(Reading time: 51 - 101 minutes)

 

" நிஜம்மாவா யாரு ரகு ? " என்றவள் சிறுபிள்ளைபோல துள்ள " நான் முதல் முதலில் பார்த்தா  ஜானகி இவள்தான் " என்று மனதிற்குள் சொல்லி கொண்டான் ரகுராம் ....

" அவங்க நேம் ஸ்வாஸ்திகா.... சில பிரபலாமான பத்திரிக்கைக்கு கேலிச்சித்திரம்  வரையறது மட்டும் இல்லாமல், தனிபட்ட முறையில் நிறைய ஓவியங்கள் வரைஞ்சு எக்சிபிஷன் நடத்தி பல செரிட்டிஸ் கு உதவுறாங்க "

" நானும் கேள்விபட்டுருக்கேன் ரகு .. அவங்க ஒரு யாங் டேலன்ட் ..... "

" ஹாப்பி தானே டா ? " என்று கனிவுடன் கேட்க ,

" எதுக்காக இது ரகு ?" என்றாள் ஜானகி

" உனக்காகத்தான் ஜானகி " என்று காதல் குரலில் சொன்னவன் தொடர்ந்து பேசினான் ...

" அன்னைக்கு நீதானே சொன்ன, ஓவியம் வரையரதுன்னா எனக்கு பிடிக்கும் ஆனா எனக்கு சரியா வரைய  தெரில... நான்மட்டும் ஓவியம் தீட்ட  தெரிஞ்சவலாக இருந்தா, எனக்கு தோனுற கற்பனை எல்லாத்தையும் ஓவியாமாய்  தீட்டுவேன்னு "

நிஜம்தான் ... அன்றொரு நாள் காரில் தர்மத்தின் தலைவன் படத்துல இருந்து " முத்தமிழ் கவியே வருக " பாடல் ஒலிக்க, அந்த பாடல் காட்சிகள் பத்தி பேசிய இருவரும் பேச்சும் சட்டென ஓவியம் பக்கம் திரும்ப ஜானகிதான் கொஞ்சம் நிராசையும் கொஞ்சம் ஏக்கத்துடனும் அதை சொன்னாள்..ஆனால்  அவளின் எண்ணத்திற்கு  மதிப்பு கொடுத்தவன் அவளின் கனவுக்கும் உயிர்கொடுபான் என்று நினைக்கவே இல்லை ... கூடவே என்றோ ஸ்ரீராம் , இதுபோல ஜானகி தனது ஓவியம் தீட்டும் ஆசையை சொன்னபோது " அதுக்கென்னடா எனக்குத்தான் தெரியுமே நான் சொல்லித்தரேன் " என்று சொன்னதும் ஞாபகம் வந்தது ....

" ராம் நீங்க கனவுல சொன்னதுதான் நிஜமா ? எனக்கு நீங்க கொடுக்க நினைக்கிறதுதான் எனக்கு ரகுவின் மூலமாக கிடைக்குதா ? " என்று மனதிற்குள் கேட்டுகொண்டாள்...

" என்ன ஜானு சைலெண்ட் ஆகிட்டே ? "

" இப்படி பார்த்து பார்த்து செஞ்சா, நான் என்ன  பண்ணுறது ரகு ? நான் இதுக்கெல்லாம் என்ன பண்ண போறேன் ? "

" சொன்னா பண்ணுவியா ? "

" ... " ( என்னை காதலித்து  விடு என்று மட்டும் சொல்லிடாதிங்க  ரகு.. என் மனம் இன்னும் தெளிவடையவில்லை  .. ) என மனதிற்குள் பேசினாள்.... அது அவன் மனதிற்கு எட்டியதோ என்னவோ உடனே அவன் மனமும் மௌனமாய் பதில் சொன்னது " இதை பயன்படுத்தி  உன் மனதை கொடுன்னு சொல்ல மாட்டேன் பெண்ணே ... வற்புறுத்தி காதலை  வரவைக்கவே  மாட்டேன் " என்றான் ....

" என்ன சைலெண்ட் ஆகிட்ட  ஜானு ?"

" இல்ல ரகு ... அது.... ஒண்ணுமில்ல சொல்லுங்க "

" எனக்கு உன்னுடைய டைம் அண்ட் கொஞ்சம் உன் பொறுமை வேணும் "

" புரியலை "

" நேத்து நீதானே சொன்ன , உனக்கு கோபம் வந்த மௌனமா விலகிடுவ இல்லன்னா அழுவேன்னு "

" ஆமா "

" எனக்காக நீ அதை பண்ண கூடாது ப்ளீஸ்"

" அப்போ நீங்க என்னை கோபப்படுத்த போறிங்களா ? "

" இல்லடா ... கொஞ்சம் மனசு விட்டு  பேசணும் "

அவன் அப்படி சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி .. முன்புபோல அவளுக்குள் படபடப்பு  இல்லை ... மாறாக அவனின் மன பாரத்தை இறக்கி வைக்கவேண்டும் என்ற வேட்கை தான் இருந்தது .. அவனின் நிலையை நினைத்துபார்த்தாள்... ஒருவேளை தன் காதலை அவன் சொன்னாலாவது அவன் மனபாரம் குறையுமல்லவா ? அவளுக்கு தெரியும் அவனின் நோயும் அவள் தான்  நோய் தீர்க்கும் மருந்தும் அவள்தான் என்று ... ஆனால் அவனி தன்நோயை (காதலை ) கூட  வெளிப்படுத்தாமல்  இருப்பவனுக்கு எவ்விதத்தில் நிம்மதி கிட்டும் ? இன்னும் எத்தனை நாட்களுக்கு தனக்காகவே மனதை மறைத்து வைப்பான் ?

" சொல்லுங்க ரகு "

( அதன் பிறகு ரகு என்ன சொன்னான் ... அதற்கு ஜானகியின் பதில் என்ன ? இதை அடுத்த எபிசொட் ல சொல்றேன் )

ப்போ ஊட்டிக்கு போகலாமா??

பேருந்தில் சுபத்ரா ஓய்வெடுக்க நண்பர்கள் அனைவரும் வழக்கம் போல கலகலப்பாக பேசி கொண்டிருந்தனர்... அந்த அழகிய மலைகளின் ஓரம் பேருந்து சட்டென நின்றது ...

" என்னாச்சு " என்று அனைவரும் கேட்க,

என்ன பிரச்சனையை என்பதை பார்க்க டிரைவர் கீழே இறங்கினார் ... பேருந்தில் ஏதோ கோளாறு என தெரிந்ததும்  அனைவரும்  ஏதேதோ சொல்ல அந்த சலசலப்பில் கண்விழித்தாள் சுபத்ரா ... இறுதியாய் வேறு பஸ் ஏற்பாடு செய்தனர் ..புதிய பஸ் வரும்வரை  கொஞ்சம் காலாற நடக்கலாம் என அனைவரும் சொல்ல, எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் அவர்களுடன் வந்தாள் சுபத்ரா ..

நண்பர்களுடன் பேசியபடியே கீதாவின்  கரம் பிடித்து அவர்களுடன் நடந்துகொண்டிருந்தவள் தாங்கள் எவ்வளவு உயரம் நடந்தோம் என்பதை கவனிக்கவே இல்லை ....

அந்த உயரமான மலை பிரதேசத்தில் குளிர் காற்றை  எதிர்கொள்ள முடியாவிடுனும் கீதாவுடன் இணைந்து  நடந்தாள் சுபத்ரா.

" ஹேய் போட்டோ எடுக்கலாம் ...வாங்க " என்று ஸ்வாதி சொல்ல, தோழிகள் அனைவரும் பிரிந்து ஒவ்வொரு திசையில் நின்று கொண்டு படம் பிடித்தனர். ( இந்த செல்பி (selfie) வந்தாலும் வந்தது ஆளாளுக்கு கேமராவுடன் சுத்துறாங்க ப்ப்பா)

கார்த்திக்கும் ஒரே ஒரு போட்டோவாவது பிடிக்க கீதாவை அழைக்க, சுபத்ராவிற்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது .. நேற்று வரை அர்ஜுன் அவனை படுத்திய பாட்டை எல்லாம் பார்த்தவள் அல்லவா ? கீதாவிடம் திரும்பி " ஒரே ஒரு போட்டோ தானேடி... இந்த நாட்கள் எல்லாம் போனா கிடைக்குமா ? நீ போய்ட்டு வா நான் பத்ரமா இருக்கேன்" என்றாள்....  அவர்களை பார்த்து கொண்டிருந்த  அவளது மனம் மட்டும் சட்டென அர்ஜுனனையே தேடியது .. அவனை நினைத்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்....

அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்த சுபத்ரா அந்த மலையின் உச்சியில் தான் நடந்து கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தாள். ஏற்கனவே கொஞ்சம் மயக்கமாய் இருப்பதாக சொன்னவள் , தான் இருக்கும் இடத்தின் உயரத்தை உணர்ந்ததும் , தலை சுத்தி ,  கால் இடறி பிடிமான இல்லாமல்  அங்கிருந்து தவறி விழப்போனாள்.... கீதா, கார்த்திக் , ஸ்ரீதரன், மோகன் , அவர்களின் லெக்சரர் உட்பட அனைவருமே அதிர்ச்சியில் கத்த

சுபத்ராவும் " அஜ்ஜு......................." என அலற , நொடிபொழுதில் அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துகொண்டான் அர்ஜுனன் .....

சென்னை .....

ஜானகியுடன் மனம் விட்டு பேசிய ரகுராம், மனம்தெளிந்து நிம்மதியாய் இருந்தான் ... ஜானகியிடம் நாளைய வேலைகளை பற்றி பேசி அவளின் எண்ணத்தையும் மாற்றியவன், மாலை  நேரத்திற்குள் அவளை  இயல்புநிலைக்கு கொண்டு வந்தான் ... அன்றைய வேலை சீக்கிரமே முடிந்துவிட , சோர்வாய் இருக்கும் ஜானைகியை பார்த்தவன் , அவளுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்ந்து அவளை வீட்டிற்கு அழைத்து சென்றான்... வீட்டு வாசலில் ஒரு போலிஸ் ஜீப் நிற்க ... இருவருமே நடப்பது புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் ..

இருவரின் பார்வையுமே அங்கு கம்பீரமாக நின்றுகொண்டு பானுவிடம் பேசிகொண்டிருந்த அந்த நெடுவன் மீதுதான் இருந்தது ...

" உங்க வீட்டுல எதுக்கு போலிஸ் வந்துருகாங்க ? "

" தெரில ரகு,, பட் இவரை பார்த்த மாதிரி இருக்கே ? "

" வா பார்ப்போம் " என்று இருவரும் காரை விட்டு இறங்கினர் ...

" அத்தை "

" அடடே வா ஜானு ... வா பா ரகு.. சிவகாமி எப்படி இருக்கா ? "

" நல்ல இருக்காங்க அத்தை " என்றவன் கேள்வியாய் அந்த புதியவனை பார்க்க,

" இவரு தான் நம்ம ஜானகிக்கு பார்த்திருக்குற மாப்பிளை " என்று புன்னகையுடன் சொன்னார் பானு .... அவர் சொன்னதை கேட்ட இருவருக்குமே பூமி தலைகீழாய் சுழல்வதுபோல் இருந்தது ....

ரகு அதிர்ச்சியை ஜானகியை பார்க்க அவள் " தெரியாது " என்பதுபோல அவனை பார்த்தாள்....

" ஹாய் மிஸ்டர் ரகு ..ஐ எம் சிவா... சிவா ஐ பி எஸ் " என்று கரம் நீட்டியவனின் முகத்தில் ஒரு துளியும் புன்னகையில்லை .. இவனுக்கு கரம் கொடுத்தே ஆகா வேண்டுமா ? என்று நினைத்த ரகுராம், மிக பொறுமையாய் கரம் நீட்ட அதற்குள் சிவாவின் செல்போன் சிணுங்கியது ....

" ஓகே வரேன்" இரண்டே வார்த்தையில் பேசி முடித்தவன் ...

" வேலை இருக்கு நாளைக்கு வரேன் " என்று அங்கிருந்து சென்றான் .. போவதற்கு முன்னால் ஜானகியை ஒரு  பார்வையை பார்த்துவிட்டு போக, ரகுராம் கை முஷ்டி இறுக பற்களை கடித்து கொண்டு வேறு பக்கம் திரும்பி நின்றான் ... அந்த சிவா சென்றவுடன் அங்கு நடந்தது பேச்சு வார்த்தையா ? அல்லது வாக்கு வாதமா ? ( அடுத்த எபிசொட் ல சொல்றேன்)

( எப்போ பார்த்தாலும் எல்லா கேள்வியையும் நானே கேட்டுடுறேன்னு நம்ம நம்பர்கள் சொன்னதினால் நான் இப்போ  எந்த கேள்வியும் கேட்க மாட்டேன் ... நீங்க  கேள்வி கேளுங்க பார்ப்போம் ..... அடுத்த எபிசொட் ல மீட் பண்ணுவோம் அதுவரை  ரகுவும் ஜானகியும் உங்க மனதை பாடாய் படுத்த என் வாழ்த்துக்கள்... பை பை ) 

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.