Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Nenchil Payuthe minalaa

“நான் என்ன செய்ய ராகவி? வைஷ் என் கிட்ட பேசுறதே இல்லை. நானா பேசினா ஒரு வார்த்தை இரண்டு வார்த்தைல பதில் சொல்றா. இந்த கல்யாணமே தப்பான ஐடியான்னு எனக்கு இப்போ தோணுது.”

  

ஹேமா இயலாமையுடன் பேச ராகவியின் முகம் சிறுத்துப் போனது.

  

ரமேஷ் இருவரையும் தேற்ற முயன்றார்.

  

“நீங்க இரண்டுப் பேரும் அழுது வடியாதீங்க. நான் வைஷ் கிட்ட பேசுறேன்.அர்ஜுன், வைஷ்ணவி இரண்டுப் பேரும் பிடிக்கலை பிடிக்கலைன்னு வாயால சொன்னாலும் கல்யாணத்தை நிறுத்த எந்த முயற்சியுமே செய்யலை, அதுவே ஒரு நல்ல அறிகுறி. அவங்க நாம சொன்னதுக்காக கல்யாணம் செய்துக் கிட்டாங்கன்னு எடுத்துக்கிட்டா இப்போவும் நாம சொல்றதைக் கேட்பாங்க. நான் வைஷ் கிட்ட பேசுறேன். ராகவி, நீ அர்ஜுன் கிட்ட திரும்ப பேசு.”

  

ஹேமா ஒன்றும் சொல்லவில்லை. ராகவி ரமேஷ் சொன்னதை ஏற்றுக் கொண்டாள்.

  

ஜாக்கிங் உடை அணிந்திருந்த வைஷ்ணவி ரமேஷை பார்வையால் தேடிக் கொண்டே மெதுவாக ஜாக் செய்யத் தொடங்கினாள். தினமும் பார்க்கில் ஜாக் செய்வது அவளுடைய பழக்கங்களில் ஒன்று.

  

சில நிமிடங்களில் ரமேஷ் மூச்சு வாங்க அவளுடன் வந்து இணைந்துக் கொண்டார்.

  

“சாரி டாடி, நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சேன்.” வைஷ்ணவி வேகத்தை குறைத்து சொன்னாள்.

  

“தினம் தினம் நான் ஜாக்கிங் போவேன்னு உனக்கு தெரியாதா?”

  

“இந்த பார்க் வர மாட்டீங்களே, நம்ம வீடு பக்கத்துல இருக்க பார்க்குக்கு தானே போவீங்க?”

  

About the Author

Sweet Princess

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 08 - Sweet Princessmadhumathi9 2022-07-14 17:54
facepalm good epi. :-) eagerly awaiting for next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top