(Reading time: 9 - 17 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 46 - பிந்து வினோத்

WELCOME TO VIRGINIA

  

Virginia is for L❤️vers

  

என்றப் பெயர் பலகை விர்ஜினியா வந்துவிட்டதை காரில் பயணமாகிக் கொண்டிருந்த மனோஜ், மஞ்சுவிற்கு சொன்னது.

  

“Virginia is for Lovers!!! அமுதாவும் சராவும் சரியான ஸ்டேட் செலக்ட் செய்திருக்காங்க!” என்றாள் மஞ்சு சிரித்துக் கொண்டே.

  

“தப்பு pbs! நாம ஒருவேளை விர்ஜினியா செலக்ட் செய்திருந்தா வேணா சரியா இருக்கும்... சரவணன், அமுதாவுக்கு ஹுஹும்...”

  

“சும்மா சொல்லாதீங்க. அவங்க தான் லவ் செஞ்சு கல்யாணம் செய்துக்கிட்டவங்க...”

  

“அதனால என்ன, நாம கல்யாணம் செய்துட்டு லவ் செய்றோம்...”

  

“ப்ச்... ப்ச்... உங்க கிட்ட அர்க்யூ செய்றது வேஸ்ட் ஆஃப் டைம்...” அலுத்துக் கொள்வதுப் போல சொன்னாலும், மஞ்சு உண்மையில் சிரித்துக் கொண்டிருந்தாள்!

  

அவளை ஒரு நேனோ வினாடி பார்த்து விட்டு மீண்டும் சாலையில் கவனத்தை வைத்த மனோஜ் மனம் பப்ரபரத்துக் கொண்டிருந்தது...

  

கிட்டத்தட்ட 750 மைல் பயணம்... சாதாரண நேரத்தில் தோராயமாக பன்னிரண்டு மணி நேரம் எடுத்திருக்கும்... ஆனால் மனோஜ் பொறுமையாக காரை செலுத்திக் கொண்டிருந்தான்... பயணத்தினால் மஞ்சுவிற்கு சிறிய அளவில் கூட தொந்தரவு நேர்ந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்... அவளிடம் சோர்வோ, அலுப்போ சிறிதளவு தெரிந்தால் கூட ரெஸ்ட் ஏரியாவில் நிறுத்தி ஓய்வெடுத்து பிறகே காரை கிளப்பினான்...

  

இதை எல்லாம் எதற்காக செய்கிறான் என்று மனோஜ் சொல்லவில்லை என்றாலும்

3 comments

  • Manoj parka pavam tan but he is too sweet 😍😍 Lovely update Bindu ma'am 👏👏👏👏👏 Baby vandhu tan appa vai back to form ku kondu vara mudiyum pole 😁😁😁 Look forward for tht moment.<br />Manju oda reaction kagavum waiting.<br /><br />Thank you .

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.