(Reading time: 26 - 51 minutes)

கௌஷிக்கும் கை வலியை தாங்கிக் கொண்டு ஸ்ரீ ராமை முறைத்தான்.

ஆனால் அவனுக்கோ சிரிப்பு இன்னும் நிற்கவில்லை. (ப்ரண்ட்ஸ் படத்துல நம்ம விஜய் சிரிக்கற மாதிரின்னு வச்சுக்கோங்களேன்)

சிரித்துக் கொண்டே “நீ தோத்துட்ட” என்றான் ஜமுனாவை பார்த்து.

“வில்லா. ஏன் டா இப்படி பண்ண.”

எல்லோரும் விசித்திரமாக பார்க்க, தௌலத்தையும், தேன்மொழியையும் நோக்கியவள் “இப்படி எல்லாம் ஓவரா செஞ்சா இவனுக்கு மரியாதை எல்லாம் கிடைக்காது. சகட்டு மேனிக்கு வாடா போடா தான் வரும்” என்றாள்.

இன்னும் சிரித்துக் கொண்டிருந்தவனை பார்க்க வயிற்றெரிச்சலாக இருந்தது அவளுக்கு.

“நீ வா. உன்னை எங்க பார்த்துக்கணும்ன்னு எனக்கு தெரியும்” என்று சொல்லி விட்டு ஜாடையாக தேன்மொழியை பார்த்தாள்.

ஸ்ரீ ராமின் சிரிப்பு சுவிட்ச் போட்டாற் போல் மறைந்தது.

“விடு ஜமுனா. நமக்குள்ளே இதெல்லாம் சகஜம் டா”

“ஆமாமா. நானும் இதே மாதிரி செய்யனுமில்ல. பார்த்துக்கறேன்.” என்றவாறு அவளுக்கு கிளாஸ் இருந்ததால் கிளம்பி சென்றாள்.

ஸ்ரீ ராம் தான் இவ என்ன பண்ணுவாளோ என்று உள்ளுக்குள் பயந்தான்.

இப்போது கௌஷிக் அவன் கையை காட்டியவாறு “என்னடா இது” என்றான்.

“ஹிஹிஹி. நம்ம ஜமுனா டா. இதுக்காக அவளை போய் அடிக்க முடியுமா” என்றான்.

“அவளை அடிக்க முடியாது. உன்னை அடிக்கலாம்” என்றவாறு அவன் முதுகில் இரண்டடி போட்டான்.

ஒரு வழியாக சமாதானமாகி இருவரும் செல்லும் போது “இன்னைக்கு அவளை ஓவரா ஓட்டிட்டோமோ” என்றான் ஸ்ரீ ராம்.

“என்னது ஓவராவா ரொம்ப ஓவரா. அவ என்ன செய்ய போறாளோ” எனவும், ஸ்ரீ ராம் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான்.

வெள்ளிக்கிழமை காலையில் ஏதோ கோவிலுக்கு போக வேண்டும் என்று தேன்மொழியின் தந்தை கூறினார். எல்லோருக்குள் வேலை இருப்பதால் காலையிலேயே ஆறு மணிக்கு சென்று விட்டு வந்து விடலாம் என்று கூறி இருந்தார்.

அதை அவள் தாய் மகள்கள் இருவரிடமும் கூறி தான் இருந்தார். இருந்தும் மலர்விழி காலை நாலரை மணிக்கு எழுப்பினால் அழுது அடம் பிடித்தாள்.

இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம் என்று கெஞ்சினாள்.

உங்க அப்பா வந்து நீ தூங்கரதை பார்த்தாருன்னா அவ்வளவு தான் கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி ருத்ர தாண்டவம் ஆடுவார்.

அரை கண்ணை திறந்தவாறே “சரி நான் மாடிக்கு போய் கொஞ்சவே கொஞ்ச நேரம் தூங்கறேன். இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்து எழுப்புங்க. சரியா” என்று சொல்லி விட்டு தட்டி தடுமாறி மாடிக்கு சென்று படுத்து விட்டாள்.

மணி ஐந்தாகி விட்டது.

கீழே இருந்து தேன்மொழி கிளம்பிக் கொண்டே போன் செய்தாள்.

மொபைலில் பிடிஐ (ப்ரெஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா) வெப்சைட்டில் இருந்து டௌன்லோட் செய்த நியூஸை கேட்டுக் கொண்டிருந்தான் கௌதம். (இப்ப புரிஞ்சிடுச்சா கௌதம் எப்ப பார்த்தாலும் போன்ல என்ன கேட்கறான்னு)

இன்று ஏனோ தூக்கம் சீக்கிரமாகவே களைந்து விட்டது அவனுக்கு. மெதுவாக எழுந்து சத்தம் வராமல் சேரில் அமர்ந்து நியூஸ் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் ஏதும் சின்ன சத்தம் போட்டாலும் கிருஷ்ணா உடனே முழித்து விடுவான். என்ன என்னவென்று பதறி விடுவான். அதனால் சத்தமில்லாமல் சென்று அமர்ந்து விட்டான்.

ஊரே அமைதியாக இருக்க, திடீரென்று “பலே பலே பலே உச்சலபு கட்டு ஓபி காட்டு நவாபி வே குடிச்ச லகுதா சேர் பஞ்சாபி” என்று (அபியும் நானும் படத்தில் அந்த ஜோகிந்தர் சிங்கை பிரகாஷ் ராஜ் பார்த்த உடன் ஒரு பாட்டு வருமே அந்த பாட்டு) ரிங் டோன் அடித்தது.

ஒரு முறை அடித்து நின்ற பிறகும் மலர் எடுக்கவில்லை.

திரும்ப மொபைல் அடித்தது.

மொபைல் அடிக்க எடுத்தவள் தூக்க கலக்க குரலில் “ம்ஹிம் ம்ஹிம் எழுப்பாதீங்க” என்று அழு குரலில் கூறிவிட்டு திரும்ப தூங்கி விட்டாள்.

அந்த குரலை கேட்டவனுக்கோ சிறு குழந்தையின் குரலை நினைவுப் படுத்தியது.

யார் அது என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அது தேன்மொழி கூறிய அவளின் தங்கையாக இருக்கும் என்று சிறிதும் தோன்றவில்லை.

திரும்ப மொபைல் அடிக்க திரும்ப எடுத்தவள் “ப்ளீஸ்” என்று ஆரம்பித்தாள்.

அந்தப் புறம் என்ன கூறினார்களோ “சரி சரி. வரேன். மிட் நைட்ல எழுப்பிட்டு அதுல சீக்கிரமா எந்திரிக்கலைன்னு வேற திட்றது” என்று புலம்பிக் கொண்டே கிளம்பினாள்.

அவள் பேசியதை வைத்து அவள் சென்றிருப்பாள் என்று தோன்றினாலும் இன்னும் ஏதாவது அரவம் கேட்கிறதா என்று உன்னிப்பாக காதை தீட்டிக் கொண்டிருந்தான் கௌதம்.

இரண்டு புறமும் வீடுகள் நெருக்கமாக இருக்க எந்த வீட்டில் இருந்து அந்த சத்தம் வருகிறது என்று அவனுக்கு தெளிவாக தெரியவில்லை.

அதிலும் தேன்மொழியின் வீட்டிலிருந்து அந்த சத்தம் வந்திருக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணி இன்னொரு பக்க வீட்டில் இருந்து தான் வந்திருக்கும் என்று அவனே முடிவும் செய்து கொண்டான்.

சிறிது நேரம் அதையே எண்ணிக் கொண்டிருந்தான்.

கிருஷ்ணா எழுந்து வந்து “என்ன சீக்கிரம் எந்திரிச்சிட்டியா. ஏன் இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்ச, அதுவும் காலைலயே என்ன யோசனை” என்று கேட்கவும் தான் இவ்வளவு நேரம் அதையே யோசித்துக் கொண்டிருக்கிறோமே என்று எண்ணி அதற்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

ன்று ஜமுனா, தௌலத், தேன்மொழி யாருக்குமே முதல் வகுப்பு இல்லாததால் மூவரும் நடுநடுவே ஏதோ செய்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.

தௌலத் நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.

“ம்ம்ம். சுதந்திரம் கிடைச்சி இத்தனை வருஷம் ஆச்சின்னு பேசிட்டிருக்கோம். ஆனா பொண்ணுங்களுக்கு மட்டும் இன்னும் சுதந்திரம் கிடைக்கல” என்றார்.

“என்னாச்சி” என்று ஜமுனா கேட்க,

“பாரு எல்லாரும் கை விட்டு தானே அநாதைன்னு குழந்தைங்க அநாதை ஆசிரமத்துக்கு வருதுங்க. அங்க கூட பிராட் பண்றாங்க. ஒரு ஆசிரமத்துல குழந்தையை தத்தெடுத்துட்டு அப்புறம் அவங்களை பிச்சை எடுக்க வச்சிருக்காங்க. இதுக்கு அந்த ஆசிரமத்துல இருக்கறவங்களே உடந்தையாம். ஒன்னு அப்பா அம்மா இல்லாமலோ இல்லை அவங்களுக்கு வேண்டாம்ன்னு புறக்கணிக்கப் பட்டோ தானே இந்த குழந்தைங்க ஆசிரமத்துக்கு வராங்க. அங்கேயும் இப்படி நடந்தா எப்படி, இனி அந்த ஆசிரமத்துல நல்லவங்க யாராச்சும் தத்தெடுக்க வந்தா கூட அந்த பிள்ளைங்க எப்படி நம்பி போகும் என்றார் ஆதங்கத்துடன்.

இதை கேட்டவுடன் எல்லோருக்குமே கஷ்டமாகி விட்டது.

ஜமுனா, தேன்மொழி இருவருக்குமே மனது சரியில்லாமல் போய் விட்டது.

ஜமுனாவிற்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் குழந்தை இல்லை.

கடவுளே ராஜா மாதிரி வளர்ப்பேனே, எனக்கு குழந்தை இல்லையே. இப்படி வேண்டாம்ன்னு விட்டுட்டு போறவங்களுக்கு கொடுத்திருக்கியே என்று மனதில் அழுதாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.