Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Nenchil Payuthe minalaa
Pin It

தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 11 - Sweet Princess

  

ர்ஜுன் அன்றைய நாள் முழுவதையும் தன் ஆபீஸ் ரூமில் செலவிட்டான். அப்பாவைப் போல அரசியலில் ஈடுப்பட அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை. அவனுக்கு பிடித்தது போல பிஸ்னஸ் தொடங்க ராகவி அனுமதிக் கொடுத்திருந்தாள். அதனால் அர்ஜுன் அவனாகவே தன்னுடைய கிப்ட் கார்ட் நிறுவனத்தை தொடங்கி இருந்தான்.

  

பல பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் அவனின் கம்பெனி ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்தது. சிறிய அளவில் இருக்கும் இந்த ஒப்பந்தங்களை பெரிய அளவிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இப்போது இறங்கி இருந்தான்.

  

ஈமெயில்கள் படித்து பதில் அனுப்புவதில் தொடங்கி, வேலை போய்க் கொண்டே இருந்தது.

  

ஒருவழியாக அவன் போதும் என்று முடிவு செய்து எழுந்தப் போது இரவாகி இருந்தது.

  

பசியை பற்றி கூட யோசிக்காது வேலை செய்திருக்கிறான். இப்போது நினைத்ததும் பசித்தது.

  

டைனிங் அறைக்கு சென்றான். வீடு நிசப்தமாக இருந்தது. ராகவி வெளியூர் கோவிலுக்கு சென்றிருந்தாள். வேலையாட்கள் வேலை முடித்து சென்று விட்டார்கள் போலும்! பெருமூச்சுடன் அவனே உணவை தட்டில் வைத்து சாப்பிடத் தொடங்கினான்.

  

மாடியில் யாரோ நடக்கும் சத்தமும் தெளிவில்லாத பேச்சு சத்தமும் கேட்டது. வைஷ்ணவி அங்கே இருப்பது அவனுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது.

  

காலையில் அவள் விழித்த விதத்தை நினைத்து தானாக சிரித்துக் கொண்டான்.

  

முன் தினம் போல இன்றும் வேறு ரூமில் தூங்கலாமா என்று யோசித்து வேண்டாமென்று உடனே முடிவு செய்துக் கொண்டான்.

  

மளமள என சாப்பிட்டு முடித்தவன், தட்டை மேஜை மேலேயே வைத்து விட்டு கை கழுவி விட்டு இரண்டு மூன்று படிகளாக ஏறி தன் அறையை அடைந்தான்.

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Sweet Princess

Add comment

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

KEK

EUUTT

VEE

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top