“என்ன சிரிக்குற???”
“நம்மோட மெகா சண்டைக்கு அப்புறம் நீங்க ரொம்ப செல்லம் கொஞ்சுறீங்களே... அதுக்கு தான்...”
“ஹேய் எதுக்கு எப்போ பாரு அதையே சொல்லிட்டு இருக்க... அது நடந்து எவ்வளோ மாசம் ஆச்சு...”
“ஹ்ம்ம்...”
“சாப்பிட்டு ரெஸ்ட் எடு pbs...”
“அதை தானே ரொம்ப நாளா செஞ்சுட்டே இருக்கேன்...”
“எங்கே ரெஸ்ட் எடுக்குற?? நேத்து வீடெல்லாம் கிளீன் செய்து வச்சிருந்த... வேலை செய்யாதேன்னு சொல்றேன்ல??”
“நீங்க அபப்டி சொல்றீங்க... அம்மா, அத்தை, ஏன் வினோ கூட வேலை செய் செய்ன்னு எப்போவும் அட்வைஸ் செய்றாங்க...”
மனோஜ் குழப்பத்துடன் யோசித்தான்...
மஞ்சுவை பூ போல பார்த்துக் கொள்ள விரும்பினான்... ஆனால் பெரியவர்கள் சொல்கிறார்கள் என்றால் காரணம் இருக்கலாம்...
ஆனாலும் மஞ்சுவை இந்த நிலையில் வேலை செய்ய சொல்வது சரி தானா??
மனோஜ் யோசித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் இருந்த மஞ்சு,