(Reading time: 9 - 17 minutes)

 

கார்த்தால எழுந்து பல்தேச்சு, காபி குடிச்சு, குளிச்சு, டிபன் சாப்பிட்டு, டிவி பார்த்து, திரும்பவும் லஞ்ச் சாப்பிட்டுன்னுதான்.  இப்படி தேச்சு, குடிச்சு, சாப்பிட்டு, பார்த்து, சாப்பிட்டுன்னு ஏகப்பட்ட வேலை செஞ்சதால டயர்ட் ஆகி தூங்கலாம்ன்னு பார்த்தேன்.  அப்புறம் நீங்க ஏதோ முக்கியமா பேசணும்ன்னு சொன்னேளேன்னுதான் வந்து உக்கார்ந்தேன்.  கடைசில எலியே நான்தானா”

“அப்பா நீங்க என்ன சொல்ல வந்தேளோ அதை சொல்ல ஆரம்பிங்கப்பா, இவாளை பேசவிட்டா இன்னைக்கு முழுக்க உங்களுக்கு பேச சான்சே கிடைக்காது”, சமயத்தில் ஆபத்பாந்தவனாக கைக் கொடுத்தான் ஹரி.

“கௌரிம்மா நீ ஒரு வருஷத்துக்கு முன்னால வேலைக்கு சேரும்போது அப்பாகிட்ட ஒண்ணு சொன்னே ஞாபகம் இருக்கா?” என்று ஆரம்பித்தார்.

“என்ன சொன்னேன்.  ஆங் ஞாபகம் வந்துடுத்து, அம்மாக்கிட்ட எனக்கும் வேலை கிடைச்சாச்சு, இனிமே சனியனே, குட்டி மூஞ்சுறு, பிசாசே, இந்த மாதிரி எல்லாம் சொல்லாம give respect and take respect அப்படின்னு சொன்னதா, இல்லை workers law பிரகாரம் 5 நாள்தான் வேலை செய்யலாம், அதுனால சனி, ஞாயிறுல என்னை எந்த வேலையும் செய்ய சொல்லக்கூடாதுன்னு சொன்னதா, எதை சொல்றேள்”

“ஏன்னா இந்த பிசாசு வேலைக்கு போறதுக்கு முன்னாடி இத்தனை பேசித்தா, நீங்க சொல்லவே இல்லையே.  ஏண்டி நீ மட்டும்தான் வொர்க்கிங்க்கா, நான் வீட்டுல செஞ்சாலும் அதுவும் வேலைதான், எனக்கு யாரு லீவு கொடுக்கறது.” ஆற்றாமையில் பொரிந்து தள்ளினாள் ஜானகி.

“ஜானு எதுக்கு இத்தனை கோவம், விடு அவ உன்னை வம்புக்கு இழுக்கணும்னே பேசறா.  அது இல்லை கௌரி நான் படிச்சு முடிச்ச உடனேயே உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்ன்னு உன்கிட்ட கேட்டப்போ இல்லப்பா ஒரு 2 வருஷம் வேலை பார்த்துட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்ன, அதைத்தான் கேட்டேன்.”, Atlast point க்கு வந்தார் ராமன்.

“ஒ அதுவா, நன்னா ஞாபகம் இருக்குப்பா, ஆனால் நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சு ஒரு வருஷம்தானே ஆறது, இன்னும் கூட கெடு முடிய ஒரு வருஷம் இருக்கேப்பா, அதுக்குள்ள எதுக்கு மாநாடு?” 

“இல்லைம்மா இன்னைக்குப் பார்க்க ஆரம்பிச்சா உடனே நாளைக்கே மாப்பிள்ளை வந்து குதிக்கப் போறதில்லை, அதுனால மெதுவா ஜாதகம் பார்க்க ஆரம்பிக்கலாம்ன்னு நினைக்கிறேன். ஜானு நீ என்ன சொல்றே?”

ஜானகி அதற்குள் இவள் வளர்ந்து கல்யாணத்திற்கு நிற்கிறாளா, போற இடத்தில ஒழுங்காக குப்பை கொட்டுவாளா என்று அதிர்ச்சியில் சிலையாக உட்கார்ந்துவிட்டாள்.

“அம்மா, அம்மா என்ன ஆச்சும்மா, இப்படி freeze ஆகி உக்காந்துட்டே, கௌரிக்கு கல்யாணம் அப்படிங்கறது ஜீரணிக்க கஷ்டமான விஷயம்தான், அந்த பையனை நினைத்தால் இப்போவே கஷ்டமாத்தான் இருக்கு.  இதுக்கெல்லாம் மலைச்சு போய் உக்கார கூடாது, மனசை திடபடுத்திக்கோ.  ஒரு நிமிஷம் அந்த பாவப்பட்ட ஜீவனுக்காக ப்ராத்தனை பண்ணிக்கோ, நம்மளால முடிஞ்சது அவ்வளவுதான்.” ஹரி கௌரியை வெறுப்பேற்ற ஆரம்பித்தான்.

“டேய் இங்க பாருடா.  எலி எல்லாம் ஏரோப்ளேன் ஓட்ட நினைக்ககூடாது.  அதுமாதிரி விவேகானந்தர் எல்லாம் கல்யாணத்தை பத்தி பேசக்கூடாது.  கல்யாணம் அப்படிங்கற வார்த்தையே உன் வாய்லேர்ந்து வரக்கூடாது. அது எத்தனை பெரிய அபசாரம் தெரியுமா? அப்புறம் நாளைக்கு வைக்கபோற கிளாஸ் டெஸ்ட்ல உம்மாச்சி உன்னை fail ஆக்கிடபோறார்.” கௌரி தன் பங்குக்கு ஒரு யுத்தத்தை துவக்கினாள்.

ராமனுக்கு BP எகிற ஆரம்பித்தது.  “எல்லாரும் கொஞ்சம் சும்மா இருக்கேளா, மனுஷனை பேச விடாம.  கௌரி அப்பா கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு,நாங்க கல்யாணத்துக்கு பாக்க ஆரம்பிக்கறது  உனக்கு ஒகேயா?  இல்லை உனக்கு வேற யாரையானும் பிடிச்சு இருக்கா?”

ஜானகி இதை கேட்டவுடன் jerkஆகி  freezing நிலையிலிருந்து அதிர்ச்சி நிலைக்கு வந்து “என்னன்னா இப்படி எல்லாம் கேக்கறேள், கௌரி ஆமாம்ன்னு சொல்லி தலைல குண்டை தூக்கி போட்டுடாதடி” என்றாள்.

“ச்சே ச்சே என்னம்மா இப்படி சொலிட்டே, நான் அந்த மாதிரி எல்லாம் பண்ணுவேனா, அப்புறம் உன்னோட பையன் உனக்கும் எனக்கும் நடுவுல சண்டை மூட்டி சொத்தெல்லாம் அவன் எழுதி வாங்கிண்டுடுவானே, அதுக்கு நான் விடுவேனா.  அப்பா இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு ஆபீஸ்ல வேலை டைட்டா இருக்கு.  அதுனால அதுக்கு அப்புறம்ன்னா எனக்கு ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்ல” என்று கூறி ஜானகி வயிற்றில் பால், மோர், தயிர் எல்லாம் வார்த்தாள்

“சரி okம்மா.  எப்படியும் பொருத்தமான ஜாதகம் கிடைத்து பார்த்து பிடித்து எல்லாம் கூடி வர நேரம் ஆகும், அதுனால கவலைப்படாதே. உனக்கு எந்த மாறி வரன் பார்க்கனும்ன்னு சொல்லு, உள்ளுறா, இல்லை வெளிநாடா இருந்தா பரவா இல்லையா?”

“எனக்குன்னு சாய்ஸ் எல்லாம் இல்லைப்பா, எதுவா இருந்தாலும் ஓகே.  ஆனா ஒண்ணே ஒண்ணு, நீங்க பார்த்துண்டா மாறி சப்ப பிகரா எனக்கு பார்க்காதீங்கோ, ஜில்லுனு ஜோரா, சிக்குன்னு கூலா என்னோட ஆள் சும்மா சூப்பரா இருக்கணும் சொல்லிட்டேன்”

“என்னடி பாஷை இது, நீ என்ன சொல்ல வரேனே புரியலை நேக்கு” என்று நொடித்தாள் ஜானகி.

ராமன் வாய்க்குள்ளேயே சிரிக்க, ஹரி வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

“அம்மா அவ சொன்னதுக்கு  உனக்கு அர்த்தம் புரிஞ்சுதுன்னு வைச்சுக்கோ, மகாலக்ஷ்மியா இருக்கற நீ மாகாளியா ஆகிடுவே.  அப்பா இவளோட திருவிளையாடல் எல்லாத்தையும் பைய்யனாத்துக்காராள்ட்ட மொதல்லையே சொல்லிடுங்கோ, நம்மாத்துல இருக்கற மத்தவா மாறிதான் இவளும் சுபாவத்துல சாதுவா இருப்பான்னு அவா தப்பா நினைச்சுக்க போறா” என்று ஹரி  வெடி கொளுத்தி போட ஆரம்பித்தான்.

“ஹரி சும்மா அவளை வம்புக்கு இழுக்காதே, நான் மங்கையர் மலர்லயும், மகாலிங்கபுரத்துலையும் register பண்ணிடறேன்.  தெரிஞ்சவாள்கிட்டையும் கொடுப்போம்.  பார்க்கலாம் ப்ராப்தம் எப்படி இருக்குன்னு.”

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.