(Reading time: 20 - 40 minutes)

 

நீங்க சொன்னது மயூரி லக்ஷ்மியா?...”

ஆமாடாஉனக்கு எப்படி தெரியும் அவளை?...”

நீங்க சொன்ன மயூரிஎன் தோழிமுகிலன் சார் ஆஃபீஸா அது?... அங்கே தான் நாங்க வேலை செய்யறோம்அவர் ப்ராஜெக்ட் ஹெட் இல்லையா அப்போ?..”

ஹேய்நீ மயூரி தோழியா?... நிஜமாவா?... நாம எல்லோரும் ஒரே குடும்பம் ஆயிட்டோம்டா…. ரொம்ப சந்தோஷமா இருக்குடா…” என்று ஆர்ப்பரித்தான் ஆதர்ஷ்

எனக்கும் சந்தோஷமா இருக்குங்கநானும் மயூவும் ஒரே வீட்டில் வாழப் போறோம்நினைக்கவே நல்லாயிருக்குங்க…” என்றாள் அவளும்

ஹ்ம்ம்நானும் அவனும் ப்ராஜெக்ட் ஹெட் மாதிரி மற்றவர்கள் பார்வைக்கு இருக்கிறோமே தவிர, உண்மையில் நாங்க தான் அதனின் உரிமையாளர் என்ற விவரம் தெரியாது யாருக்கும்அப்பறம், நான் இன்னும் முகிலனிடம் நம்ம விஷயம் எதுவும் சொல்லவில்லைஅவன் திருமண பேச்சு வார்த்தை நல்ல படியாக முடிஞ்சதும் நம்ம விஷயம் பற்றி எல்லோரிடத்திலும் சொல்லுறேண்டாஅம்மாகிட்ட மட்டும் சொல்லிருக்கேண்டா இப்போதைக்கு….”

சரிங்கநானும் மயூரி கிட்ட சொல்லலை எதுவும்வீட்டில் ப்….பா ….ம்…..மா என்ன சொல்வாங்கன்னு தெரியலைங்க….” என்று கலக்கத்துடன் உறைத்தவளை பார்த்தவன்,

அந்த கவலை உனக்கு வேண்டாம்நான் பார்த்துக்கொள்கிறேன் இனி எல்லாவற்றையும்சரியாநீ இனி ஹேப்பியா இருக்கணும் எப்பவும்சரியாடா?...”

ஹ்ம்ம்சரிங்க…”

ஹ்ம்ம்நீ அங்கே தான வொர்க் பண்ணுறஆமா யாருடா அந்த பத்மினி?... லக்ஷ்மி ஃப்ரெண்ட்னு முகிலன் சொன்னான்அந்த பொண்ணு தான் அவனுக்கு உதவி செய்யுறான்னுரொம்ப வாலாமேநிஜமாவாடா?...”

அவர் சொன்ன அந்த பத்மினி வேற யாரும் இல்லைநான் தான்….” என்று பாவம் போல சொன்னாள் சாகரி

ஆச்சர்யத்துடன், “ஹேய்நீயா?... இவ்வளவு அமைதியா இருக்குற உன்னையா வாலுன்னு சொல்லுறான் அவன்?...”

ஹ்ம்ம் உங்களைப் பார்த்தா தான் நான் இப்படி அமைதி ஆகிடுறேன்ஏன்னு தெரியலைங்க…” என்று அவனைப் பார்த்துக்கொண்டே கூறினாள் தயக்கத்துடன்

மென் புன்னகையோடு அவளின் பார்வையை உள்வாங்கியவன், “அது தான் சீதை காதல்…” என்றான்….

காதல் யாரை எப்படி மாற்றும் என்று சொல்ல முடியாது தான்கோபக்காரர்களை கொஞ்ச வைக்கும், முரடர்களை அமைதியாக்கும், விடாது பேசும் நபர்களை ஊமையாக்குவதில் இந்த காதலுக்கு நிகர் காதல் மட்டும் தான்

அப்போ லக்ஷ்மி தீபாவளி கொண்டாடினது நீ பிறந்த ஊரில் தானா?...”

ஹ்ம்ம்ஆமாங்கஅவ மட்டும் இல்லை….” என்றவள் நடந்த நிகழ்வுகளை அவனிடத்தில் உரைத்தாள்அவள் பிறந்து வளர்ந்தது, சென்னைக்கு வந்தது, மயூரியின் நட்பு, தினேஷ்-காவ்யாவின் அறிமுகம் என அனைத்தையும்….

(“ஹ்ம்ம்அப்போ தினேஷை தான் முதலில் பார்த்து பேசணும் போலும்…” என்று மனதினுள் எண்ணிக்கொண்டான்…)

அப்போ சித்துநந்துவும் அவங்க பசங்க தானா?... இரண்டு பேரும் நல்லாயிருக்காங்கலாடா?...”

அச்சோஆமாஅவங்க உங்களை கேட்டதா சொல்ல சொன்னாங்கநான் தான் மறந்துட்டேன்சாரிங்க…” என்றாள் கெஞ்சுதலோடு

ஹேய்குட்டிமா…. இதுல என்னடா இருக்குஎதுக்கு சாரி எல்லாம்விடுடாஇனி நமக்குள் நோ சாரி, அண்ட் தேங்க்ஸ் சரியாமா?...”

ஹ்ம்ம்.. சரிங்க…”

மேலும் சிறிது நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர்பின், ஆதர்ஷ்

கிளம்பலாமா குட்டிமா?...”

“…………”

என்னடா… ?... ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?...”

ஒன்னுமில்லங்க…”

என்னைப் பார்த்து சொல்லு ஒன்னுமில்லைன்னு….”

இல்லங்க…. கொஞ்சம் பார்த்து பத்திரமா இருங்க…”

அவளின் அக்கறை அவனின் இதயம் தொட்டதுகனிவோடு அவளை பார்த்தவன், “சீதை இந்த உயிர் உனக்கு சொந்தம்உன்னை விட்டு அகலாதுடாஎன்றும்….” என்றான் நிறுத்தி நிதானமாக

ஆமா…. உங்க உயிர் எங்கிட்ட தான் இருக்குஎன்னை கொன்னுட்டு தான் உங்க உயிரை எங்கிட்ட இருந்து பறிக்க முடியும்….” என்றாள் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு

சீதை….” என்றவனுக்கு ஏனோ வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி தவித்தது

அவளை மார்போடு சேர்த்தணைத்துக்கொள்ள துடித்தது அவன் காதல்

அவனின் காதலை விழிகள் பறைசாற்ற, அதில் துவண்டாள் அந்த மான்விழியாள்

காதல் என்னும் மாய உலகில் சஞ்சரித்து மகிழ்ந்தனர் இருவரும்

கிளம்பும் நேரம் வரவும், அவளை அவன் வீடு வரை பின் தொடர்ந்து சென்று வழியனுப்பி வைத்தான் ஆதர்ஷ், பல தூர இடைவெளி விட்டு காரில்

வீட்டிற்குள் செல்லும் முன், அவனைப் பார்க்க திரும்பினாள்ஓரக்கண்ணால் அவனிடம் விடைப்பெற்றவள் அவனின் தலையசைப்பில் தன்னை மறந்தாள்யாருக்கும் தெரியாமல் கண்சிமிட்டியவன் அவளைப் பார்க்க, நாணத்துடன் விழி தாழ்த்திக்கொண்டவள் அவனை மீண்டும் கடைக்கண்ணில் பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்….

கடைக்கண்ணால் என்னவள் என்னைப் பார்த்தாள் அதில் நாணம் அதிகம் குடிகொண்டிருந்தது…. இதுவே என் காதல் தளிர் வளர அவள் தெளிக்கும் நீராகும்….

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்….”

இத்தனை நாள் பிரிவு என்னும் வெண்பனி அவர்களின் காதல் நதியை மறைத்திருந்தது அதில் பயணம் செய்ய விடாமல்…. இன்று அந்த பனி விலகிவிட்டது அவர்களின் பயணமும் தொடர்ந்ததுஅருகருகே ஒரே படகில்..…

முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்தங்களின் சென்ற வார கருத்துக்களை நான் இன்றளவும் பார்க்கவில்லைஇந்த வார கதை கூட அவசரத்தில் சில மணி நேரத்தில் எழுதியது தான்ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்நிச்சயம் இரண்டொரு நாட்களில் எனது வேலையை முடித்துவிட்டு தங்களுக்கு பதில் அளிக்கின்றேன்தாமதத்திற்கு மன்னிக்கவும்

உங்களின் விருப்பமான ஆதர்ஷ்-சாகரி சந்திப்பு நிகழ்ந்துவிட்டது

ஹ்ம்ம்மீண்டும் அடுத்த வார சீதா-ராம் காதல் நதியில் சந்திக்கலாம்

தொடரும்

Go to episode # 11

Go to episode # 13

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.