(Reading time: 42 - 84 minutes)

 

ரிகா உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் வருகிறாயா?...”

“சொல்லு ஷன்வி…” என்று அவளுடன் நடந்தாள் ரிகா…

“நான் ஒன்று சொன்னால் செய்வாயா?... எனக்காக…”

“என்னவென்று சொல்…”

“முதலில் செய்வேனென்று வாக்கு கொடு….”

ஒரு நிமிடம் கூட யோசிக்காது அவளிடம் சரி என்றாள் ரிகா….

கொஞ்சம் கூட நேரம் எடுக்காது சரி என்று சொன்ன தோழியைக் கட்டி அணைத்துக்கொண்டாள் ஷன்வி….

“நான் அனாதையாக நின்ற போது, நீயும் உன்னைப் பெற்றவர்களும் எனக்கு துணையாய் இருந்தீர்கள்…. இன்று நீ இப்படி இருக்கும்போது, நான் எப்படி உன்னை விட்டு செல்வேன் அதுவும் திருமணமாகி???... உனக்கு ஒரு நல்வாழ்வை ஏற்படுத்தாது நான் எப்படி உன்னை விட்டு அகலுவேன்?...” என்று தனக்குள் பேசிக்கொண்டே தோழியை அணைத்தபடி இருந்தாள் ஷன்வி…

“தேங்க்ஸ்டா மா… உன் நம்பிக்கை வீண் போகாது… உனக்கு நல்லது தாண்டா நான் எப்பவும் நினைப்பேன்…” என்றாள்…

“”ஹே… ஷன்வி… என்னாச்சு… ரிலாக்ஸ்…. சரி சொல்லு… என்ன செய்யணும்?..”

“கல்யாணம் பண்ணிக்கணும்…”

உடல் முழுவதும் பற்றி எரிந்த வேதனை அளித்தது ஷன்வியின் வார்த்தை…. உயிரே சென்றது போல் தவித்தாள் ரிகா… அவள் கண்களில் கண்ணீர் உருவாகியது…

“ரிகா… அழாதேடா… ப்ளீஸ்…. உன் நல்லதுக்குதான்டா…”

“……………”

“ரிகா…. எதாவது பேசு…. இப்படி இருக்காதே பேசு….”

“…………”

“ரிகா… பேசு….”

“…………”

“உன் ஷன்வி கேட்கிறேன்…. நீ எனக்காக இதை செய்யணும்…”

அடிப்பட்ட பார்வைப் பார்த்தாள் ரிகா…. அவள் பார்வையிலும் நிலை குலையாமல் தன் வாக்கில் உறுதியாய் இருந்தாள் ஷன்வி…

“எனக்கு வாக்கு கொடுத்திருக்கிறாய்… மறவாதே….”

“……………..”

“நீ அதை நிறைவேற்ற வேண்டும்…. சம்மதம் சொல் இப்போதே ஆதர்ஷை திருமணம் செய்வதற்கு…”

காயம் பட்ட இடத்தில் வெந்நீர் ஊற்றியது போல் நிலை கொள்ளாது துடித்தாள் ரிகா…

“சொல்லு.. சரி என்று… சொல்லு ரிகா…”

எதுவும் சொல்லாது அவளை விட்டு வேகமாய் அகன்று, அவர்கள் வீட்டின் பின்புறம் இருந்த ஸ்ரீராமரின் சிலை அருகே சென்றாள் ரிகா…

ம்மா… ஒரு நிச்சயதார்த்தம் முடிந்தது… ஆதி விஷயம் தான் புரியவில்லை அம்மா….”

“அனு… எல்லாமே எல்லாருக்கும் வாழ்க்கையில் எளிதாக கிடைத்து விடாது…. அவ்னீஷிற்கு சிக்கலில்லாத திருமண முடிவு, ஆதிக்கோ, திருமணமே சிக்கலில் தான் ஆரம்பம்… அவ்னீஷிற்கு தொழிலில் இன்னமும் முயற்சி தான்… ஆனால், ஆதிக்கு தொழிலில் வெற்றிதான் திரும்பும் பக்கம் எல்லாம்… என் பிள்ளைகள் ஐவருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்… இது தான் இந்த பெற்றவளுக்கும் வேண்டும்…”

“புரிகிறது அம்மா…. ஷன்வி ரிகாவிடம் பேச போயிருக்கிறாள்…”

“ரிகா என்ன சொல்வாளோ?...”

“நல்ல முடிவாகவே இருக்கும் அம்மா…”

“இருந்துவிட வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன்…”

“ஆதிக்கு ரிகா தான் பொருத்தமானவள் என்று எப்படி முடிவு செய்தீர்கள் அம்மா?...”

லேசாக சிரித்தவர், தன் கணவரைப் பார்த்தார்…. அவர் சொல்லு என்று சைகை காட்டவே, கோதையும் அனுவிடம் காரணத்தை சொல்லலானார்….

“திருமணத்திற்கு அனைவரும் பார்ப்பது பெரும்பாலும் ஜாதகப்பொருத்தம் தான்… ஆனால், ஆதி-ரிகா வின் விஷயத்தில் மனங்கள் ஒன்றாக நிறையவே பொருந்தியிருக்கிறது… நம் வீட்டில் உள்ள ஸ்ரீராமரின் உருவ சிலை உனக்கு நினைவிருக்கிறதா?...”

“ஆமாம்…” என்று தலை ஆட்டினாள் அனு…

“அதைப் பார்த்தால் உன் தம்பி என்ன சொல்லுவானோ, அதை தான் ரிகாவும் சொல்கிறாள்… இரண்டு பேருக்கும் விட்டு கொடுக்கும் தன்மை நிறைய இருக்கிறது… ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்ளும் பண்பும் மிக இருக்கிறது… அடுத்தவர் மனம் நோக நடக்க இருவருக்கும் ஒரு நாளும் விருப்பம் கிடையாது… ஒருவரை ஒருவரிடத்தில் விட்டு கொடுக்கவோ, குறை கூறவோ தோன்றாத நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருவரும்… அதே நேரத்தில் செய்யும் தவறை சுட்டி காட்டவும் தயங்குவதில்லை இருவரும்… தன் மேல் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும் வருந்துவதில்லை…. மொத்தத்தில் தம்பதி சகிதமாய் வாழ ஏற்றவர்கள்… இருவரும் திருமணத்தில் இணைந்தால் நிச்சயம் அந்த ராம்-சீதா போலவே காதலுடன் வாழ்வார்கள்…”

“ரிகா மட்டும் மனைவியாக கிடைத்தால் ஆதி அதிர்ஷ்டசாலிதான்… அதேபோல், ஆதி மட்டும் கணவனாக கிடைத்தால் ரிகா பாக்கியசாலிதான்னு சொல்லுங்க… அப்படிதானே அம்மா?...”

“ஹ்ம்ம் சரியாக சொன்னாய் அனு…” என்று மகளை வாஞ்சையுடன் தலையில் வருடினார் சுந்தரம்….

டேய்… ஹரி… என்னாச்சு, ஏன் இப்படி நடந்துக்குற?...”

“ஒன்னுமில்லை டா… நீ சொல்லு மயூரிக்கு ரிகாவை எப்போதிலிருந்து தெரியும்?...”

“இரண்டு வருடங்கள் இருவரும் ஒன்றாக வேலைப் பார்த்தனர்… இந்த ஒருவருடமாக அவள் எங்கே சென்றாள் என்று எங்களுக்கு தெரியவில்லை…”

“தேங்க்ஸ் மச்சான்…”

“டேய்… என்னடா ஆச்சு… சொல்லு…”

“இவள் பெயர் என்ன?...”

“உனக்கு இவளின் பெயர் கூட தெரியாதா ஹரி?...”

“நீ சொல்லு….”

“என்னடா சொல்லுற?...”

“நிஜத்தை சொல்றேன்…”

“அப்போ எப்படி அவ உனக்கு தோழி…”

“அவள் எனக்கு தோழியும் தான் டா…”

“பிறகு என் ரிகா என்று உருகினாயே… அது?...”

“அது….”

“அது தான் எது?...”

“முகிலா… அது….”

“சொல்லு….”

“அதை பிறகு சொல்கிறேன்…”

“இப்போது சொல்ல முடியாதோ?...”

“நீ சொல்லு அவளின் பெயர் என்ன?..”

சாகரிகா…”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.