மொபைலை மேஜை மேலே தூக்கிப் போட்ட விவேக், அலுப்புடன் குஷன் நாற்காலியின் மேலே விழுந்தான்.
சமையலறையில் வேலையாக இருந்த ஹரிணிக்கு அந்த சத்தம் கேட்கவே, யார் என்று எட்டிப் பார்த்தாள். விவேக் என தெரிந்தது அவளின் முகம் மலர்ந்தது.
“என்ன விவேக்? வேலை அதிகமா?” என மகனிடம் விசாரித்தாள்.
”இன்னைக்கு ஒரு போர்ட்போலியோ டவுன் ஆச்சும்மா. கேள்வி மேல கேள்வி கேட்டு சித்ரவதை செஞ்சுட்டாங்க.” அலுப்புடன் பதில் சொன்னான் விவேக்.
“பணத்தை போட்டு இருக்கவங்க கேட்க தான் செய்வாங்க. அவங்க நிலைமை உனக்கு தெரியாதா என்ன?”
“இதுல இருக்க ரிஸ்க் தெரிஞ்சே தானே பணம் போடுறாங்க. லாபம் வரும் போது ஒருத்தரும் எதுவும் சொல்ல மாட்டேங்குறாங்க.”
“நீயா இருந்தாலும், நானா இருந்தாலும் கூட அதை தான் செய்வோம். வீட்டுக்கு வந்தப் பிறகும் என்ன வேலை பத்தின பேச்சு? நீயாவது அப்பா போல வேலை வேலைன்னு இல்லாம வாழ்க்கையை சரியா வாழ கத்துக்கோ. ஒரு விடியோ பார்த்து குழிப்பணியாரம் செஞ்சு இருக்கேன். சாப்பிட்டு பார்க்குறீயா?”
“நானே நொந்துப் போய் இருக்கேன். இப்போ உங்க எக்ச்பீரிமென்ட்க்கு என்னை கூப்புடுறீங்களே, நியாயமா அம்மா?”
“வாப்பா, வந்து சாப்பிட்டு பாரு! உன்னை தவிர வேற யாரை கூப்பிட? அக்ஷராவும், அந்தப் பையனும் காம்படிஷனுக்கு போயிருக்காங்க.”
விவேக் சோர்வுடன் எழுந்துப் போனான்.
Yash has written more than 1 Tamil series in Chillzee and One Novel in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.