(Reading time: 25 - 49 minutes)

 

டவுள் சந்நிதி என்பது ஆத்மாவிற்கு நிம்மதி தரும் இடம்… அந்த திருப்தியை உணர்ந்த காவ்யா, கணவனின் அருகில் நெருங்கி அமர்ந்து அதனைப் பகிர்ந்து கொண்டாள்…

“கவி… நீ சொல்லுறது நிஜம் தான்மா… ரொம்ப நிம்மதியா இருந்துச்சு எனக்கும்….” என்றான் அவனும்…

“ஹ்ம்ம்… ஆமாங்க… நம்ம மயூரி, சாகரி கூட வேலைப் பார்க்குற பொண்ணுங்க கூட வந்திருந்தாங்கள்ள,,, எல்லாரும் ரொம்ப நல்ல பொண்ணுங்க தான்… இல்லங்க….” என்றவாறு அவனைப் பார்த்து கேட்டாள்..

அவனும் அதனை நினைவுக்கு கொண்டு வந்தான் அவளுடன் சேர்ந்து…

எல்லோரும் சேர்ந்து கடவுளை வணங்கிவிட்டு, அங்கிருந்த மண்டபத்தில் அமர்ந்திருந்த போது, சாகரி-மயூரியின் தோழிகள் வந்தார்கள்..

எல்லோரும் சேர்ந்து செய்தது, “சித்துவிற்கும் நந்துவிற்கும் சாக்லேட் வாங்கி கொடுத்ததும், அவர்களை அணைத்து முத்தமிட்டதும் தான்…”

அவ்வாறு செய்த தேனு, கீர்த்து, சுஜி, பிரியா, மது, ஃபெமினா, நித்யா, காயூ, மீனுவுக்கும் பரிசாக முத்தங்கள் கொடுத்து தங்களது கடமையை இனிதே நிறைவேற்றினர் குட்டீஸ்கள் இருவரும்…

“ஹேய்… பிரியா.. இப்போ சந்தோஷமா?... உனக்கு சாக்லேட் கொடுத்துட்டேன்… இனி சண்டை போடமாட்டல்ல?...”

“இல்ல சித்துகுட்டி… நிச்சயம் மாட்டேன்…”

“தேனு…. இது யாரு புதுசா?...”

“ஓ… இவங்க சரண்யா நந்து… உங்களைப் பற்றி சொன்னதும் ரொம்ப பிடிச்சுப்போச்சு இவங்களுக்கு… அதான்.. கூட்டிட்டு வந்தோம்…”

“ஓ… ஹாய்… சரண்யா… எங்களுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு…” என்றனர் நந்துவும் சித்துவும்…

“தேங்க்ஸ் சித்து நந்து…” என்றாள் சரண்யாவும் மகிழ்வுடன்…

“ஒய்… சுஜி அண்ணி… என்ன நாங்க ஸ்மார்ட்டா இல்லையான்னு யோசனையா?...”

“இல்ல சித்து குட்டி, நீங்க எப்பவுமே ஸ்மார்ட் தான்… அதான் நான் அன்னைக்கே சொல்லிட்டேனே… உங்களை மாதிரி இருக்க ட்ரை பண்ணனுங்கன்னு ஒருத்தருக்கு அட்வைஸ் கூட பண்ணிட்டேனே…”

“ஓஹோ…. ஹ்ம்ம்… பண்ணுங்க அண்ணி….” என்றாள் நந்து…

“கீர்த்து, இந்த மது ஏன் அமைதியா இருக்கா?...”

“அத அவகிட்டயே கேளு சித்து…”

“ஏன் உங்கிட்ட கேட்டா சொல்லமாட்டியா…” என்று பாவம் போல சொன்னான் சித்து…

“அய்யோ… சித்து செல்லம்… உனக்கு சொல்லாமலா?...” என்று அவனிடம் செல்லம் கொஞ்சினாள் கீர்த்து…

“ஃபெமி… என்ன டார்லிங்க்… லாஸ்ட் டைம் தான் வரலை… இப்போ தான் வந்திருக்கே… இப்பவாச்சும் பேசேன்…. ஏன் உம்முன்னு இருக்குற?...”

“இல்ல நந்து… சித்து பேசுறதை ரசிச்சிட்டிருக்கேன்… அதான்…”

“நல்லா ரசிச்ச போ… நீ… நீயும் தெரியா தனமா என் அண்ணனை ஸ்மார்ட் சொன்னாலும் சொன்ன… என் அண்ணனும் உன்னை பார்க்கணும்ன்னு சொல்லிட்டே இருந்தான்…. அப்பாடா இன்னைக்காச்சும் பார்த்துட்டான்… ஹேப்பி…”

“ஹ்ம்ம்… நந்து நந்து…” என்றாள் ஃபெமினா…

“மது டியர்… என்னாச்சு உனக்கு?... பேசு… இல்லனா நான் சண்டை உங்கூட…”

“சரி வா.. நாம கோவிலை சுற்றிப் பார்த்துட்டு பேசிட்டு வரலாம்…”

“ஹ்ம்ம்… வா போகலாம்…” என்றபடி மதுவும் சித்துவும் நடக்க முற்பட,

அங்கே யாரும் எதிர்பாராத விதமாக வந்துகொண்டிருந்தாள் புவி…

“”ஹேய்… புவி…” என்று ஓடிப் போய் கட்டிக்கொண்டாள் சாகரி…

“உன்னை நேரில்… பார்ப்பேனென்று நினைக்கவே இல்லைடி செல்லம்மா… ரொம்ப சந்தோஷம்…”

“ஹேய்… கண்ணம்மா… என்னடி அதிசயம்… இப்படி ப்ப்ளிக்கா கட்டிகிட்ட..?... எனக்கு தான் செம ஹேப்பி… இன்னைக்கு பாரு என் FB ஸ்டேட்டஸை….”

“பிசாசே.. நீ எல்லாம் திருந்தவே மாட்டடி…”

“ஹிஹிஹி… திருந்தினா என்ன தருவ செல்லம் எனக்கு?...”

“ஆ… நாலு அடி வேணா போடுறேன் உன் முதுகில்… என்னடி போடவா?...”

“நீ எல்லாம் அத்தைப் பொண்ணாடி?... போடி…”

“ஹலோ… ஹலோ… என்ன நடக்குது இங்கே… இங்கே நாங்க இருக்குறோம்…” என்றாள் நந்து,…

“அதான அப்படி சொல்லு நந்தும்மா… நம்மள பார்க்க வந்துட்டு இவங்க இரண்டு பேரும் கொஞ்சிக்கிறதை பாரேன்…” என்றான் சித்து…

“அய்யோ… சித்து… குட்டி… உங்களைப் பார்க்க தான் நான் இன்னைக்கு வந்ததே… அது சும்மா, அவளை முதலில் கொஞ்சினா தான் உங்களைப் பார்க்க என்ன விடுவா… அதான்.. வேற ஒன்னுமில்லை…”

“ஓ… அப்படியா விஷயம்… சரி… எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்த?...” என்று கேட்ட சித்து நந்துவின் குட்டி கைகள் நிறையும் அளவு பரிசுகள் கொடுத்தாள் புவி…

அவளைக்கட்டிக்கொண்டு முத்தம் இட்டனர் இருவரும்…

“நித்யா… உன் ஆசை நிறைவேறிட்டு போல…”

“ஆமா.. மயூரி,,, புவி வரணும்னு நான் ஆசைப்பட்டேன்… அவளும் வந்துட்டா… ஹேப்பி…”

பின், தினேஷிடம் சென்ற புவி, “சாகரி சொல்லும்போது உங்களை மாதிரி அண்ணன் இருந்தா நல்லாயிருக்கும்னு அடிக்கடி தோணும்… உங்களை இன்னைக்கு இங்கே பார்த்தது ரொம்ப சந்தோஷம் அண்ணா… ஹ்ம்ம்.. அப்படி கூப்பிடலாம் தானே?...” என்று கேள்வியோடு நிறுத்தினாள்…

“தாராளமா… நாத்தனாரே….” என்றாள் காவ்யா…

பிறகென்ன, மகிழ்ச்சி என்னும் கடலில் அனைவரும் நீந்திவிட்டு வீட்டிற்கு திருப்தியுடன் வந்தனர் சாகரியைத் தவிர……

மனம் முழுதும் எதிர்பார்ப்புடனும், படபடப்புடனும் சென்ற சாகரிக்கு ஆதர்ஷ் வரவில்லை என்ற நிதர்சனம் நிச்சயம் இனிக்கவில்லை…

எனினும் புவியை பார்த்த சந்தோஷம் அவளுக்குள் இருந்தது… அந்த சின்ன நிறைவுடன் அலுவலகம் சென்றவள், அங்கு நடந்த முகிலன்-மயூரி உரையாடலை கேட்டு மீண்டும் மனக்கலக்கம் கொண்டாள் பெரிதும்…

முகிலனிடம் கையெழுத்து வாங்க வேண்டி, அவனின் அறைக்குள் செல்ல முயன்றவளுக்கு, முகிலனும்-மயூரியும் பேசுவது கேட்டது… தவறான நேரத்தில் வந்துவிட்டோம் போலும் என்றெண்ணி வெளியேற நினைத்தவளின் காதில், ஆதர்ஷ் என்ற பெயர் விழ, நகர்ந்த கால்கள் தரையோடு ஒட்டிக்கொண்டது அசையாமல்…

“என்னங்க சொல்லுறீங்க… அண்ணனுக்கு உடம்பு சரியில்லைன்னு முதலிலேயே சொல்வதற்கு என்ன…”

“இல்லடா.. லேசான காய்ச்சல் என்று தான் நினைத்தேன்… அதன் பின்னர் தான் தெரிந்தது மலேரியா என்று… அதனால் தான் உன்னிடம் கூட என்னால் சரியாக பேசமுடியவில்லை இந்த ஒருவாரமாக… சனிக்கிழமையிலிருந்து அவனுக்கு முடியாமல் போய்விட்டது… உன்னிடம் கூட சொல்லக்கூடாதென்று சொல்லிவிட்டான் மயூ… பாவம் வெள்ளிக்கிழமை தான் இங்கே சென்னைக்கு வந்தான்… வந்ததும் இப்படி ஆகும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவே இல்லை… அலுவலகத்திற்கு போக கூடாது என்று நான் கண்டித்ததால், வீட்டிலேயே அமர்ந்து வேலை செய்கிறான் அவன்… என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான் மயூ..”

“நான் பேசுறேங்க… அண்ணனிடம்.. நீங்க கவலைப்படாதீங்க… அண்ணன் குணமாகிடுவார் சீக்கிரம்…” என்றபடி அவனுக்கு ஆறுதல் சொன்னாள் மயூரி…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.