(Reading time: 26 - 51 minutes)

தௌலத்திற்கு ஒன்றும் புரியவில்லை. எப்போதுமே ஜமுனாவின் குரல் தான் ஓங்கி கேட்டுக் கொண்டிருக்கும். இப்போது என்னவென்றால் எல்லோரும் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருக்க ஜமுனா அமைதியாக இருக்கிறாளே.

ஜமுனாவின் பக்கத்தில் அமர்ந்தவர் “என்ன ஜமுனா என்னாச்சி. இந்த பசங்க ஏதும் கிண்டல் பண்றாங்களா. என் கிட்ட சொல்லு. நான் பார்த்துக்கறேன்” என்றார்.

ஜமுனா மட்டும் அமைதியாக இருக்க, திரும்ப எல்லோரும் சிரித்தனர்.

அவருக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை.

“சொல்லு ஜமுனா. அக்கா கேட்கறாங்க இல்ல” என்று ஸ்ரீ ராம் சொல்ல

“ஆமாம்மா சொல்லும்மா” என்றார் தௌலத்.

ஜமுனாவோ முறைத்தாள்.

“ஆமாம்மா சொல்லும்மா” என்று திரும்ப ஸ்ரீ ராம் சீண்ட,

“ஐயோ சார் சும்மா இருங்க. பாவம்” என்று கூறிய தேன்மொழி (ஸ்ரீ ராம்க்கு அப்படியே ‘ஹேய் என் கிட்ட பேசிட்டான்னு மனசுல ஒரே உற்சாகம்’)

“ஏதோ பெட்டாம். ஜமுனா மேடம் ஒன் அவர்க்கு பேச கூடாதாம். அதான் அமைதியா இருக்காங்க. இவங்க எல்லாரும் அவங்களை சீண்டிட்டு இருக்காங்க” என்றாள் தௌலத்திடம்.

“ஓ. அப்படியா” என்றவர் “ஏன் ஜமுனா உனக்கு இதெல்லாம் தேவையா” என்றார்.

ஜமுனாவும் மனதில் அதை தான் நினைத்து புலம்பிக் கொண்டிருந்தாள்.

தலையை மட்டும் ஆட்டி வராத கண்ணீரை துடைக்க, ஸ்ரீ ராம் “ஹேய் ஜமுனா அழுதுட்டா. கௌஷிக் நம்ம ஜெய்ச்சிட்டோம்டா” என்று ஜமுனாவை கொலை வெறி ஆக்கி கொண்டிருந்தான்.

ஜமுனா டைம் பார்த்தாள்.

“இன்னும் பதினைஞ்சி நிமிஷம் இருக்கு” என்றான் ஸ்ரீ ராம்.

‘அது முடியட்டும். உங்களை பார்த்துக்கறேன்’ என்று மனதில் திட்டிக் கொண்டிருந்தாள் ஜமுனா.

கௌஷிக் ஸ்ரீ ராமின் அருகில் வந்து அவன் காதுகளில் “ஹேய் என்ன நாம என்னென்னவோ செஞ்சும் இவ வாயே திறக்கலை. நாம தான் தோற்க போறோமா, இவ மட்டும் ஜெயிச்சிட்டா அப்புறம் இவ பேசுறதை யார் கேட்கறது” என்றான்.

ஸ்ரீ ராமுக்கும் அதே நினைப்பு தான்.

“சரி இரு” என்று சொல்லி விட்டு மொபைலை எடுத்து சுதர்சனுக்கு போன் செய்தான் ஸ்ரீ ராம்.

இவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள் ஜமுனா. ஆனால் அவளுக்கு அவன் சுதர்சனுக்கு தான் போன் செய்கிறான் என்று தெரியவில்லை.

“ஹேய் சுதர்சன். எப்படி டா இருக்க” என்று ஸ்ரீ ராம் பேசவும் தான், இந்த வில்லன் அவருக்கு போன் செய்து விட்டானா என்று எண்ணினாள். அவருக்கு போன் செஞ்சி என்ன செய்யப் போறான் என்றும் எண்ணிக் கொண்டாள்.

போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டவன், “என்னடா உன் பொண்டாட்டிக்கு பயந்து யு.எஸ். போயிட்டு அங்கேயே இருக்க. எப்ப தான் ரிடர்ன்” என்றான்.

“ஹேய் என்னடா இன்னைக்கு நான் தான் கிடைச்சேனா” என்றான் சுதர்சன்.

“என்ன மச்சான் இப்படி சொல்ற. நான் உண்மையை தானே சொன்னேன். நீயே சொல்லு. ஜமுனாக்கு பயந்து தானே நீயே அங்க எக்ஸ்டன்ட் பண்ண சொல்லி கெஞ்சி அங்கேயே இருக்க”

“ஏன் டா உனக்கு இந்த கொலைவெறி. நானே என் செல்லத்தை எப்ப பார்ப்பேன்னு இருக்கேன்”

“ஓ பாரேன். ஏன் டா இப்படி பொய் பொய்யா பேசுற”

“நீ ஏன் டா எப்ப பார்த்தாலும் அவ பேச்சுக்கே போற. உங்களுக்கு சமாதானம் செஞ்சே எனக்கு வயசாகிடும் போல”

“நீ ஆல்ரெடி அங்கிள் தான் டா. இன்னும் உனக்கு என்ன வயசாகணும்”

“ஆளை விடு சாமி. நான் போனை வைக்கறேன்”

“ஹேய் சுதர்சன் இரு டா. அதுக்குள்ளே போனை வச்சிட்டு என்னடா பண்ணப் போற. உனக்கு தான் என் மேல அக்கறை இல்லை. ஒரு போன் பண்றது இல்ல. நானா பண்ணும் போதும் இப்படி வைக்கறேன்னு சொல்ற. என்னடா அங்க ஏதும் கேர்ள் ப்ரண்ட் இருக்கா”

அதற்குள் அலறிய சுதர்சன் “ஏண்டா என் குடும்பத்துல இப்படி குழப்பம் பண்ண போன் பண்ணி பேசுற. ஏய் ஜமுனா காதுல இப்படி ஏதும் விழுந்துச்சி. அவ்வளவு தான். நீ எங்க இருக்க. அதை சொல்லு முதல்ல, ஜமுனா எங்க”

“நான் இன்ஸ்டிடியூட்ல தான் இருக்கேன். பட் உன் வொய்ப்க்கு கிளாஸ் இருக்கு. அவ கிளாஸ்ல இருக்கா. அவ இருந்தா என்னை எங்க இவ்வளவு நேரம் பேச விட்டுருப்பா” என்று சொல்லிக் கொண்டே ஜமுனாவை பார்த்து சிரித்தான் ஸ்ரீ ராம்.

பாவம் சுதர்சனும் அதை நம்பி விட்டான்.

“ஓ என் செல்லம் கிளாஸ்க்கு போயிடுச்சா” என்றான்.

கௌஷிக்கும், ஸ்ரீ ராமும் சிரிக்க, பேசவும் முடியாமல் இந்த கொடுமையை கேட்கவும் முடியாமல் உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தாள் ஜமுனா. இதுல இவர் வேற இப்ப தான் செல்லம்ன்னு எல்லாம் சொல்லனுமா என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

அவள் செய்கையை பார்த்து சிரித்துக் கொண்டே “அது சரி. நீ ஒரு செல்லப் பேர் வச்சிருக்கியாமே அவளுக்கு. அதை சொல்லிட்டு சொல்லிட்டு சிரிப்பா. அதுவும் அதை நீ சொல்லும் போது ரொம்ப நல்லா இருக்கும்ன்னு சொல்லுவா பாரு” என்று ஜமுனாவை பார்க்க,

அவளோ அதிர்ந்து பேசி விட வாயை திறக்க, கௌஷிக் அவள் வாயை மூடிக் கொண்டான்.

“அதெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியாது டா” என்று சுதர்சன் சொல்லவும் தான் ஜமுனாவிற்கு வயிற்றில் பாலை வார்த்தது போல இருந்தது.

கௌஷிக் கையை அவளே எடுத்து விட்டு அவர்களை பார்த்து கேலி சிரிப்பு சிரித்தாள்.

“என்னடா அவளே எங்க கிட்ட சொல்றா. ஜஸ்ட் அதை நீ சொன்னா எப்படி இருக்கும்ன்னு தான் எனக்கு பார்க்கணும். அதுவும் அவ நீ சொல்லும் போதே எப்படியோ இருக்கும்ன்னு ஒரு பீல் குடுத்தா. அதனால தான் கேட்கறேன்”

“அப்படியா சொன்னா”

இப்போது ஸ்ரீ ராம் கௌஷிக்கிற்கு சைகை செய்ய அவள் திரும்ப ஜமுனாவின் வாயைப் பொத்தினான்.

அப்படி இப்படி பேசி ஸ்ரீ ராம் கடைசியாக சுதர்சனை அந்த பெயரை சொல்ல வைத்து விட்டான்.

“ஜாமூன்” என்று சுதர்சன் சொல்ல, லவுட் ஸ்பீக்கரில் எல்லோருக்கும் கேட்க ஜமுனா நிமிர்ந்து எல்லோரையும் பார்த்தாள்.

எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. கௌஷிக்கின் கையை கடித்து விட்டு போனை பிடுங்கி லவுட் ஸ்பீக்கரை ஆப் செய்து விட்டு பேச ஆரம்பித்தாள்.

கௌஷிக் ஆஆஆஆஆ என்று அலறிக் கொண்டிருக்க ஜமுனா சுதர்சனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தாள்.

இது எல்லாவற்றையும் செய்து விட்டு ஸ்ரீ ராம் அடக்க இயலாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

ஜமுனா “உங்க கிட்ட அப்புறம் பேசிக்கறேன்” என்று போனை கட் செய்து விட்டு ஸ்ரீ ராமை முறைக்க,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.