(Reading time: 39 - 77 minutes)

 

ஹேய்… வா… அங்கே… உன் ராமனைப் பார்க்க போகலாம்… வா… அங்கிளை அப்பறம் வந்து பார்த்துக்கலாம்…” என்றதும் நனவுக்கு வந்தவள் சற்று முன் இருந்த மோன நிலையுடன் அங்கிருந்து அகன்றாள் நந்துவுடன்…

“அங்கிள் உங்களுக்கு வேற தனியா சொல்லணுமா?.. வாங்க…” என்று அவனை எழுப்பி இழுத்துச் சென்றான் சித்து ஆதியை…

அவளின் எதிரே நின்றவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்… அவள் விழிகளிலே மூழ்கிவிட துடித்துக்கொண்டிருந்தன அவனது அழகிய விழிகள்…

“சாரி… ராம்… மன்னிச்சிடுங்க… உங்ககிட்ட சண்டை போடனும்னு வந்தேன்… ரொம்ப தப்புதான்… ஆனா… ரொம்ப நன்றி…. என்னோட சீதாவை என் கண்ணுல காட்டினதுக்கு… நிஜமா என் சீதாவை பார்க்க தான் என்னை இன்று என் பிறந்த நாள் அதுவுமா, உங்க சந்நிதிக்கு வர வச்சீங்களா?... எப்படியோ, நீங்க செஞ்ச உதவியை நான் மறக்கவே மாட்டேன்… தேங்க் யூ ராம்…” என்று மனமார நன்றி சொன்னான் ஆதி… பிறகு,

““இதுவரை சலனப்படாத என் மனம், இன்று ஏன் ஸ்ரீராம்… அதும் அவளைப் பார்த்து?... அவள் விழிகள் ஏன் என்னை, என் மனதை தாக்கி கொல்கிறது?... நீ உன் சீதையை கண்டதும் காதல் கொண்டது போல், நானும் என்னவளைப் பார்த்து காதல் கொண்டு விட்டேனா?... அவள் விழிகளில் பல நூறாண்டு நாங்கள் இருவரும் வாழ்ந்த உணர்வு எனக்கு ஏன் அந்த ஒரு சில நிமிடங்கள் தோன்றியது?... ஓரிரு வினாடிகளில் ஒருவரிடம் மனதை பறிகொடுப்பது சாத்தியமாகுமா?... ஆண்டாண்டு காலங்கள் வாழ்ந்துவிட்ட நிறைவை தந்துவிட முடியுமா?... எனக்கு ஏற்பட்ட உணர்வு அவளுக்குள்ளும் வந்திருக்குமா?... அவள் விழிகள் என்னிடம் பொய் சொல்லவில்லையே… எனில்… நானும் அவளும் ஒன்று சேர்வோமா வாழ்வில்?... இது நடக்குமா?... எங்களை சேர்த்துவை இறைவா… எல்லோரையும் காப்பாற்றுப்பா” என்று மனமுருக வேண்டிக்கொண்டான் ஆதர்ஷ்…

“காட்…. சாகரி… வீட்டுக்கு போனதும் எங்களை திட்டாம நீதான்ப்பா காப்பாத்தணும்… அவளுக்கு நாங்க அந்த அங்கிளை காட்டினதுக்கு எங்களை இன்னைக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டாளே அவ… பட்… நாங்க செஞ்சதும் தப்பு தான்,,, முன்ன பின்ன தெரியாத ஒருத்தரை… அவளுக்கு இன்ட்ரொட்யூஸ் பண்ணி வைக்கணும்னு சர்ப்ரைஸ் ப்ளான் போட்டா எங்களை கொல்லாம வேற என்ன செய்வா அவ… அந்த அங்கிள் ரொம்ப நல்லவரா தெரியுறாரே எங்களுக்கு… சாகரி மாதிரி… எங்களுக்கு அந்த அங்கிளும் ஃப்ரெண்டா வேணும், சாகரி, நாங்க, ஆதர்ஷ் அங்கிள், அப்பறம் மயில் எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்… அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும் காட்…” என்று வேண்டிக்கொண்டனர் நந்துவும் சித்துவும்…

“இதுவரை சலனப்படாத என் மனம், இன்று ஏன் ஸ்ரீராம்… அதும் அவரைப் பார்த்து?... அவர் விழிகள் ஏன் என்னை வில்லிலிருந்து தொடுத்த கணையாய் என் மேல் பாய்கிறது?... சீதா உன்னை கண்டதும் காதல் கொண்டது போல், நானும் இவரைப் பார்த்து காதல் கொண்டு விட்டேனா?... அவர் விழிகளில் பல நூறாண்டு நாங்கள் இருவரும் வாழ்ந்த உணர்வு எனக்கு ஏன் அந்த ஒரு சில நிமிடங்கள் தோன்றியது?... ஓரிரு வினாடிகளில் ஒருவரிடம் மனதை பறிகொடுப்பது சாத்தியமாகுமா?... ஆண்டாண்டு காலங்கள் வாழ்ந்துவிட்ட நிறைவை தந்துவிட முடியுமா?... எனக்கு ஏற்பட்ட உணர்வு அவருக்குள்ளும் வந்திருக்குமா?... அவர் விழிகள் என்னிடம் பொய் சொல்லவில்லையே… எனில்… நானும் அவரும் ஒன்று சேர்வோமா வாழ்வில்?... இது நடக்குமா?... எங்களை சேர்த்துவை இறைவா… எல்லோரையும் காப்பாற்றுப்பா” என்று ஆதி வேண்டியதையே சாகரிகாவும் மனமுருக வேண்டிக்கொண்டாள் சாகரி…

மனங்கள் ஒன்றுபட்டால், எண்ணங்களும் ஒன்றுபடும் மாயம் இதுதான் போல…

காதல்… எந்த நிமிடம், எவரிடத்தில் வரும் என்று சொல்ல முடியாது… முன்கூட்டியே கணிக்கவும் முடியாது… தென்றல் போல, சட்டென்று மனதை வருடும் பூங்காற்று தான் காதல்… அது நிகழ, மாதங்கள், வருடங்கள், நாட்கள், வாரங்கள் என்று எதுவும் தேவையில்லை… ஒரு நொடி, இன்னும் சொல்லப்போனால், ஒரே ஒரு வினாடி போதும்…. கண் இமைக்கும் நேரத்தில், விழிகளோடு கலந்து, இதயத்தோடு பேசிக்கொள்ளும் அழகான மொழி தான் காதல்… சில மணித்துளிகளில் வாழ்க்கையே அவன்/அவள் தான் என்று எண்ணங்கள் கொள்ளும் அற்புதம் தான் காதல்… உயிரோடு உயிர் பிணைந்துவிட்டது போல் உண்டாகும் பந்தம் தான் காதல்…

காதல்

ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையில் தோன்றும் அழகான உணர்வு

அதைபார்க்க முடியாதுஆனால்

உணர முடியும்

நம்மை அது கடந்து செல்லும்போது…”

ஆதி-ரிகா வாழ்விலும் காதல் கடந்து செல்லும் தருணம் இனிமையாக அவர்களுக்கே அதிர்ச்சியாய் இருந்தது..

“இந்தாம்மா… பிரசாதம் வாங்கிக்கோ… இந்தாங்க தம்பி… நீங்களும் வாங்கிக்கோங்க… ஷேமமாய் இருங்கோ… கண்டிப்பா அந்த பகவான் நீங்க மனசுல நினைச்சதை நிறைவேத்துவார்…” என்று இருவரிடத்திலும் சொல்லிவிட்டு, அர்ச்சனைத்தட்டை மட்டும் மாற்றி கொடுத்துவிட்டு போய்விட்டார் குருக்கள்…

“சாகரி… வா… சுற்றி கும்பிட்டு விட்டு, வீட்டுக்கு போகலாம்…” என்றான் சித்து…

“ஹ்ம்ம்…” என்றாள் அவள்…

கோவிலைச் சுற்றி அவள் மெதுவாய் நடக்க, அவளின் பின்னே ஆதியும் அவளைப் பார்த்துக்கொண்டே நடந்தான்… அப்போது தான் அவளின் கூந்தலை கவனித்தான்… இவ்வளவு நீளமான கார்கூந்தலா என்னவளுடையது… அவன் அவளை தன்னவள் என்றே முடிவெடுத்து அவளுடன் வாழ்ந்து வருகின்றான் அவளைப் பார்த்த கணம் முதல்… அவனுக்குப் பிடித்த மல்லிகை வேறு சூடியிருந்தாள் அவள்… இது போதாதா அவன் அவளைப் பார்க்க…

அவளோ சற்றும் திரும்பி அவனைப் பார்த்தாள் இல்லை… நேராக கோவிலைச்சுற்றி நடந்து கொண்டேயிருந்தாள் மிக மெதுவாக… முதல் இரண்டு சுற்று முழுவதும் அவளை அவன் பின் தொடர்ந்தான்… மூன்றாவது சுற்றில் அவளை கடந்து வேகமாக சென்றான்… இப்பொழுது அவனைப் பின் தொடர வேண்டிய கட்டாயத்திற்கு அவள் தள்ளப்பட்டாள்…

ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் சிறிது படர்ந்திருக்க, அவன் அதன் மீது காலை வைத்து நடந்து தனது பாத சுவடுகளைப் பதித்து சென்றான் அவனே அறியாமல்… நிதானமாக நடந்தவள் அவனின் பாத சுவடுகள் வந்ததும், அதை தாண்டி செல்ல நினைத்தவள், என்ன நினைத்தாளோ, அதன் அருகிலே அவளது சுவடையும் சேர்த்தே பதித்து நடந்தாள்… என்னவோ அவளுக்கு அவன் அருகிலே நடந்து போகும் இன்பத்தை அளித்தது அவை… தன்னை எண்ணியே சிரித்துக்கொண்டவள், யாரேனும் பார்க்கிறார்களா என்பதையும் கவனித்தாள்… யாரும் பார்க்கவில்லை… அடுத்த அடியையும் அதே போல் அவள் வைத்து இந்த முறையும் யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தாள்… இந்த முறையும் யாரும் தென்படவில்லை அவளுக்கு… மூன்றாவது அடியையும் வைத்த போது… தூரத்தில் யாரோ வருவது போல் தோன்ற சட்டென விரைந்து நடந்தாள்….

“சாகரி… என்னாச்சு… இன்னைக்கு உனக்கு… ஏன் இவ்வளவு மெதுவா நடக்குற?... இப்படி நீ நடந்தா, நாம நாளைக்கு தான் வீட்டுக்கு போக முடியும்…” என்றாள் அவளுக்கு முன் சென்று கொண்டிருந்த நந்து சாகரியிடம்…

“இல்ல நந்து… அது வந்து…” என்று இழுத்தாள் அவள்…

“என்ன இல்லை… என்னவோ போ. நீ ஒரு மாதிரி தான் இருக்கே சாகரி… “ என்றான் சித்து சற்று கோபமாக…

அவள் பதில் சொல்வதற்கு முன், “சரி சரி.. விடு… வா அங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்…” என்றாம் நந்து…

மூவரும் அங்கிருந்த சன்னிதிக்கு பக்கவாட்டில் அமர்ந்தனர்… அப்போது ஆதியும் அங்கே வர,  
(“இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தார்?... எனக்கு முன் தானே நடந்து வந்தார்… ஏன் இவ்வளவு தாமதம்?...” என்று யோசித்துக்கொண்டிருந்தாள் அவள்…)

“அங்கிள் இங்கே வாங்க…” என்று கைஆட்டினான் சித்து சாகரி இருப்பதை யோசிக்காமல்…

“இதோ வருகிறேன்….” என்று அவன் சொல்லவும்,

அவளுக்கு தூக்கிபோட்டது… இவர் இங்கே வந்தால் என் நிலை என்ன ஆவது?... சும்மாவே இவரைப் பார்த்து என் பேச்சு போய்விட்டது… இப்போது இங்கே வந்து அமர்ந்தால், அவ்வளவு தான் நான்… என்றெண்ணியவள்..

“சித்து… அவரை ஏன் இங்கே கூப்பிடுற,,” என்று கேட்டதும் தான்… அவனுக்கு உறைத்தது..

(ஆஹா… இவகிட்ட ஏற்கனவே திட்டு வாங்கப் போறது உறுதின்னு தெரிஞ்சும், இப்படி மறுபடியும் தப்பு பண்ணி மாட்டிகிட்டியே சித்து சாகரிகிட்ட… ஹ்ம்ம்… சரி.. சமாளிப்போம்…) என்றபடி,

“சாகரி… பாவம், கோவிலில் எல்லாரும் லேடீஸா இருக்காங்க… நான் தான் பையன்… அதான் அவரை இங்கே கூப்பிட்டேன்… உனக்கு பிடிக்கலன்னா வேண்டாம்.. நான் அவரை அங்கேயே இருக்க சொல்லிடுறேன்…” என்றான் சித்து அவளைப் பற்றி தெரிந்தமையால்…

அவளுக்கு அடுத்தவர் நோக நடப்பது பிடிக்காது… அடுத்தவருக்கு உதவி தாராளமாக செய்பவள்… எனவே தான் சித்துவும் தைரியமாக பேசினான் அவளிடம்…

“வேண்டாம் சித்து…. பாவம்… அவர் வரட்டும்…” என்றாள் வேகமாக….

(அப்பாடா சம்மதிச்சிட்டாள்…. இவளை சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள ஷ்…. அப்பா…. என்னல்லாம் பண்ணவேண்டியிருக்கு…. என்றெண்ணிக்கொண்டான் சித்து…)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.