(Reading time: 16 - 31 minutes)

 

" டேய் என்ன பண்ணுற எழுந்திரிடா "

" போம்மா சின்ன வயசுல மட்டும் மடில படுக்க வெச்சு பாட்டுலாம் பாடின .. இப்போ என்னனா ? இப்படி குதிக்கிறியே " என்று சிணுங்கிய மகனின் கேசத்தை பாசமாய் கோதி விட்டார் ...

" சரியான அம்மா புள்ள டா நீ .. நாளைக்கு உன்னை நம்பி ஒருத்தி வருவா ...அப்போ நீ என்னதான் பண்ணுறன்னு பார்க்குறேண்டா .. "

" ஹீ ஹீ "

" என்னடா சிரிக்கிற ?"

" இல்ல அவ வந்த என்ன நடக்கும்னு யோசிச்சு பார்த்தேன் "

" டேய் !!"

" அட போம்மா வல்கரா ஒன்னும் இல்ல .. இதே மாதிரி உன் மடியில நான் ஒரு பக்கம் அவ ஒரு பக்கம் படுத்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன் "

" போடா அரட்டை .. சீக்கிரம் குளிச்சிட்டு வா ..காலேஜ் கெளம்பலையா ? "

" தினம் தினம் ஒரே காலேஜ்ல படிச்சு போர் அடிக்குது லக்ஸ் .. உனக்காகத்தான் போறேன் சொல்லிட்டேன் " என்று அவரின் கன்னத்தை கிள்ளினான் ...

" டேய் ...லக்ஸ் நு உன் அப்பா மாதிரியா கூப்பிடுற நீ ? இரு அவருகிட்ட போட்டு கொடுக்குறேன் " என்று சிரித்தார் ..

தன் பிறகு சக்தியும் எழுந்துவிட தனதறையின் கதவை திறந்தவன் அங்கு வாசலில் அமர்ந்திருந்த முகில்மதி அருகே வந்தான் ...

" குட் மோர்னிங் அண்ணா"

" மோர்னிங் டா ..ஸ்கூல் போல? "

" இதோ கெளம்பிட்டேன் "

" ம்ம்ம்ம்"  என்று சிரித்தவன் அவள் தலையை ஆதரவாய் தடவி விட்டு புன்னகைத்து சென்றான் .. அந்த ஸ்பரிசமே அவளுக்கு அவனின் அளவு கடந்த அன்பை உணர்த்தி விட்டு போனது ..

அந்த நினைவுகளை அசைபோட்டு படுத்திருந்தவன், தன் தங்கையிடம் இன்று போனில் பேச வேண்டும் என்று குறித்து கொண்டான் ... இங்க நம்ம ஹீரோ துபாயில் இருக்க, நம்ம ஹீரோயின் என்ன பண்ணாங்க தெரியுமா ? வாங்க பார்ப்போம் ...

கை அளவு நெஞ்சத்துல கடல் அளவு பாசம்  மச்சான்

அளவு ஏதும்  இல்ல அது தான் காதல் மச்சான்

நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்

நெனப்பே போதும் மச்சான்

சொய் சொய் ..

வான் அளவு விட்டதுல வரப்பளவு தூரம் மச்சான்

அளவு தேவை இல்ல அது தான் பாசம் மச்சான்

நாம வேண்டிக்கொண்டாலும் வேண்டா விட்டாலும்

சாமி கேக்கும் மச்சான்

வானொலியில் அந்த பாடல் ஒலிக்க, கட்டிலில் ஏறி தனக்கு பிடித்தவாறு  நடனம் ஆடிகொண்டிருந்தாள் சங்கமித்ரா .. அந்த பாடலில் சத்தத்திலும் அதற்கு இணையாய் அவள் பாடிகொண்டே ஆடும் ஆர்பரிப்பிலும், கையில் இருந்த தோசைக்கரண்டியுடன் அவளறைக்குள் ஆவேசமாய் பிரவேசித்தார் சித்ரா, சங்கமித்ராவின் தாயார் ...

" அடியே நிறுத்து டீ "

" எவ அவ "

" அடிக்கழுதை ... உன்னை என்ன பண்ணுறேன் பாரு "

" ஐயோ மம்மி அடிக்காதிங்க மம்மி .. ஏதோ இசை மழையில் நான்  என்னையும் மறந்து பரவச நிலையில் இருக்கும்போது நீங்க  நிறுத்துன்னு சொன்னதும் அப்படி சொல்லிட்டேன் .. வலிக்கிறது மம்மி ..ப்ளீஸ் விடுங்க .. "

".... "

" அம்மா ... லூசாமா நீ ? " பிதாமகன் லைலா போலவே அவள் கேட்க, மீண்டும் தோசைக்கரண்டியிலே இரண்டடி வாங்கினாள்...

" பாருங்கமா உங்களுக்கே எவ்வளவு மூச்சு வாங்குது ..அப்பறம் ஏன் அடிக்கிறிங்க நீங்க ? வலிக்கிதும்மா...... " என்று அவள் பாவமாய் சொல்லவும் மனம் உருகி போய் விட்டார் சித்ரா ..

" ஐயோ மன்னிச்சிரு கண்ணா ... அம்மா ஏதோ வேகத்துல .. ச்ச எனக்கு அறிவே இல்ல "

" போங்கம்மா இதையே நான் சொன்னா நீங்க அடிப்பிங்க "

" வாயாடி .. உன்னை சமாதனம் பண்ணனும் நெனச்சேன் பாரு என்னை சொல்லணும் .. வக்கீலுக்கு படிக்கிற பொண்ணு மாதிரியா இருக்க நீ ? சின்ன குழந்தையாட்டம் மெத்தை மேலே நின்னு ஆடுற ? அப்படி என்னதான்டி இருக்கு இந்த பாட்டுல .. எப்போ இந்த பாட்டு கேட்டலும் இருக்குற இடம் தெரியாமல்  ஜங்கு ஜங்குன்னு  குதிக்கிற ? "

" அதெல்லாம் தனி பீலிங் மம்மி .. சரி இன்னைக்கு என்ன மெனு சொல்லுங்க ? "

" ஏன் நீ சமைக்க போறியா ? "

" அபச்சாரம் அபச்சாரம்.. காலையிலேயே என்னை பார்த்து என்னை வார்த்தை பேசுறிங்க மம்மி நீங்க ? நானாவது சமையல் பண்றதாவது ! சாப்பாடு புல் கட்டு கட்டனும் இன்னைக்கு ... "

" ஏன் நீ காலேஜ் போகலையா ? "

" போகலை மா "

" ஏன் ? "

" இன்னைக்கு ரெண்டு மூணு கிளாஸ் நடக்காதாம்"

" போன வாரம் வெள்ளிகிழமையும் இதேதானே சொன்ன நீ ? "

" அய்யயோ முன்னாடியே சொல்லிருக்கலாம் ல ?? விடுங்க அடுத்த வாரம் வேற காரணம் சொல்லுறேன்"

" அடி கழுதை .."

" ஹீ ஹீ .. மம்மி  ஆடுன டான்சுக்கும் வாங்குன்ன அடிக்கும் இப்போ ஓவரா பசி எடுக்குது , உங்க கையால ஒரு காபி ப்ளீஸ் "

" சரி சரி எழுந்து வா "

" ச்வீட் மம்மி "

" ச்ச என்னடி இது ப்ரஷ் பண்ணாம கிஸ் பண்ற ? " என்று முகம் சுளித்துகொண்டே கன்னத்தை தடவினார் சித்ரா ..

" சரி இருங்க ப்ரஷ் பண்ணிட்டு வரேன் " என்று ஓடினாள் சங்கமித்ரா ... வேகமாய் ஓடியவள், தன் தமக்கையை மோதி நின்றாள்... கொடி இடை, மான் விழி, கூர் நாசி, தோள் உரசும் கூந்தல், அந்த பிங்க் நிற சுடிதாரில் கிட்ட தட்ட ஹீரோயின் பிந்துமாதவி மாதிரி இருந்தாள் மித்ராவின் தமக்கை வைஷ்ணவி .. கண்களில் ஒரு மிடுக்கு, புன்னகையில் ஒரு திமிர், நடையில் ஒரு தோரணை இவை அனைத்தும் அவள் அழகிற்கு அழகு சேர்த்தாலும் சில நேரம் எரிச்சலையும் மூட்டும் ..

" ஹேய் பிசாசே பார்த்து வர மாட்டியா ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.