான புன்னகை, இயல்பான நடவடிக்கை இவை அனைத்தும் மாறியிருந்தது, முரண்பட்ட நிலைமையில் காணப்பட்டார்,
முகத்தில் ஒரு அச்சம் பார்வையில் பயம், உடல் முழுவதும் வேர்த்து விறுவிறுத்து அந்த வராண்டாவில் வேக வேகமாக நடந்துக் கொண்டிருந்தார், அவர் நேராக சென்றது ஒரு வார்டு அறைக்குள்தான், அங்கிருந்த நர்ஸ் ரதி கூட மிகவும் பதட்டமாக இருந்தாள், ரமணி வரவும் பயத்தில் அவரிடம்
”டாக்டர் என்னை மன்னிச்சிடுங்க” என்றாள் அதைக்கேட்ட ரமணிக்கு அப்படியொரு கோபம் வந்தது.
கோபம் என்றால் என்னவென்று தெரியாதவருக்கு இன்று ரதியால் பெரிய தவறு நடக்கவும் அதை அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை, இருந்த கோபத்தில் ரதியின் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார். அந்த அடியின் வலியில் ரதி சற்று தடுமாறி தரையில் விழுந்தாள், கண்களில் கண்ணீர், தவறு செய்துவிட்டோம் என்பதால் எதிர்த்து பேசாமல் உடல் நடுங்கி ஒதுங்கி நின்றாள் ரதி.
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.