“பூர்வி! கோபமா இருப்பீங்களான்னு பார்த்தேன். உங்க முகத்தை பார்த்தா அப்படி இல்லைன்னு தெரியுது. ஹப்பா, ஐ ஆம் ரிலீவ்ட்!”
ராகுல் சொன்னதற்கு, பூர்வி பொதுப்படையாக புன்னகை புரிந்தாள்.
“ஒரு மாதிரி டையர்டா தெரியுறீங்க, பூர்வி. இன்னும் உடம்பு முழுசா சரி ஆகலைன்னு நினைக்குறேன்?”
“ஆமாம் ராகுல். ப்ளூ சரியாக எப்போவும் டூ, த்ரீ வீக்ஸ் ஆகும்.”
“ரெஸ்ட் எடுங்க. உங்களுக்கு ட்ராவல் இல்லை, இருந்தாலும் ரொம்ப சிரமப் படாமல் வேலையை ரிலாக்ஸ் செய்து செய்ங்க.”
“சரி ராகுல். நானே உங்க கிட்ட பேசனும்னு இருந்தேன்.”
“பூர்வி, நேத்து நடந்த இன்சிடன்ட் வச்சு நெகட்டிவா முடிவுக்கு வந்திராதீங்க. நாம இரண்டுப் பேரும் அட்ராக்டட் டு ஈச் அதர்ன்னு நமக்கே நல்லா தெரியுது. அதை இல்லைன்னு சொல்றது பொய்.”
பூர்வி உணர்ச்சிவசப்பட்டு பேசாமல், இவனிடம் எப்படி சொன்னால் சரியாக இருக்கும் என்று யோசித்து, பொறுமையாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசினாள்.
“ராகுல், நான் ஏன் லண்டன்ல இருந்து வந்தேன் தெரியுமா? என் கணவர் கிட்ட இருந்து பிரிந்து வந்தேன். பத்து வருஷ சொந்தம் அது.”
“நான் அப்படி நடக்க விட மாட்டேன் பூர்வி.”
“ராகுல், தயவு செய்து குறுக்கே பேசாம நான் சொல்றதை கேளுங்க.”
ராகுல் சம்மதம் என தலை அசைக்கும் வரை காத்திருந்து தொடர்ந்துப் பேசினாள் பூர்வி.