(Reading time: 5 - 9 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

"புரியலையே விவேக்??"

  

"நீ கான்டஸ்ட் பைனல் ரவுன்ட் வின் செய்தாச்சு. அதோட ப்ரைஸ் வாங்க போக வேண்டாமா?"

  

"அதைப் பத்தி பேச வேண்டாம் விவேக்."

  

"அப்படியா? நான் என்னவோ நீ அதைப் பத்தி தான் பேசிட்டே இருப்பன்னு நினைச்சேன்? உன் கிளாஸ்மேட்ஸ்க்கு இதை விட வேற எப்படி நீ நோஸ்கட் கொடுக்க முடியும்? உன் திறமையை தனி ஆளா நின்னு சாதிச்சு காட்டி இருக்க."

  

"நான் கான்டஸ்ட் ஜாயின் செய்தப்போ அப்படி தான் நினைச்சேன். இப்போ இன்ட்ரஸ்ட் இல்லை. எவன் எப்படி நினைச்சா எனக்கென்ன வந்துச்சு? என் டேலன்ட் என்னன்னு எனக்கு தெரியும்."

  

"அப்போ கான்டஸ்ட் உனக்கு ஹெல்ப் செய்திருக்கு! அது உன் பேச்சிலேயே தெரியுது."

  

"என்ன சொல்ல வர விவேக்? எதுவா இருந்தாலும் நேரா சொல்லு."

  

"ஆதித்யாவும் அவனோட அக்காவும் என் கிட்ட பேசினாங்க அக்ஷரா."

  

"அது தானா?"

  

"நீ சான்வி கூப்பிட்டப்போ கூட பேசலையாமே?"

  

"அவங்க வேற என்ன சொல்வாங்க? அவங்க தம்பிக்காகப் பேசுவாங்க."

  

"ஆதித்யா எதுக்கு அப்படி பிகேவ் செய்தான்னு எனக்குத் தெரியலை அக்ஷரா. ஆனால் இப்போ இதோட ஸ்டேக்ஸ் அதிகம். நீயே யோசி. தம்பியை கான்டஸ்ட்ல கலந்துக்க அனுப்பவே சான்வி சேவிங்க்ஸ் டச் செய்ய வேண்டி இருந்தது. இருந்தாலும் அவன் தங்க போர் சீசன்ஸ்ல புக் செய்திருந்தா."

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.