“மனோஜ், நீங்க அதிகமா யோசிக்காதீங்க... நான் பார்த்துக்குறேன்... நீங்க வேலையில கான்சன்ட்ரெட் செய்ங்க...” என்றாள் அவனை தேற்றுவதுப் போல...
“பத்திரமா இரு pbs... ஐஸ்க்ரீம் சாக்லேட் எல்லாம் சாப்பிடாதே...”
“கமான் மனோஜ்...” என்ற மஞ்சுவின் பேச்சின் கூடவே சிரிப்பும் கலந்து ஒலித்தது...
அவள் அப்படி சிரிப்பதை கேட்க மனோஜிற்கு நன்றாக தான இருந்தது... ஆனாலும் மனசுக்குள் கலக்கம் ஹுஹும் திகிலும் இருந்தது...
மஞ்சுவிற்கு இது ஏழாவது மாதம்... அவள் தனியாக இருக்கிறாளே...
“மனோஜ்!” கொஞ்சம் சத்தமாக அழைத்தாள் மஞ்சு!
“சொல்லு pbs...”
“நான் நல்லா இருக்கேன்... ப்ளீஸ் ஓவரா கவலைப் படாம போனை வச்சுட்டு வேலையைப் பாருங்க...”
“பத்திரம் pbs... நான் சீக்கிரம் வரப் பார்க்கிறேன்...”
“சரி... பை மனோஜ்...”
மஞ்சு அழைப்பை துண்டிக்கும் வரை காத்திருந்து பிறகே போனை பாக்கெட்டினுள் வைத்தான் மனோஜ்...
திரும்பிப் பார்த்தால் அவனை தவிர அனைவரும் மீண்டும் அவரவர் இடத்தில் வந்து அமர்ந்திருந்தார்கள்...
அதற்கு மேல் தாமதிக்க முடியாமல் மனோஜும் அவனின் இடத்தில வந்து அமர்ந்தான்...