Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 10 - 19 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
En mel aasai illaiya
Pin It
Author: Navya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 39 - நவ்யா

மேஷ், நான் நசீம் கிட்ட பேசிட்டேன். எல்லாம் ப்ளான் செய்திருக்க மாதிரி போனா நீ ஆசைப்பட்ட மாதிரியே மல்டி க்ரோர் ப்ராஜக்ட் மேனேஜ் செய்ற வாய்ப்பு உனக்கு கிடைக்கப் போகுது!” உமேஷின் மேனேஜர் சுகுமார் நட்புடன் அவனின் முதுகை தட்டிக் கொண்டே சொன்னார்.

  

அவர்கள் பக்கத்தில் இருந்த உமேஷின் நண்பர்கள் பாலா, குமாரி தொடங்கி மற்றவர்கள் அனைவரும் “சூப்பர்!”, “கங்க்ராட்ஸ்”, “கலக்குறடா” என அவரவர் பாணியில் உமேஷை வாழ்த்தினார்கள்.

  

“தேங்க்ஸ் சுகுமார்!” என உமேஷ் சொன்னப்போது அவனின் மகிழ்ச்சியும் தெளிவாக தெரிந்தது.

  

“இப்போதைக்கு இது அன்அபிஷியல் நியூஸ் தான் உமேஷ். அதனால அமைதியாவே இரு. ஒரு மாசத்துக்குள்ளே அபிஷியல் அனவுன்ஸ்மென்ட் வந்திரும்ன்னு எதிர்பார்க்கிறேன். இந்த கெட் டு கெதர்ல என்னால சொல்லாம இருக்க முடியலை,” என சுகுமார் மேலும் விபரங்கள் சொன்னார்.

  

உமேஷின் அலுவலகத்தில் உடன் பணி புரியும் அமித்திற்கு சமீபத்தில் திருமணம் நடந்திருந்தது. திருமண விழா வட இந்தியாவில் நடைப்பெற்றிருந்ததால் அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்களுக்காக தனியாக இந்த விழாவை சென்னையில் அமித் ஏற்பாடு செய்திருந்தான்.

  

உமேஷ், பாலா, குமாரி போன்ற திருமணமாகாதவர்கள் தனியாளாக வந்திருந்தார்கள். சுகுமார் போன்ற திருமணமானவர்கள் குடும்பத்தினரோடு வந்திருந்தார்கள்.

  

“உமேஷோட ஹார்ட் வொர்க்குக்கு கிடைச்ச பரிசு சுகுமார் இது,” என குமாரி நண்பனை புகழ்ந்தாள்.

  

“ஹார்ட் வொர்க் மட்டும் இருந்தா போதாது குமாரி. லக்கும் வேணும். உமேஷ் பக்கம் எப்போ லேடி லக் வந்தாளோ, அப்போ இருந்தே அவனுக்கு அதிர்ஷ்டம் கொட்டுது!” என பாலா நண்பனை கேலி செய்தான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Navya

Navya

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 39 - நவ்யாmadhumathi9 2022-10-01 18:27
:Q: ennavaga irukkum :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top