Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 4 - 7 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Sirikkum Rangoli
Pin It

தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 23 - யாஷ்

"நீ கிளம்பலையா விவேக்?"

  

கேள்வி கேட்ட அக்ஷ்ராவை நிமிர்ந்தே பார்க்காமல், "நீ வரதுக்கு வெயிட் செய்றேன்னு உனக்கு தெரியாதா என்ன?" என பதிலுக்கு கேள்வி கேட்டான் விவேக்.

  

"உன் பிளைட் கிளம்பி போயிட்டா என்ன செய்வ?"

  

"அதெப்படி போகும்? நான் ப்ரைவேட் ஜெட்ல போகப் போறேன்."

  

அக்ஷரா ஆர்வத்துடன் அண்ணன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

  

"உண்மையா ஜெட்டா? நீ வாங்கி இருக்கீயா? அப்போ பிளைட், பர்ஸ்ட் கிளாஸ்ன்னு சொன்னது எல்லாம் பொய்யா? நிஜமாவே உன்னுடைய ஜெட்டா விவேக்?"

  

"இல்லை அக்ஷரா. என் கிளையன்ட் ஒருத்தருக்கு என்னோட இம்மீடியேட் அட்டென்ஷன் தேவைப்பட்டது அதுக்காக ப்ரைவேட் ஜெட் அனுப்பி அட்லான்டா வர வச்சார். திரும்பி போகவும் அவரே ஜெட் கொடுத்திருக்கார்."

  

"நான் இது வரைக்கும் ஜெட்ல போனதே கிடையாது. நானும் உன்னோட வரட்டுமா?"

  

விவேக் அக்ஷரா கொண்டு வைத்திருந்த பெட்டியை எட்டிப் பார்த்தான்.

  

"நீ ப்ரைவேட் ஜெட்ல போறதுக்காக தான என்னோட வர?" கிண்டலாக கேட்டான்.

  

"பின்னே வேற என்ன?" என அக்ஷராவும் விவேக் போலவே பேச முயற்சி செய்தாள்.

  

விவேக் சிரித்துக் கொண்டே எழுந்து நின்றான்.

  

"உன் அப்பாக்கு இன்பார்ம் செய்துட்டு கிளம்பலாம்."

  

"நாம சொல்லாம போனாலும் அம்மாக்கும் அப்பாக்கும் தெரியாது. நான் ரூம்ல இருக்கேன்னு

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Yash

Yash has written more than 1 Tamil series in Chillzee and One Novel in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 23 - யாஷ்madhumathi9 2022-10-31 20:56
:clap: interesting epi :-) eagerly waiting for next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top