தன் படுக்கை அறைக்குள் செல்ல இத்தனை நாட்கள் அவன் இவ்வளவு ஆர்வம் காட்டியதே இல்லை. சாதாரணமாக திறப்பது போல கதவை திறந்தவனை, “ஏய்” என கிரீச் குரல் வரவேற்றது.
வைஷ்ணவி இரவு உடைக்கு மாறிக் கொண்டிருந்தாள்! அர்ஜுனின் கண்கள் விழிகளை விட்டு தெறித்து வந்து விடுவதைப் போல அவளையே பார்த்தது.
வேக வேகமாக உடையை இழுத்து விட்ட வைஷ்ணவி, “கதவை தட்டிட்டு வரதுக்கு என்ன?” என எரிந்து விழுந்தாள்.
அவளின் பேச்சில் இயல்புக்கு திரும்பினான் அர்ஜுன். வேண்டும் என்றே ஈ என இளித்தவன், “என் வீட்டுல நான் எதுக்கு கதவை தட்டனும்!” என்றான்.
அதற்கு மேல் அவளுடன் பேசிக் கொண்டிருக்காமல் தன் உடைகள் இருந்த வார்ட்ரோப் பக்கம் சென்றான். விளக்கின் வெளிச்சத்தினால் வைஷ்ணவியின் பிம்பம் வார்ட்ரோப் பக்கத்தில் இருந்த ஜன்னலில் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.
அவள் அவனை பார்த்துக் கொண்டு இருப்பது தெரியவும், சிந்திக்க நொடியும் எடுக்காது தன் டிஷர்ட்டை கழற்றி எடுத்தான்.
டோன் செய்யப்பட்ட தன் முதுகு, அழகான வடிவம் கொண்ட தன் தோள்கள், உடற்பயிற்சியின் பலனாக உருண்டு திரண்டிருந்த கைகள் என அனைத்தும் அவளுக்கு தெரியும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.
“ஏய்!” என வைஷ்ணவி பக்கம் இருந்து இப்போது சத்தம் குறைந்து ஒலித்த க்ரீச் சத்தம் மீண்டும் கேட்கவும், அர்ஜுன் முழுவதும் திரும்பாமல் முகத்தை மட்டும் திருப்பி அவளைப் பார்த்தான்.
வைஷ்ணவி வேக வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டாள். சிவந்துப் போயிருந்த அவளின் இடதுக் கன்னம் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.