ஒரு சில வினாடிகள் சென்ற பிறகும் ரோஹித் பக்கம் இருந்து சத்தம் வராமல் இருக்கவே அவன் அவளின் மெசெஜுகளில் அப்படி என்ன படிக்கிறான் என்றுக் கேட்க கேலி சிரிப்புடன் அவன் நின்றிருந்தப் பக்கம் பார்த்தாள் பூஜா.
அவள் எதிர்பார்த்திருந்ததுப் போலவே ரோஹித்தின் விழிகள் மொபைல் மீது தான் கம் போட்டது போல ஒட்டிக் கொண்டிருந்தது! ஆனால் அவன் முகத்தில் பிரதிபலித்த உணர்வு தான் அவளை குழப்பியது.
அதிர்ந்துப் போனவனைப் போல மொபைலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்!
“ரோஹித்???”
“ம்ம்ம்...” என்று அவன் பெயர் அழைக்கப் பட்டதற்கு ‘ரிஃப்லக்ஸ் ஆக்ஷன்’ ஆக பதில் சொன்னானே தவிர பூஜா அழைத்தாள் என்பதை அவன் உணர்ந்ததாகவும் தெரியவில்லை!
“என்ன ரோஹித்?” பூஜா எழுந்து கணவன் அருகே வந்தாள்.
பூஜா ரோஹித்தின் தோளைப் பற்றவும், அப்போது தான் உணர்வு வந்தவனாக கைகளில் வைத்து பார்த்துக் கொண்டிருந்த போனை பூஜாவிற்கு தெரியாததுப் போல கையை இறக்கி மறைத்தான் ரோஹித்!
“என்ன செய்றீங்க??? அப்படி என்ன எனக்குத் தெரியக் கூடாது??”
ரோஹித்திற்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது! அவனுக்கு பூஜாவைப் பற்றி தெரியும்! இந்நேரம் ஜோக் என்றோ, ஃபார்வர்ட் செய்யப் பட்ட மெசேஜ் படித்தேன் என்றோ சொல்லி இருந்தால் பூஜா கண்டுக் கொள்ளாமல் இருந்திருப்பாள்... அவன் மறைக்க முயன்றது அவளின் ஆர்வத்தை தூண்டி விட்டிருக்கும்...
ரோஹித் நினைத்தது உண்மை என்பதுப் போல பூஜா ரோஹித்தின் கையிலிருந்த அவளின் போனை பிடுங்கி எடுத்தாள்.
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Wish pooja puts in some effort to find the mystery.... engalai ellam invite panama ippadi marriage mudichitinga illa
adhukula indha frnds comment pana arambichitanga 👊👊Sikrama SK-va aroda band's kuda Serthu vachidunga 😍😍
Waiting to read the next update.
Thank you.