(Reading time: 6 - 12 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

ஜாக்பாட் ப்ரைஸா எங்க லீடர் ஜாக்ருதியை மீட் செய்யப் போறது யாருன்னு ப்ரேசெண்டேஷன் முடிச்சதும் சொல்றேன். இப்போ வின்னர்ஸ் லிஸ்ட்.
ஆண்ட்ரூ ஸ்டவினாச்சி சம்பிட் செய்த பையோ டீக்ரேடிபில் ரோபோடிக் செயற்கை உடல் உறுப்புகள் மற்றும் அவற்றின் கன்ட்ரோல்.”

  

கைத் தட்டல்கள் காதை கிழித்தது.

  

ஆதித்யா கைகளை பிசைந்துக் கொண்டு நின்றான். அக்ஷரா உதடுகளை கடித்துக் கொண்டு அடுத்த அணி அறிவிப்புக்கு காத்திருந்தாள்.

  

கைதட்டல் சத்தம் அடங்கியதும் அறிவிப்பாளர் பேச்சை தொடர்ந்தார்.

  

“அடுத்து, டீம் ஸ்டான்போர்ட் சம்பிட் செய்த வர்ச்சுவல் ஹோலோக்ராப்பி!”

  

“ஹேய்!” “ஹேய்” என்ற கோஷங்களுக்கு நடுவே மீண்டும் கைதட்டல் ஓசையில் அரங்கம் அதிர்ந்தது.

  

அக்ஷரா பதற்றத்தை அடக்க இயலாமல் உள்ளங்கைகளை தேய்த்த படி நின்றிருந்தாள்.

  

ஆதித்யா சிலைப் போல அறிவிப்பாளரையே பார்த்துக் கொண்டு நின்றான். அவர்கள் சம்பிட் செய்த ப்ராஜக்ட்டும் நல்ல ப்ராஜக்ட் தான். அதை தேர்வு செய்திருப்பார்களா?

  

“வின்னர்ஸ் லிஸ்ட்ல இருக்க லாஸ்ட் அண்ட் பைனல் ப்ராஜக்ட், டீம் அக்ஷயா சம்பிட் செய்த காஸ்ட் எபெக்டிவ் பார்மிங்!”

  

இந்த முறையும் கைதட்டல்கள் ஒலித்தது.

  

அக்ஷரா துள்ளிக் குதித்துக் கொண்டே, “எஸ், எஸ்,” என்று கத்தினாள்!

  

ஆதியும் கூட முதல் சில வினாடிகள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினான். அறிவிப்பாளர் சொன்ன ப்ராஜக்ட் பெயர் தாமதமாகவே அவனின் கருத்தில் பட்டது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.