(Reading time: 7 - 13 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

  

“நீ எதுக்கு இப்படி ரியாக்ட் செய்ற? உன் ஐடியாவை சம்பிட் செய்றோம், சந்தோஷப் படு!”

  

“இது win செய்ற அளவுக்கு பெரிய ஐடியா கிடையாது ஆதி. உன்னுடையது நல்ல ஸ்டேபிள் ஐடியா. நீ ஆல்மொஸ்ட் எல்லாத்தையும் யோசிச்சு ரெடியா வச்சிருந்த. நாம முதல்ல சம்பிட் செய்ததே கரக்ட்டா இருந்துது. இப்போ இருக்க பெரிய ஹாட் ட்ரேன்டிங் சப்ஜெக்ட், அக்ரிகல்ச்சர். அங்கே நாம டெக்னாலஜி கொண்டுப் போனா அருமையா இருக்கும். நீ எதுக்கு அடம் பிடிக்குற?”

  

“எனக்கு அதை ஷேர் செய்ற ஐடியா கம்பார்டபிலா இல்லை அக்ஷரா. நமக்கு டைம் இல்லை. டெட்லைன் வர பத்து நிமிஷம் தான் இருக்கு. இதையே சம்பிட் செய்திடலாம்.”

  

அக்ஷரா மனமே இல்லாது தலை அசைத்தாள்.

  

ஆதி அதை சம்மதமாக எடுத்துக் கொண்டு ஏற்கனவே திறந்திருந்த கான்டஸ்ட் வெப்சைட்டில் அவன் சேர்த்திருந்த விபரங்களை மேலோட்டமாக சரி பார்த்து சம்பிட் செய்தான்.

  

“இட்ஸ் டன் அக்ஷரா. என்ன ஆகுதுன்னு பார்ப்போம்.”

  

அக்ஷரா மகிழ்ச்சியே இல்லாமல் தலை ஆட்டினாள்.

  

“நான் சும்மா ஒரு சின்ன வாக் போயிட்டு வரேன் அக்ஷரா. என் அட்ரினலினை கொஞ்சம் கண்ட்ரோல் செய்யனும்.”

  

ஆதி கிளம்பி போன பிறகு அக்ஷரா லேப்டாப் ஸ்க்ரீனை சில வினாடிகள் பார்த்தாள். அவளின் கண்கள் அதில் ஓரமாக தெரிந்த நேரத்தின் மீது சென்றது. இன்னும் ஏழு நிமிடங்கள் இருக்கிறது!

  

வேகமாக முடிவு எடுத்தவள், ஆதி சம்பிட் செய்திருந்த காண்டஸ்ட் பேஜில் இருந்த எடிட் ஆப்ஷனை க்ளிக் செய்தாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.