(Reading time: 26 - 51 minutes)

ப்ப சமையல் எல்லாம் நல்லா செய்வன்னு சொல்லு”

“ம்ம்ம். ஓரளவுக்கு எல்லாமே செய்யத் தெரியும்”

ஜமுனா ஸ்ரீ ராமை பார்க்க திரும்ப அவன் புன்னகையுடன் கண் சிமிட்டினான்.

‘இவன் ரொம்ப சிரிக்கறானே, தாங்கலையே’ என்று எண்ணிக் கொண்ட ஜமுனா,

“ம்ம்ம். இங்க அம்மாக்கு செய்யற, கல்யாணம் ஆகி மாமியாருக்கு செய்வ, செய்ய வேண்டியது தான். அதுல தப்பில்லை. ஆனா அவங்க எல்லாரும் நம்மளை ஏதோ சமையல்காரி மாதிரி தானே பார்க்கறாங்க” என்றாள்.

கௌஷிக் இடையில் புகுந்து “ஏய் உன்னை உன் மாமியார் வீட்டுல அப்படி தான் பார்க்கறாங்களா. ஏன் இப்படி புரளியை கிளப்புற” என்றான்.

“என் மாமியார் வீட்டுல அப்படி நடக்கலை. நான் பொதுவா சொன்னேன். பட் எவ்வளவு பேர் வீட்டுல அப்படி நடக்குது தெரியுமா”

“ம்ம்ம். கரெக்ட் தான்” என்று தௌலத்தும் ஒத்துக் கொண்டார்.

தேன்மொழி அமைதியாகவே இருக்க,

திரும்ப ஜமுனா “உனக்கு அப்படி இருந்தா நீ என்ன பண்ணுவ தேன்மொழி” என்றாள்.

“சமையல்ன்றது என்னை பொறுத்த வரைக்கும் ஒரு ஹாபியும் கிடையாது, கஷ்டப்பட்டு செய்யற ஒரு விசயமும் கிடையாது. அதை நான் விரும்பி செய்வேன். ஆனா அதுக்காக நம்மளை ஒரு சமையல் காரி ரேன்ஜ்க்கு ட்ரீட் பண்ணாங்கன்னா, ஏதாச்சும் செஞ்சி இதென்ன நல்லா இல்ல, அதென்ன அப்படி இருக்குன்னு கேட்டா, இந்தா பிடி நீயே செய்ன்னு கரண்டியை கொடுத்துடுவேன்” என்றாள்.

எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

ஜமுனா ஸ்ரீ ராம் கையில் கரண்டியை வைத்திருப்பது போல எண்ணிப் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

எல்லோரும் அவளை விசித்திரமாக பார்க்க, ஸ்ரீ ராமிற்கு மட்டும் அவள் எதை எண்ணி இருப்பாள் என்பது தெளிவாய் புரிந்தது.

அவள் தலையில் ஒரு தட்டு தட்டினான்.

“நீயேண்டா என்னை அடிக்கற” என்று கேட்டுக் கொண்டே சிரித்துக் கொண்டிருந்தாள்.

பிரதாப் “ஏன் மேடம் இப்படி சிரிக்கறீங்க” என்று கேட்க,

“இல்லை இவளுக்கு வர போற ஹஸ்பன்ட் நிலைமையை நினைச்சி சிரிச்சேன், அவர் கைல கரண்டியை வச்சிட்டு இருக்கற மாதிரி நினைச்சி பார்த்தேன்” என்று கூறவும், எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

எல்லோரும் சிரிக்க ஸ்ரீ ராமிற்கு தான் இதற்கு தானும் சிரிப்பதா வேண்டாமா என்ற குழப்பம்.

ஏதும் அறியாமல் ஜமுனா இதை கூறியிருந்தால் அவனும் சேர்ந்தே சிரித்திருப்பான். ஆனால் அவள் தன்னை நினைத்து சிரித்து வைக்கவும், அவனால் சிரிக்க இயலவில்லை. சிரிக்கவில்லை என்றாலும் தனியாக தெரிவோம் என்பதால் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தான்.

அதைக் கண்ட ஜமுனாவால் தான் சிரிப்பை அடக்க முடியவில்லை.

தேன்மொழி மட்டும் சிரிக்காமல் ‘கல்யாணம்’ என்று விரக்தியோடு எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

அவளைப் பார்த்து எல்லோரும் ஒவ்வொருவராக சிரிப்பை நிறுத்தி விட, கௌதம் மட்டும் சிரித்துக் கொண்டிருந்தான்.

“கௌதம் நாங்க எல்லாம் சிரிச்சி முடிச்சிட்டோம். நீங்க மட்டும் என்ன சிரிச்சிட்டே இருக்கீங்க” என்று கௌஷிக் கேட்க,

அவன் சிரித்துக் கொண்டே “ஐயோ தேன்மொழிக்கு வரப் போற ஹஸ்பன்ட் எவ்வளவு பாவம்ல, எப்படியும் அவர் ஒரு முறையாச்சும் சாப்பாட்டை குறை சொல்லுவார். அப்ப எப்படியும் கரண்டி கை மாறும்” என்று பேசவே முடியாமல் எப்படியோ சிரித்துக் கொண்டே சொல்லி முடித்தான்.

இந்த முறை தேன்மொழியும் சிரித்தாள். அவன் மேல் அவளால் ஏனோ கோபப்பட முடியவில்லை.

இருந்தாலும் “கௌதம் என்ன என்ன சொன்னீங்க” என்று கோபமாக பேச முயன்றாள். ஆனால் அவள் குரலே காட்டிக் கொடுத்து விட்டது.

“பார்த்தியா, உன்னாலேயே முடியலை. அப்புறம் நான் என்ன செய்யறதாம்” என்று சொல்லி விட்டு திரும்ப சிரித்தான்.

தேன்மொழி கௌதமை பெயர் சொல்லி அழைப்பதும், கௌதம் அவளை ஒருமையில் அழைப்பதும் அங்கிருந்த சில நெஞ்சங்களிடையே எரிச்சலை வரவழைத்தது. அதை அறியாமல் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ன்றிரவு படுத்த ஸ்ரீ ராமிற்கு தூக்கமே வரவில்லை. எப்போதும் பதினொரு மணிக்கு படுப்பான். படுத்த சில நிமிடங்களிலேயே உறக்கம் அவன் கண்களை தழுவி விடும். ஆனால் இன்றோ பதினொன்று நாற்பது. பனிரெண்டு பதினைந்து என்று திரும்ப திரும்ப டைம் பார்த்துக் கொண்டிருந்தானே ஒழிய அவனால் தூங்க இயலவில்லை.

மனம் முழுவதும் தேன்மொழியை பற்றிய சிந்தனையே ஓடிக் கொண்டிருந்தது. அவள் கெளதமுடன் பேசிய பேச்சுக்களை நினைவுப் படுத்திக் கொண்டிருந்தான்.

தவறாக எண்ணுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், மற்றவர்களை விட அவள் அவனிடம் உரிமையாக பேசிப் பழகுவது புரிந்தது.

ஜமுனா, தௌலத் அக்கா இருவரிடமும் தேன்மொழி பழகுவதை எண்ணிப் பார்த்தான். அவர்களிடம் அவள் நன்றாக தான் பேசுகிறாள் என்றாலும், ஏனோ கௌதமிடம் அவளுக்கு இன்னும் நெருக்கம் அதிகம் இருப்பதைப் போல தோன்றியது. அவள் அவனிடம் உரிமையாக பேசியது அவன் நினைவுக்கு வந்தது.

அந்த நிமிடம் ஸ்ரீ ராமிற்கு ஜமுனாவின் நட்பு நினைவுக்கு வந்தது. அவனும், கௌஷிக்கும் இன்னும் எவ்வளவோ உரிமையாக ஜமுனாவிடம் பேசி உள்ளார்கள். அவளை கேலி செய்வது, தலையில் தட்டுவது என்று எல்லாம் நினைவுக்கு வந்தது. எல்லாவற்றிலும் உச்சக் கட்டமாக ஜமுனா ஒரு முறை கௌஷிக்கை கன்னத்திலே அறைந்து விட்டாள்.

ப்போது அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். கௌஷிக், ஸ்ரீ ராமோடு சேர்த்து அவர்களுக்கு இன்னொரு நண்பனும் இருந்தான். மூன்று பையன்கள், ஒரு பெண் என்று நட்பாக இருப்பது சுலபமில்லையே.

ஒரு செமஸ்டர் ரிசல்ட் வந்திருந்தது. ஜமுனா தான் அவள் அம்மாவிடம் எல்லோர் நம்பரையும் சொல்லி ரிசல்ட் பார்த்து கூற சொல்லியிருந்தாள். போனில் அவளின் அம்மா கௌஷிக் ஒரு சப்ஜெக்ட்டில் அரியர் என்று கூற திடீரென்று ஜமுனா அவனை அறைந்து விட்டாள்.

அங்கிருந்த மூவருக்குமே ஒன்றும் புரியவில்லை. அதிர்ச்சியிலிருந்து வெளியில் வந்து ஸ்ரீ ராம் என்னவென்று கேட்க, விஷயத்தை கூறி விட்டு கௌஷிக்கை நன்றாக திட்டி விட்டு சென்று விட்டாள்.

அங்கிருந்த எல்லோரும் பேசிக் கொண்டது ஸ்ரீ ராமிற்கு இன்னும் நினைவிலிருந்தது.

‘ஹேய் கௌஷிக்கும் ஜமுனாவும் லவ் பண்றாங்க.’

‘அப்படியா சொல்ற’

‘ஆமா. அவ்வளவு உரிமையா அடிச்சிட்டு போறா. பார்த்தியா. அதுல இருந்தே தெரியலையா’

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.