வீட்டைவிட்டு வெளியேறி வந்தார்கள்.
”தலையே சுத்துது மாதவி”
”எனக்கும்தான், அப்பனுக்கும் மகனுக்கும் ஆகலை ஏதோ ஒரு விசயத்தில இரண்டு பேருக்கும் சண்டையாகி மகனை விரட்டியிருக்காரு உதயமூர்த்தி, அவனோ நேரா பாட்டி வீட்ல வந்து தங்கியிருக்கான், இங்கயே படிச்சி முடிச்சிருக்கான், எதுக்காக உதயமூர்த்தி சிலம்பு தன் மகன்னு சொல்லாம மறைக்கனும்”
”இந்த விசயம் கோவலனுக்கு தெரிஞ்சிருக்குமோ”
”வாய்ப்பிருக்கு கேட்டுப் பார்க்கலாமா”
”ஒண்ணு செய், நான் போனா அவர் என்கிட்ட பேச மாட்டாரு, நீயே போய் அவர்கிட்ட பேசிட்டு எனக்கு தகவல் சொல்லு, இதப்பாரு உடனே கிளம்பி இங்க வந்துடாத, உதயமூர்த்தியை நீ தேடு நான் சிலம்புவை தேடறேன், நிச்சயமா அவன் இந்த ஊட்டியிலதான் எங்கயாவது இருக்கனும்”
”சரிடி நான் இப்ப கிளம்பறேன்” என சொல்லிய மாதவி கோவலனை காண கோவைக்குச் செல்ல கண்ணகியோ அதே ஊட்டியில் சிலம்புவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அங்கிருக்கும் மக்களிடம் காட்டி காட்டி விசாரித்தாள்.
யாருக்கும் பெரிதாக எதுவும் தெரியவில்லை, எதற்கும் இருக்கட்டுமென ஒரு நாள் முழுவதும் உறங்காமல் பாட்டி வீட்டை கண்காணித்தபடி இருந்தாள், எப்படியும் அவன் வருவான் என எதிர்பார்த்தாள், ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை, ஆனால் பாட்டி மட்டும் விடிந்தும் விடியாத நேரத்தில் ஒரு கூடையை சுமந்துக் கொண்டு எங்கோ சென்றார், அவரை பின்தொடர்ந்தாள் கண்ணகி, அவரோ எஸ்டேட் வேலைக்கு சென்றிருக்க அதைக்கண்டு அவளுக்க ஆயாசமே பிறந்தது, ஆனாலும் நம்பிக்கையை விடவில்லை சிலம்புவை தேடி அலைந்தாள்.
மறுபக்கம் மாதவியோ கண்ணகி சொன்னது போலவே கோவலனை சந்தித்தாள். அவனிடம்