காஸ்ட் எபெக்டிவ் பார்மிங் என்று தானே சொன்னார்?
“ஆதி, வீ டிட் இட்!” அக்ஷரா சந்தோஷ மிகுதியில் ஆதியைக் கட்டிக் கொண்டாள்.
பதில் சொல்லாமல் அவளை நேராக நிறுத்தி கேள்வி கேட்டான் ஆதித்யா.
“இந்த ப்ராஜக்ட்டை நாம சம்பிட் செய்யலையே அக்ஷரா? இது எப்படி வின்னர்ஸ் லிஸ்ட்ல வந்துச்சு?”
அக்ஷரா மிடறு விழுங்கினாள்.
“நான் தான் மாத்தி சம்பிட் செய்தேன், ஆதி.”
“ஹொவ் டேர் யூ? நாம டீமா வொர்க் செய்தோம். நீ எப்படி என்னைக் கேட்காமல் சம்பிட் செய்த?”
“அதனால என்ன ஆதி? உன் ப்ராஜக்ட் செலக்ட் ஆயிடுச்சு. நாம பைனல் ரவுன்ட் போயிட்டோம். இப்போ ப்ரேசெண்டேஷன் பத்தி பேசலாம். அது தான் புத்திசாலித்தனம்.”
ஆதி ஏமாற்றம் தெரிந்த முகத்துடன் தலையை ஆட்டினான்.
“இல்லை அக்ஷரா. இதை என்னால ஏத்துக்க முடியலை.”
“ஆதி? ஐ ஆம் சாரி. உன் ப்ராஜக்ட் ஐடியா அருமை. நீ எல்லாத்தையும் சரியா பிளானும் செய்திருந்த.”
“இருந்தாலும் நாம சம்பிட் செய்ய முடிவெடுத்தது உன்னோட டாபிக்கை தான்.”
“அதை சம்பிட் செய்திருந்தா நாம பைனல் ரவுண்ட்க்கு கட்டாயம் போயிருக்க மாட்டோம்.