விவேக் வருவதை பார்த்து விட்டு சான்விக்கு விடியோ கால் செய்தாள் ஹரிணி. சில ரிங்குகளுக்குப் பிறகு சான்வி போனில் தோன்றினாள்.
“சான்வி, எப்படி இருக்க?? உன்னோட பேசி இரண்டு மூணு நாள் ஆச்சு!” ஹரிணியே சாதாரணமாக பேச்சைத் தொடங்கினாள்.
ஸ்க்ரீனில் ஹரிணி பின்னால் தெரிந்த விவேக்கின் உருவம் சான்வியின் கண்ணிலும் பட்டது. பக்கத்திலேயே இருந்தாலும் விவேக் இவர்கள் பக்கம் பார்த்ததாகவும் தெரியவில்லை, என்ன பேசுகிறார்கள் என்ற ஆர்வம் காட்டியதாகவும் தெரியவில்லை. இதை மனதில் குறித்து வைத்துக் கொண்டாள்.
“ஸ்கூல்ல வேலை அதிகமா இருந்தது, ஆன்ட்டி. நீங்க நல்லா இருக்கீங்களா? ஆதி, அக்ஷரா ப்ராஜக்ட் எப்படி போகுது?”
“உன் தம்பியும் அக்ஷராவும் பில்லியன் டாலர் கம்பெனி மாதிரி பயங்கரமா விவாதம் செஞ்சுட்டே இருக்காங்க. இன்னைக்கு சம்பிட் செய்தாகனும். இன்னும் அவங்க முடிவு செய்ததா தெரியலை. நான் இப்போ தான் பேசிட்டு வந்தேன். ஒரே முடிவா எடுக்க சொன்னேன்.”
“நானும் அதே தான் சொன்னேன்.” என்றாள் சான்வி அக்கறையோடு.
“கடைசி நிமிஷத்துல எதுக்கு மாத்தனும்னு நினைக்குறாங்கன்னு தெரியலை. இரண்டுப் பேரும் புத்திசாலி பசங்க, சரியா தான் செய்வாங்க.”
விவேக் பலத்தடவை சான்விக்காக ஆதி – அக்ஷராவிடம் விபரம் சேகரித்து சொல்லி இருக்கிறான். அவனுமே அவர்களுக்கு பல ஆலோசனைகளும் கொடுத்திருக்கிறான். இப்போது அவனிடம் பேசுவதாக இருந்திருந்தால் சான்வி கண்டிப்புடன் பேசி ஆதி, அக்ஷ்ராவை சரியான பாதைக்கு திருப்ப சொல்லி இருப்பாள். ஹரிணியிடம் அப்படி அவளால் கேட்க இயலவில்லை.
“அப்படி தான் நானும் நினைக்கிறேன்.” என ஹரிணிக்கு பதில் சொல்லும் போது விவேக்கை
Yash has written more than 1 Tamil series in Chillzee and One Novel in Chillzee KiMo.