“அமுதா, ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருக்குமா??? அஃபிஷியல் இல்லை... பர்சனலா பேசனும்...” என்றான்.
“ஷுயர் மனோஜ்... நானே ஒரு டூ மினிட்ஸ்ல உங்களை தனியா கூப்பிடுறேன்...” என்றாள் அமுதா.
அவளின் பதிலில் இருந்த ஆச்சர்யம் புரிந்தாலும், அப்போதைக்கு நன்றி மட்டும் சொல்லி வைத்தான் மனோஜ்.
சொன்னதுப் போல சில நிமிடங்களில் மனோஜை போனில் அழைத்தாள் அமுதா.
“சொல்லுங்க மனோஜ்? என்ன??” என்றாள் அமுதா ஆர்வத்துடன்.
“ஒரு ஹெல்ப் கேட்க தான் சொன்னேன் அமுதா... மஞ்சு ஃபைனல் ட்ரைமெஸ்டர்ல இருக்கா... நான் அவக் கூட இருந்தாலும், அவக் கூட யாராவது லேடீஸ் துணை இருந்தா நல்லா இருக்கும்னு எனக்கு இப்போ தோணுது... இது சரியா இருக்குமான்னு தெரியலை... மஞ்சு... ஹ்ம்ம்...”
மனோஜ் தயங்க, மறுபக்கம் இருந்த அமுதாவிற்கு சிரிப்பு வந்தது... அந்த சிரிப்பை மனோஜிற்கு தெரியாது அடக்கி, அவளே,
“மஞ்சு எங்க வீட்டுல வந்து இருக்கட்டும் மனோஜ்... அதை தான் கேட்க வந்தீங்க???” என்றாள்.
“ஆமாம்... இப்போ உடனே சொல்லனும்னு இல்லை அமுதா... சரா கிட்டேயும் பேசிட்டு சொன்னா போதும்...”
“அவர் எதுவும் சொல்ல மாட்டார் மனோஜ்... மஞ்சு எங்க இரண்டுப் பேருக்குமே நல்ல ஃபிரென்ட்... இதுக் கூட செய்ய மாட்டோமா??”
“ஆர் யூ ஷுயர்???”