(Reading time: 13 - 25 minutes)

 

க்தியின் குணம் போக போக நமக்கே தெரிய வரும் .. சுருக்க சொல்லனும்ன ஷக்தி ஒரு திருக்குறள் .. ஏழே வார்த்தைகளில் எத்தனை அர்த்தங்கள் ?  அப்படித்தான் ...  ( கொடுத்த காசுக்கு ஜாஸ்தியாவே பில்ட் அப் கொடுத்திட்டேன் ஷக்தி ...முடிஞ்சா மீட்டர்கு மேல பார்த்து போட்டு கொடு ...இப்போ கதைக்கு வருவோம் )

சங்கமித்ரா தலையை சரித்து அழகாய் கேட்ட விதத்தில் மொத்தமாய் கோபத்தை தொலைத்தாலும், அதை வெளிக்காட்டாமல் அவளெதிரில் இருந்த சோபாவில் பொத்தென அமர்ந்தாள் தேன்நிலா...

" ஹ்ம்ம் நீ ப்ரெக்னன்ட் ஆ இருக்கன்னு உனக்கு ஞாபகம் இருக்கே.. அதுவரை எனக்கு சந்தோசம் தாண்டி .... சரி இப்போ சொல்லு இந்த நேரத்தில் எதுக்கு வீட்டை விட்டு வந்த? "

"  முதலில் நீ எனக்கு பதில் சொல்லு தேனு "

" என்ன சொல்லணும் சங்கு ? "

" நீ என் பக்கமா இல்ல ஷக்தி பக்கமா ? "

" ஹ்ம்ம் கீழ்பாக்கம் டீ "

" நைஸ் டைமிங் ஆனா ரைமிங் சரி இல்ல "

" இறைவா ..... சரி ஓகே உன் பக்கம்தான் .. இப்போ சொல்லு என்ன இந்த பக்கம் ? ஏதும் சண்டையா ? ஏதோ ஞாபகத்துல உன் ஹீரோகிட்ட போயி உங்க ரெண்டு பேருக்கும் சண்டையான்னு கேட்டேன் "

" மூச்சு விடுற சத்தம் கூட கேட்டுருக்காதே "

" எசேக்ட்லி ....எப்படிடி பக்கத்துல  இருந்து பார்த்த மாதிரி சொல்லுற ? "

" என் ஷக்தியை எனக்கு தெரியாதா தேனு ? சின்ன வயசுல இருந்து பார்க்குறேன்ல ... "

" இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...."

" வேற எதுக்கும் குறைச்சல் இல்லடி ...."

" அப்போ ஏன் இங்க வந்தியாம் ? "

" சூப்பர் தேனு .. நீ பேசாம என்னை மாதிரி லாயர் ஆகிருக்கலாம் ..எவ்வளவு சுத்தி வளைச்சாலும் கரெக்டா பாயிண்ட் கு வர்றியே ? "

" பட் நீ மட்டும் என்னை மாதிரி டாக்டர் ஆகிடாதே சங்கு .. பிறக்க போற குழந்தை உன் அறுவையை கேட்டுட்டு 'என்னை விடு நான் எங்க அம்மாவின் கருவறையிலேயே  இருக்கேன் ' நு ரிடர்ன் போயிடும் "

அவங்க ரெண்டு பெரும் இப்படி பதிலுக்கு பதில் பேசுற நேரத்துல நாம அவங்களை பத்தி கொஞ்சம் பார்ப்போம்...

ங்கமித்ரா- தேன்நிலா இருவரும் விதி வரைந்து இணைத்த  அழகான கோலங்கள் .... எத்தனை வயசுல இருந்து இவங்க ரெண்டு பேரும் நண்பர்களா இருக்காங்கன்னு அனைவருமே ஆச்சர்ய படுற அளவுக்கு அப்படி ஒரு அன்னோன்யம் அவர்களின் நட்பில் ! ஆனா அவங்க இருவருமே நண்பர்கள் ஆனது இரண்டு வருஷமாகத்தான் ...

நம்ம தேன்நிலா ஒரு கைநிகொலோஜிஸ்ட் ..... இந்த உலகத்துக்கு வர்ற குட்டி குட்டி தெய்வங்களை தன் கரங்களால் வரவேற்கனும்னு அவள் ரொம்ப ஆசைபட்டு படிச்சு தேர்ந்தெடுத்த வேலை இது ..

 அதே மாதிரி நம்ம சங்கமித்ரா ஒரு நேர்மையான போலிஸ் ஆபீசர் இல்ல வழக்கறிஞர் .. அவளின் பேச்சுத்திறமையை ( ஓ அதை அறுவைனு சொல்லணுமோ ? ) பார்த்து சின்ன வயசுல இருந்தே " பேசாம நீ லாயர் ஆகிடும்மா ' அப்படின்னு குடுகுடு  தாத்தா தொடங்கி பட்டாம்பூச்சி மாதிரி திரியுற சின்னசிருசுங்க உட்பட அனைவருமே மும்மொழிய , அவளுக்குமே அந்த தொழில் ஈடுபாடு வந்தது ...

 பொதுவாகவே வக்கீல் கிட்டயும் டாக்டர்கிட்டயும் பொய் சொல்ல கூடாதுன்னு சொல்லுவாங்க இல்லையா ? அதுனால  எவ்வளவு  பெரிய கேடி வந்தாலும் எங்க கிட்ட அரிச்சந்திரனாகத்தான் இருப்பாங்க  அப்படின்னு தோழிகள் இருவரும் தோள் தட்டிகிட்டு அடிகடி போஸ் கொடுப்பாங்க.. அவங்க இருவருமே நண்பர்களானதும் ஒரு வழக்கு மூலமாகத்தான் .. அதானலேயோ என்னவோ இருவரும் ஒருவரை ஒருவர்  எவ்வளவு நேசிக்கிறாங்களோ அந்த அளவுக்கு அவர்களின் தொழிலையும் மதிப்பாங்க .. மதிப்பும் நேசமும் சங்கமித்த நட்பில் பிரிவேது ?

ஹான் .. இன்னொரு முக்கியாமான விஷயம் மறந்துட்டேன் பாருங்க .. சங்கமித்ராவை நிலா சங்கு சங்குன்னு கூப்பிடறதும், தேன்நிலாவை மித்ரா தேனு தேனு நு கூப்பிடறதும் அவங்களுடைய வழக்கம் .. தேன்நிலா மித்ராவிற்கு இணையான வாலு என்றாலும் ஹாஸ்பிட்டல்ல காலடி வெச்சதும் அவளொரு பொறுப்பான  மருத்துவரா மாறி விடுவா ... இப்போ நாம பார்க்குற நிலா கூட  அப்படிதான் ... ஒரு நாள் நான் உங்களை நிலாவின் வீட்டுக்கு கூட்டிடு போறேன் .. அங்க தெரியும் தேன்நிலாவின் லீலைகள் ...  ..  " ஏன் அப்படின்னு " கேட்டா , மருத்துவம்  என்பது வேலை மட்டும் இல்ல ..அது ஒரு பொறுப்பான சேவை ... தன்னுடைய விளையாடுத்தனம் எந்த விதத்திலும் தனது வேலையை பாதிக்க கூடாதுன்னு " சொல்லுவா .... ஆனா இந்த மாதிரி கேள்வியை நீங்க நம்ம மித்ரா கிட்ட கேட்கவே முடியாது ... ஏனென்றால், தூக்கத்தில் தவிர வேற எந்த நேரங்களிலும் மித்ரா பேசாமல் இருந்ததில்லை .. ( நம்ம ஷக்திக்கு செம்ம ஜோடி ல ) வாங்க இப்போ அவங்க  பக்கம் போவோம்..

" பாருடா என்கூட சேர்ந்து நீ கூட நல்ல பேசுறியே தேனு ... குட் குட் "

" அம்மாடி ... போதும் தாயே... எனக்கு ப்ரேக் கொடு .. ஹார்லிக்ஸ் குடிக்கிறியா ? " என்று கேட்டவள் காப்பீயும் ஹார்லிக்ஸ் உம் போட்டுவிட்டு வர, மித்ராவோ தன் செல்போனில் அந்த பாடல் காட்சியை பார்த்துக்கொண்டே தன்னிலை மறந்து பாடிக்கொண்டிருந்தாள்...

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது

 முரடா உனை ரசித்தேன்

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது

 கர்வம் அதை மதித்தேன்

மூடி குத்தும் உந்தன் மார்பு

 என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம்

 அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே

 நீயும் போனால் நானில்லையே

நீரடிப்பதாலே மீன் அழுவதில்லையே

ஆம் நமக்குள் ஊடல் இல்லை

" ஊடல் இல்லையா ?..... அப்பறம் என்ன விஷயமா அர்த்த ராத்திரியில் இங்கு வந்த செல்லம் ? "

" ஆரம்பிச்சுட்டாயா கேள்வியின் நாயகி .... உனக்கு மதிதான் சரியான ஜோடி "

" பார்த்தியா பார்த்தியா நீ எஸ்கேப் ஆகுறதுக்காக அவரை பத்தி பேசுற ? "

" யம்மா என்ன அறிவு என் தேனு செல்லத்துக்கு ...சுத்திதான் போடணும்... "

" அதெல்லாம் நாளைக்கு போடு .. எனக்கு இப்போ வேலை வந்துருச்சே .. நீ நம்ம வீடுக்கு போறியா ? "

" இப்போவா லேட்டாச்சே தேனு ? "

" அது இப்படி ஜான்சி ராணி மாதிரி வர்றதுக்கு முன்னாடி பார்த்திருக்கணும் சங்கு .. நான் அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிடேன் .. அவரு இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாரு.. "

" ஓ மனோ இங்க வராரா?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.