Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Nenchil Payuthe minalaa

  

அர்ஜுனின் மனதில் உற்சாக ஊற்றுப் பெருகியது!

  

அவளை பார்க்காததுப் போல தன் ஷூவை கழற்றி ஒரமாக வைத்து விட்டு, ஜீன்ஸை கழற்றினான்.

  

வைஷ்ணவி என்னமோ செய்வதுப் போல் வேறு பக்கம் போவது ஓரக்கண்ணால் பார்க்க முடிந்தது. அதற்காக அவன் கவலைப் படவில்லை. அவள் அவனைப் பார்ப்பாள் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது.

  

அவன் நினைத்தது  தான் நடந்தது!

  

டிரெஸ்ஸிங் மேஜை மேலே இருந்து சீப்பை எடுத்த வைஷ்ணவியின் கண்கள் இப்போது அவன் பக்கம் வருவதும் போவதுமாக இருந்தது. பார்க்க வேண்டாம் என்று தான் நினைத்தாள் ஆனாலும் பார்த்தாள்.

  

அர்ஜுன் வைஷ்ணவி அறையில் இல்லை என்பதுப் போல காட்டிக் கொண்டு ஒரு ஷார்ட்ஸ் எடுத்து அணிந்துக் கொண்டான். மறக்காமல் அவ்வப்போது வைஷ்ணவியின் பிம்பத்தைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு தான் செய்தான்.

  

அவன் கட்டிலின் பக்கம் வரவும் வைஷ்ணவி தலை வாருவதுப் போலக் காட்டிக் கொண்டு கண்ணாடி பக்கம் திரும்பி சீப்பை தலையில் வைத்தாள்.

  

அர்ஜுனின் மந்தகாச மனநிலை இன்னும் அதிகமானது.

  

கண்ணாடியில் அவளுக்கு தெரியும் விதத்தில் கட்டிலில் அமர்ந்தவன், அவனின் வடிவான கால்கள் அவளுக்கு தெரிவதுப் போல ஒரு கால் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண்டு ஸ்லோ மோஷனில் காலில் இருந்த சாக்ஸை கழற்றி எடுத்தான்.

  

அதை முன்பு கழற்றிப் போட்டிருந்த ஜீன்ஸ் டீ ஷர்ட்மேல் விழுவதுப் போல வீசியவன்,

About the Author

Sweet Princess

Add comment

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

KEK

EUUTT

VEE

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top