கொடைக்கானல்
பூங்காவை சுற்றி பார்த்தவர்கள் அடுத்து ஏரிக்குச் சென்றார்கள். ஏரியில் படகு சவாரி இருக்கவே ஜீப் டிரைவர்கள் ஆளுக்கொரு குழந்தையை தூக்கிக் கொண்டு அவர்களது பெற்றோர்களை அழைத்துக் கொண்டு படகு சவாரி செய்தார்கள்.
அங்கிதா தனியாக இருக்கவே அவளிடம் வந்தான் சொக்கன்
”என்னம்மா தனியா நிக்கற நீ படகு சவாரி செய்யலையா”
“படகு எல்லாமே ஹவுஸ் புல்லாயிருக்கு அண்ணா அதான்”
“அட என்னம்மா நீ வா வா” என அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
”பார்த்தியா எல்லாம் காலியாதான் இருக்கு”
“சரி ஆனா யாரு படகை செலுத்தறது”
“அதுக்கென்னம்மா ஆளா இல்லை” என சொல்லிவிட்டு ஜெகவீரனை பார்த்தான்
”அண்ணா போலாமா” என கேட்க அவனும் சரியென அவ்விடம் வந்தான்.
கூடவே நித்யாவும் அபிதாவும் உடன் வரவே அவர்களுடன் ஒரு போட்டில் ஏறினான். சொக்கன் ஒரு துடிப்பு பிடிக்க இன்னொரு துடிப்பை பிடித்தான் ஜெகவீரன், இருவரும் ஓரமாக போட்டில் அமர்ந்து துடுப்புப் போட நடுவில் அங்கிதா, அபிதா மற்றும் நித்யா 3 பேரும் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் தண்ணீரையும் சுற்றியிருந்த இடங்களையும் மற்ற படகுகளில் வந்தவர்களையும் பார்த்து ஏதேதோ கதைகளை பேசிக் கொண்டும் வந்தார்கள்.
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.