“இப்போ இருக்குறதை விட பேடா???”
“ஹேய்...!”
மஞ்சுவும், மனோஜும் கார் வரை சென்று சரவணன், அமுதாவை வழி அனுப்பி வைத்தார்கள்...!
“வீட்டுக்கு போனதும் பேசு அமுதா...”
“சரி... நீயும் டைம் கிடைக்கும் போது எல்லாம் பேசு மஞ்சு...”
“பேசுறேன்...” என்று சொன்ன மஞ்சு புன்னகைக்கவும், மனோஜ் மஞ்சுவின் அருகே உரசியப்படி வந்து நின்றான்...
தோழியை கேலியாகப் பார்த்து கண் சிமிட்டிய அமுதா,
“சீக்கிரமே குட் நியூஸ் எதிர்பார்க்கிறேன், மனோஜ்...” என்றும் சொல்லி விட்டே சென்றாள்..
மீண்டும் வீட்டுக்குள் வந்தப் பிறகும் மஞ்சுவின் இதழ்களில் அந்த புன்னகை இருந்துக் கொண்டே தான் இருந்தது...
கதவை தாழிட்ட மனோஜ் அதே கையோடு மனைவியை இழுத்து இறுக்க அணைத்துக் கொண்டான்...
“pbs... நீ என் pbs... நீ எனக்கு தான்...”
மஞ்சு சிரித்தாள்...
“மனோஜ், மனோஜ்! அவ என் பிரென்ட் தான்!!!”
“அப்போ கூட...” என்றான் மனோஜ் பொறாமை மின்ன...