Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 13 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Nenchil Payuthe minalaa
Pin It

தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 14 - Sweet Princess

  

ர்ஜூன் என்ன செய்வது என்று யோசித்து யோசித்து தலையை பிய்த்துக் கொண்டான். உருப்படியான ஒரு யோசனையும் அவனுக்கு தோன்றவில்லை. அவன் மட்டும் தனியாக போனால் சரியாக இருக்காது. அவன கல்யாணம் செய்திருக்கும் குட்டி பிசாசு உடன் வருவதாகவும் தெரியவில்லை. நரேனிடம் என்ன சொல்லி சமாளிப்பது?

  

அர்ஜுன் இதே எண்ணங்கள் மீண்டும் மீண்டும் ஓட வெறுத்துப் போய் அமர்ந்திருந்தான்.

  

"நீ என்ன இங்கே இருக்க? அதும் இப்படி உட்கார்ந்திருக்க??? எனக்கு மட்டும் டைம் எல்லாம் சொன்ன"

  

திடீரென்று கேட்ட வைஷ்ணவியின் குரல் அவனை துள்ளிக் குதிக்க வைத்தது.

  

"பிசாசே தான்!" என முணுமுணுத்துக் கொண்டே பார்த்தவன், அப்படியே வாய் பிளந்து நின்றான்.

  

வைஷ்ணவி முழு மேக்கப்பில் அவன் முன் நின்றிருந்தாள்.

  

பச்சையும் மஞ்சளும் கலந்த சேலைக் கட்டி, தலை முடியை லூசாக வாரி இருந்தாள். சேலைக்கு மேட்ச் ஆவதுப் போல கம்மல்கள், வளையல்கள் கழுத்தில் சின்ன சங்கிலி வேறு அணிந்திருந்தாள்.

  

"ஆறு மணிக்கு ரெடியாகுன்னு என் கிட்ட சொல்லிட்டு நீ என்ன பிச்சைக்காரன் மாதிரி இருக்க???"

  

அர்ஜுன் கண்களை மூடி திறந்தான்.

  

"என்னடா தூங்குறீயா என்ன? நான் செஞ்ச மேக்கப் எல்லாம் வேஸ்ட்டா." வைஷ்ணவி எரிந்து விழுந்தாள்.

  

"இல்லை, இல்லை! நீ வரப் போறதில்லைன்னு நினைச்சுட்டேன். எனக்குப் பத்து நிமிஷம்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Sweet Princess

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 14 - Sweet Princessmadhumathi9 2022-11-07 14:39
:clap: cute epi eagerly waiting for next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top