(Reading time: 20 - 40 minutes)

 

ன்னை நான் மறந்தால் அதுவே என்னுயிர் இம்மண்ணை பிரிந்த இறுதி நாளாகும் என் சீதை…. உன்னை காயப்படுத்த நான் என் இமைக்கதவுகளை அடைத்துக்கொள்ளவில்லைஉன்னை இத்தனை நாள் இருளெனும் பிரிவில் தனியே தவிக்க விட்ட நான் சில நொடிகள் அந்த இருளில் மூழ்கி போக ஆசைக்கொண்டேனடி பெண்ணேநான் விழி மூடிக்கொண்ட நொடி கூட உன்னால் அதைத் தாங்க முடியவில்லையே…. சிறு பிள்ளை போல் உன்னை மறந்துவிட்டேனா என்று கேட்கின்றாயே…  என் உயிரே நீதானேடி என் கண்மணி… அவ்வாறு இருக்கையில் என் உயிரை விட்டு நானே பிரிவேனா சீதை?... நான் உன்னை மறந்து விடுவேன் என்று எண்ணுகிறாயா?... இப்படி எல்லாம் கூட நீ நினைத்தாயா???

மறப்பேன் என்றே நினைத்தாயோ?...”

என்று இமை திறந்தவன் தன் மனதை அப்படியே அவளிடம் ஒப்பித்தான்….

அவள் கண்களின் அருவி மட்டும் நிற்கவே இல்லை அவனின் மனதை தெரிந்துகொண்டபின்….

செய்வதறியாது தரையைப் பார்த்திருந்தாள் அவள் மௌனமாக

அவளை அப்படி பார்க்க ஏனோ அவனுக்கு விருப்பமில்லைஅவள் ஏதோ தவறு செய்தது போல் தலை கவிழ்ந்து நின்ற தோற்றம் அவனுக்கு பிடித்தமாயில்லைஅவன் என்றும் அவளை அந்த வெட்கம் தோய்ந்த முகத்துடன் பார்க்கவே விருப்பமாயிருக்கின்றான்ஏன் இன்றளவும் அவளது அந்த முதல் நாள் தோற்றமே அவன் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்ததுஅது இன்று அவனால் மாறுவதா?... அதை அவனும் சம்மதிப்பதா?...

மெல்ல மனதினுள் அவளை அழைத்தான்…. அவளும் நிமிர்ந்தாள்

விழிகளின் மொழியில்

சுந்தரி கண்ணால் ஒரு சேதிசொல்லடி இந்நாள் நல்ல தேதி…”

என்று அவளிடம் கேட்டான் கண்ணில் மின்னிய சிரிப்புடன்

அவன் திட்டுவான், கோப்ப்படுவான் என்று நினைத்த அவளுக்கு, அவனின் இந்த வார்த்தை வியப்பை தர, மாறாக அவன் செய்கை அவளை மயக்கியதுவிழிகளின் மூலமே அவளும் அவனுக்கு பதில் உரைத்தாள்

என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக….”

காதலை யாரும் விழிகளில் இவ்வளவு நிறைவாக சொல்லிடக்கூடும் என்று அவனுக்கு தோன்றவில்லைஅவனின் சீதை அதை அழகாக சொல்லிவிட்டாள்உனக்காக தான் நானும்நான் பிறப்பெடுத்த ஜென்மமே உன்னுடன் வாழ்வதற்கு தான் என்று….

விழிகளினால் அவனும் உறுதி அளித்தான் அவளுக்கு….

நான் உனை நீங்க மாட்டேன்..

நீங்கினால் தூங்க மாட்டேன்….

சேர்ந்ததே நம் ஜீவனே….”

அவள் விழிகள் நீரை பெருக்கியது அவனின் அழகிய விழிகள் சொல்லியதைக் கேட்டுகைகளில் புகம் புதைத்து அழ ஆரம்பித்தாள் அதுவரை சங்கேத மொழியில் அவர்கள் பேசினார்கள் என்பதையும், இவள் இப்போது அழுதால் சுற்றி இருப்போரின் பார்வைக்கு ஆளாக நேரிடும் என்பதையும் மறந்து….

எனினும் மற்றவர்கள் பார்வை படியாத விதத்தில் அவர்களின் அருகே இருந்த தூண் அவர்களுக்கு வழி செய்து கொடுத்தது சிறிது

சீதை…” என்று தான் அழைத்தான்

அவளின் அழுகை வெடித்தது…. தரையில் சரிந்து அமர்ந்து அழுதவளை இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்தான் ஆதர்ஷ் பல மடங்கு வலியோடு….

அழட்டும்இத்தனை நாள் மனதில் அழுத்திய பாரம் தீரும் மட்டும் அழுது தீர்க்கட்டும் என்றெண்ணியவன் அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தான் அவள் எதிரில் முழங்காலிட்டு அமர்ந்து

வெளியில் அவன் நீரை சிந்தவில்லயே தவிர, உள்ளே அவன் சிந்தினான் குருதியை…. அவளின் காதலை எண்ணிஅவளின் தவிப்பை எண்ணிஅவன் இருதயம் செந்நீர் வடித்தது

ஒருவழியாக அவள் அழுகை நின்றதுஅப்போது தான் அவளுக்கு உறைத்ததுஅவனின் முன்னே அவள் அழுகிறாள்அது தன்னவனுக்கு பிடிக்காதே என்று அவசரம் அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டு அவன் சென்றிருப்பானோ என்று பயத்துடன் கைகளை முகத்திலிருந்து விலக்கியவள் இமைக்க மறந்து தான் போனாள்

ஆதர்ஷ் அவளையே தான் பார்த்துக்கொண்டிருந்தான்முழங்காலிட்டு அவன் கைகளை குறுக்கே கட்டியபடி அவளுக்காக காத்திருந்தான்….

தான் கோவிலில் இருக்கின்றோம் என்பது அவளுக்கு மறந்ததுஅவனும் அவளும் மட்டும் தனி உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றியது அவளுக்குஅவளின் ராம்அவளை மட்டும் நினைக்கும் ராம்அவளுக்காக ஏங்கும் ராம்அவளது உயிர்அவளது சுவாசம்அவளது ஜீவன்…. அவளது அனைத்துமே அவனாகி போனான்

காதலின் விந்தை இது தானா?...

காதலின் சக்தி இது தானா?...

காதலின் அர்த்தம் இது தானா?...

காதலின் புரிதல் இது தானா?...

காதலின் உன்னதம் இது தானா?...

அவள் தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள்காதலின் விந்தை, சக்தி, அர்த்தம், புரிதல், உன்னதம் எல்லாம் நீயாகி போனாய்நீ மட்டுமே எனதுலகில் வசிக்கின்றாய்உன்னை அணுதினமும் பூஜிக்கின்றேன் எனது உள்ளம் என்னும் கோவிலில்

கோவிலில்…. என்ற வார்த்தை தான் அவளை மீண்டும் நனவுலகுக்கு கொண்டு வர செய்தது

அவளின் ஒவ்வொரு முக பிரதிபலிப்பையும் அவன் அவனுக்குள் உள்வாங்கிக்கொண்டிருந்தான் மிகவும் ரசித்துஇதற்காக தானே அவன் இத்தனை நாள் ஏங்கினான்அவளோடு அவன் வாழ்ந்து கொண்டிருந்தான் தனி உலகில் இத்தனை நாளும்அவனின் சீதைஅவனை மட்டும் நினைத்து கொண்டு அவனுக்காக காத்திருந்த சீதைஅவனுக்காக ஏங்கும் சீதைஅவனது உயிர்அவனது சுவாசம்…. அவனது ஜீவன்அவனது அனைத்தும் அவளாகி போனாள்….

இருவர் பார்வைகளின் பரிமாற்றம் நிகழ்ந்தது அப்போது

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனு மில….”

என்ற திருவள்ளுவரின் கூற்று அங்கே மெய்யானது

ஒருமித்த அன்போடு கண்களோடு கண்கள் கலந்து ஒன்றாகி போனால் அங்கே வாய் மொழி சொற்கள் தேவையற்றுப் போகின்றது….

மனதில் சேமித்து அவளுக்காக பொத்தி வைத்திருக்கும் காதலை அவளிடம் சொல்லிவிட துடித்தன அவன் விழிகள் இதுவரை சொல்லியது போதாதென்று….

நீங்கள் சொல்லும் அந்த நிமிடத்திற்காக நான் காத்திருக்கிறேன் என்றது அவள் விழிகள்

என்ன சொல்லுவேன் என் சீதை?... என் மனதில் உள்ளதை உன்னையன்றி வேறு யார் நன்கு அறிய முடியும் பெண்ணே?...

காதலை கூட சொல்லிவிடலாம் போலும்அதன் பின் சந்திக்கும் வேளையில் வார்த்தைகள் ஏனடி வராது போகின்றது?...

இப்படி காதல் அம்பை விழிகள் மூலம் எய்து என்னை பேசாமல் ஊமையாக்கிய உன் மேல் கோபம் வராமல் அதிகமாக ஏன் காதல் வருகிறது?...

நீ அழுத வேளையில் உன்னை என் நெஞ்சில் சாய்த்துக்கொள்ள துடித்த என் கரத்தினையும் மார்பையும் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் நான் தவித்த தவிப்பை என்னவென்று சொல்ல?...

நீ ஒரு பக்கம் குழுங்கி அழுகிறாய்நான் என் இரு கை விரித்து உன் முன்னால் நிற்கின்றேன்இது கோவில் என்பதையும் மறந்து

நீ உன்னை சமாளித்துக்கொண்ட வேளையில் நானும் என் கைகளை அடக்கிக்கொண்டேன்என் மனதையும் தான் என்னவளே

ஹ்ம்ம்இப்போதாவது என்னிடம் வாய் திறந்து பேசு சீதைஉன் ராமனுக்காகஎன்று அவன் விழிகள் கெஞ்சல் கடிதம் போட்டது அவள் விழிகளிடத்தில்….

அவள் பேசும் நொடிக்காக காத்திருந்தவனை அதிக நேரம் காக்கவிடாது அவள் பேசினாள்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.