Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 13 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Un Idhayam Pesugiren
Pin It

தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 40 - ஸ்ரீலேகா D

ராகுலுடன் பேசிக் கொண்டிருந்தாலும் பூர்வியின் மனதில் பல ரகமான எண்ணங்கள் வேகமாக வந்துப் போய் கொண்டிருந்தது. அதில் முக்கியமான ஒன்று தாரிணியை தொடர்புக் கொள்வது. அந்த நப்பாசையில் போலீஸ் என சொன்ன பூர்வி, எங்கே ராகுல் அவளின் மன ஓட்டத்தை படித்து விடுவானோ என்ற பயத்தில், உடனே மனதை மாற்றிக் கொண்டவளாக, "அனிலா?" என்றாள்.

  

எத்தனையோ தடவை தெரியாமலே அனிலை இதில் இழுத்து வந்து விட்டாள். இப்போது தெரிந்து செய்வதால் ஒன்றும் மூழ்கி போய் விடாது. பூர்வி பற்களை கடித்துக் கொண்டு யோசித்தாள்!

  

ராகுல் அவள் சொன்னதை மறுப்பவனாக தலையை ஆட்டினான்.

  

"சாரி பூர்வி. நான் கொடுத்த த்ரீ செகண்ட்ஸ்ல நீ சொன்ன பதில் தப்பு. கரக்ட் ஆன்சரை பைவ் செகன்ட்ஸ்ல சொன்னாலும் ஏத்துக்க முடியாது! உன்னுடைய வாட்ச் டாக் அனிலை நான் கழுத்துல சங்கிலி போட்டு இழுத்துட்டு வரேன். என் தப்பை எல்லாம் தூக்கிப் போட உன்னால எனக்கு ப்ரீயா ஒரு ஆளு கிடைச்சிருக்கான்."

  

பூர்வி பதில் சொல்லவில்லை. ஆனாலும் குழம்பிப் போன கண்களுடன் ராகுலை ஏறிட்டாள்!

  

"என்ன பூர்வி புரியலையா? நான் போட்டு இருந்த மாஸ்டர் பிளானே வேற. ஆனால் நீ தான் அனில் தான் நான்னு அப்செஸ் ஆகி இருந்தீயே. அதான் நான் என் பிளானை இன்னும் கொஞ்சம் மாத்தி வச்சேன். உன் அப்செஷனை எனக்கு ஏத்த மாதிரி யூஸ் செய்துக்கிட்டேன்."

  

"ராகுல் எதுக்கு இப்படி எல்லாம் செய்றீங்க? தயவு செஞ்சு என்னையும் என் பசங்களையும் இங்கே இருந்து அனுப்பிடுங்க. நாங்க உங்களைப் பத்தி யார் கிட்டேயும் சொல்ல மாட்டோம். வேற ஊருக்குப் போயிடுறோம். வேற நாட்டுக்கே போயிடுறோம்."

  

"மக்கு, மக்கு மக்கு பூர்வி! இவ்வளவு நேரம் நான் பேசினது உனக்குப் புரியவே இல்லையா??? உன்னை அப்படியே ஈஸியா போயிட்டு வாம்மான்னு நான் அனுப்புவேன்னு நீ நினைக்குறீயா? உன்னை கொண்டு வந்து இப்படி மண்டிப் போட வைக்க நான் எவ்வளவு கஷ்டப் பட வேண்டி

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Sreelekha D

Sreelekha D

Latest Books in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

  

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 40 - ஸ்ரீலேகா Dtamilsri 2022-11-05 12:51
very nice epi :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 40 - ஸ்ரீலேகா Dmadhumathi9 2022-11-05 07:37
:Q: ivargal naalvarum rahulidamirunthu thappikka pogirargalo.eagerly waiting for next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top