(Reading time: 17 - 34 minutes)

 

வ்வளவு நீளமாக பேசியவளை கண் கொட்டாமல் பார்த்தான் சந்துரு. எப்படி இது? அவன் முதலில் பார்த்த நந்துவிற்கு தேவர் மகன் படத்தில் வரும் ரேவதியை போல் வாயை திறந்தால் வெறும் காற்று தான் வரும். இப்போது, சிறிது நாட்களாக அவளிடம் மாற்றம் தெரிகின்றது. ஒருவேளை மெட்டூரிட்டி வருகிறதோ? அதுவும் நல்லதுக்கு தான்.

எல்லோரிடமும் யோசியாமல் பேசி விடுபவன், அவளின் மென்மையான குணம் அறிந்து சிறிது யோசித்து தான் பேசுகிறான். (முதல்ல நந்துவை பத்தி தெரியறதுக்கு முன்னாடி பேசினதை எல்லாம், நீங்க கணக்குல எடுத்துக்க கூடாது, அதெல்லாம் லூலூலாய்க்கு)

அவ்வளவு நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு, மீண்டும் பழைய குணம் வந்து விட, தலையை குனிந்துக் கொண்டாள்.

இவ்வளவு நேரம் அவளின் மெட்டூரிட்டியை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு, இப்போது அவள் பழைய படி வெட்கப்படுவதை பார்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டான் (பாஸ் நீங்க நந்து எதை செஞ்சாலும் ரசிக்கறீங்க.)

ங்கிருந்த இரண்டு நாட்களுமே அவர்கள் இருவருக்குமே மகிழ்ச்சியாக தான் இருந்தது.

அதை விட நந்துவின் தந்தைக்கு அதிக மகிழ்ச்சி எனலாம். அவருடைய பெண் வந்திருக்கிறாள். கூடவே, தன் தங்கையின் மகன், இத்தனை வருடங்களாக அவர் யார் வரவை எதிர்நோக்கி இருந்தாரோ அவர்களின் ஒருவன் இங்கு வந்து விட்டான். இன்னும் அவன் அம்மாவும், அப்பாவும் எல்லாம் சரியாகி இங்கு வருவதற்கு நிறைய நாட்கள் ஆகாது என்று தோன்றியது அவருக்கு. அப்படி அவரின் தங்கை இங்கு வரப் போகும் நாட்களை எண்ணி ஆவலோடு எதிர் பார்த்திருந்தது அவரின் மனம்.

அவருக்கு வயலில் வேலை அதிகமாக இருந்ததால், அவரால் சந்துருவிற்கு ஊரை சுற்றி காண்பிக்க எல்லாம் இயலவில்லை. அவர் வயலுக்கு போகும் போதே சந்துருவும், நந்துவும் அவருடனே வயலை சுற்றி பார்க்கிறேன், தோப்பை சுற்றி பார்க்கிறேன் என்று கிளம்பி விடுவார்கள். அவர் யாரும் ஏதும் சொல்லாத படியாக இரண்டு, மூன்று குட்டி வாண்டுகளை அவர்களுடன் அனுப்பி விட்டார்.

எல்லோரும் சேர்ந்து அந்த இரண்டு நாட்களும் கும்மாளம் போட்டனர்.

நந்துவிற்கு விருப்பமே இல்லாமல் அந்த ஞாயிறு மாலையும் வந்தே வந்து விட்டது. வருத்தத்துடனே கிளம்பினாள்.

அவள் தந்தை கார் அரேஞ்ச் செய்து இருவரையும் காரில் அனுப்பி வைத்து விட்டார்.

விடியற்காலையில் விடுதிக்கு வந்து விட்டு, சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, பிறகு கல்லூரிக்கு சென்றாள் நந்து.

நந்து அறைக்கு வந்ததில் இருந்து தீப்தி வந்து வந்து ஏதாவது பேசிக் கொண்டிருந்தாள்.

“ஏதாவது வேணுமா”

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்பறமா கிளம்பிக்கலாம்”

“இரு. உன் ட்ரஸ் நான் அயர்ன் செஞ்சி தரேன்”

இப்படி ஏதாவது அவளாக இடையில் வந்து பேசிக் கொண்டே இருந்தாள். சில நாட்களுக்கு முன்பாக இருந்தால் நந்துவிற்கும் அவள் இப்படி பேசியது சந்தோஷமாக தான் இருந்திருக்கும். ஆனால் இப்போதோ அவள் ஜெனியின் வாழ்க்கையில் குறுக்கிடுவது போல இருக்கிறது. போல இருக்கிறது என்ன, அவள் நேராகவே எல்லார் எதிரிலும், கவினிடம் ஐ லவ் யூ என்று கூறினாள் தானே, பின்பு எப்படி அவளிடம் நார்மலாக பேச இயலும், எனவே அவள் வேண்டாம், இருக்கட்டும், நானே பார்த்துக்கறேன் என்று ஒரு வரியிலேயே பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

ஆனால் அதை புரிந்துக் கொண்டு தீப்தி விலகி கொண்டால் தானே. அவளும் தயாராகி நந்துவுடனே கல்லூரிக்கு வருவதாக கூறினாள்.

நந்து வியந்து நோக்கினால், “ஏன் நான் வரக் கூடாதா” என்று வேறு கேள்வி எழுப்பினாள்.

“அப்படி எல்லாம் இல்லை” என்றவாறு அவளுடன் சென்று அனு, ஆருவிடம் சென்றால், அவர்கள் நந்துவை ஒரு மாதிரி பார்க்கிறார்கள்.

என்ன செய்வது, எப்படியோ ஒரு வழியாக எல்லோரும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார்கள்.

ல்லூரிக்கு சென்ற பிறகும், நந்துவிற்கு ஊரில் இருந்த நியாபகங்களே அவள் நினைவில் ஓடிக் கொண்டிருந்தது.

அவளை அந்த நிலையில் பார்த்த அனு அவளை ஓட்டியே தீர்த்து விட்டாள்.

நந்து என்ன தான் கொஞ்சம் வளர்ந்திருந்தாலும், அனு அளவிற்கு அவளால் பேச இயலாததால் இப்போதும் அவளிடம் தோற்றுக் கொண்டு தான் இருந்தாள்.

தீப்தி இடையிடையில் எல்லோரும் ஏதாவது பேசும் போது, அவளும் தானாக அந்த பேச்சில் இணைந்துக் கொண்டாள்.

எல்லோருக்கும் இது தான் புரியவில்லை. என்ன ஆயிற்று இவளுக்கு?

அங்கு வந்த அருண் தான் அவளை ஆராய்ச்சி பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனருகில் சென்ற அனு “என்னடா. அவளை சைட் அடிக்கிற. உனக்கு அந்த பேய் ஓகே வா” என்றான்.

“ஐயய்யோ” என்று அலறினான் அருண்.

“நீ வேற ஏன் மா, ஏன் உனக்கு இந்த கொலைவெறி. உனக்கு என் மேல ஏதாச்சும் கோவம் இருந்தா, நாலு அடி வேணும்னாலும் அடிச்சிக்க. அதுக்கு ஏன் இப்படி எல்லாம் பேசற”

“அப்ப எதுக்கு அப்படி பார்க்கற” என்றாள் அனு.

அதற்குள் தீப்தி அவர்களின் அருகில் வந்தாள்.

இவர்கள் இருவரும் அவளைக் கண்டு கொல்லாதவாறு பேசிக் கொண்டிருந்தார்கள்.

அருண் ஜாடையாக அவளை காண்பித்து “நேற்று இல்லாத மாற்றம் என்னது” என்று பாடினான்.

அவன் பாடியதை கேட்டு அவனை முறைத்து விட்டு, தீப்தி தள்ளி செல்ல,

“இப்பவாச்சும் என்ன நம்புறியா” என்றான் அருண்.

“ஓகே ஓகே, இப்ப நம்பறேன்”

மாலையில் க்ளாஸ் முடிந்த பிறகு, சந்துரு ஒரு பெரிய பேகை எடுத்துக் கொண்டு வந்தான்.

“என்ன அண்ணா அது” என்றாள் ஆரு.

அவன் நந்துவை பார்த்துக் கொண்டே “அதுவா என் மாமனார் வீட்டு சீர்” என்றான்.

எல்லோரும் சிரிக்க,

அனு “அப்படியா, இப்பவே உங்க மாமனார் உங்களுக்கு சீர் எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாரா. பரவால்லயே. என்ன தீபாவளி சீரா” என்றாள்.

“ம்ம். ஆமாமா. தீபாவளி சீரே தான்”

“ஓஹோ” என்று எல்லோரும் குரல் எழுப்பினார்கள்.

“ம்ம்ம், நான் பெரிய மனசு பண்ணி எனக்கு வந்த சீரை எல்லாம் உங்களுக்கு கொடுக்கலாம்ன்னு கொண்டு வந்தேன். பாவம் நீங்க எல்லாம் ஹாஸ்டல்ல இருக்கீங்க இல்ல”

அதற்குள் ரோஷமாக நந்து “அதெல்லாம் அப்பா எனக்காக கொடுத்து அனுப்பினது. நான் அதை எடுத்துட்டு போக மறந்து கார்லயே வைச்சிட்டு போய்ட்டேன்” என்றாள்.

“ஓ. வேணும்னா இப்பவே போன் பண்ணு மாமாவுக்கு. இது யாருக்குன்னு கேட்கலாம்”

“கரெக்ட், போன் பண்ணு” என்று எல்லோரும் சொல்ல, அவளும் தான் என்ன செய்வாள், அவள் அப்பாவிடம் இது போல எல்லாம் பஞ்சாயத்து வைத்தால் அவரும் தான் என்ன செய்வார்.

இப்படியே சிறிது நேரம் எல்லோரும் நந்துவை ஓட்டி விளையாடினார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.