வைஷ்ணவி கண் விழித்தப் போது முதலில் எங்கே இருக்கிறாள் என்பதே புரியாமல் விழித்தாள். மெல்ல மெல்ல அறிவு கண் விழித்துக் கொள்ளவும், அர்ஜுன் ரூமிற்கு தூங்க வந்தது நினைவுக்கு வந்தது.
கட்டிலின் மறுபக்கம் பார்த்தாள். அங்கே இப்போதும் காலியாக இருந்தது. ஒருவரும் அங்கே தூங்காததன் அறிகுறியாக படுக்கை விரிப்பு சீராக முன் தினம் பார்த்ததுப் போலவே இருந்தது.
அர்ஜுன் தூங்காமல் எங்கே போனான் என்ற கேள்வியுடனே எழுந்து அமர்ந்தாள் வைஷ்ணவி.
சரி அவன் எங்கேயோ போய் தொலையட்டும் என முடிவு செய்து சோம்பலுடன் கைகளை விரித்தாள். ஜன்னல் திரைகளை விலக்கியதும் தெரிந்த காலை சூரியனும், வீட்டைச் சுற்றி இருந்த அழகான பனி படர்ந்த புல்வெளியும் அவளின் மனதை கவர்ந்தது.
அன்றைய நாளை சோம்பலாக தொடங்க விரும்பாமல் ஜாகிங் செல்ல முடிவு செய்தாள்.
பல் துலக்கி, உடை மாற்றி வீட்டை சுற்றி நடக்க அமைக்க பட்டு இருந்த நடைப்பாதையில் மெல்ல ஓடத் தொடங்கினாள்.
அவளுள்ளே புத்துணர்ச்சி தோன்றியது.
அரை மணி நேரம் தொடர்ந்து ஜாகிங் செய்து வீட்டிற்கு திரும்பியவள், அர்ஜுனின் குரல் கேட்டு நின்றாள்.
“பினாத்தாதே! டின்னர் அது இது எல்லாம் அம்மாக்காக. அவளும் அப்படி அவ அப்பாக்காக தான் செய்றா.”
வைஷ்ணவி தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள்.
அர்ஜுன் மொபைலில் சத்தமாக பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
But y long time break etuthutiga
Enime continue ah epi potutuga pa
Good luck for ever