(Reading time: 19 - 37 minutes)

 

காற்றென்றாய்!

காற்றுடனும் கண்ணாமூச்சி ஆடும் நீ யாரென்பேன்?

கள்ளனென்பேன்,

கன்னியின் ஆதி முதல் அந்தம் வரை அவளறியாமல் கவர்வதால்.

விளம்புகிறது மனம்

களவு கொடுப்பதில் விருந்து கொள்கிறாய், கள்ளன் பதம்  பொருட் பிழை என்பதாய்.

சுயம் அறுக்கும் சுடரே

சுற்றி எனை சுழல்பவனே

என் சுயமாய் நீ மாற

வஞ்சிக்குள் வந்து வாழ

வஞ்சிக்காமல் வருவாயா?

வரனே, என் உயிரே

சிறு கொடி கண்ட பெரும் கனிபோல்

உயிர் தாங்கா காதலுடன்

காத்திருக்கிறேன், கரம் பற்ற!!

உயிர் தேக்கி அவன் கண்களை பார்த்தாள்.

.

அவள் முன் ஒற்றை கால் மடித்து முழந்தாள் படியிட்டு கேட்டான்.

“வில் யூ மேரி மீ?”

அவன் நீட்டிய மோதிரம் கண்ணில் தெரியவில்லை, தெரிந்தது அவன் கண்கள் அரை நொடி.

அதுவும் மறைந்தது. மறைத்தது கண்ணீர்.

கை தொட்டு இவள் விரல் மீது அவன் இயற்றிய கணையாழி இவள் தான் கை நீட்டி இருப்பதை உணரச்செய்தது.

உணர்ச்சிகரமான பொழுது.

“நான் உங்கட்ட பேசனும் ரக்க்ஷத்”

“வாழ்நாளைக்கும்” நிறைவாய் சொன்னான்.

அவனும் உணர்வுகளின் பிடியில் இருக்கிறானோ?

சிறு நேரம் சென்றது.

மனபட்ட பின்பு கேட்டாள்.

“இதே ஜெஷுரன நான் வேண்டாம்னு சொன்னதும், அத்தன வருஷ நட்ப முறிச்சிட்டீங்க...இப்போ.....எதுவும் விளக்கமே கேட்காம....அதுவு ஆருட்ட கூட கேட்காம...” புரியாமல் கேட்டாள்.

நீ அன்னைக்கு ஜெஷுர் மேல வேற எந்த கம்ப்ளைண்ட் சொல்லி இருந்தாலும் நான் விசாரிப்போம்னுதான் சொல்லி இருப்பேண்டா.....விசாரிக்கவும் செய்திருப்பேன்....மத்த விஷயங்களை விட நட்பு ரொம்ப முக்கியம். அதோட ஜெஷுர்ட்ட தப்பு இருக்காதுன்னு நல்லா தெரியும்.

ஆனா நீ சொன்ன விஷயம் வேற...இதுல அவன்ட்ட தப்பே இல்லனாலும் கூட உனக்கு அப்படி தோணிய பிறகு, அவன பார்க்கிறப்பல்லாம் உன்னால நிம்மதியா இருக்க முடியாது. உன்ன விட நிச்சயமா நட்பு எனக்கு மேல கிடையாது. என் இடத்தில ஜெஷுர் இருந்தாலும் அதத்தான் செய்வான்.

அதோட போன வருஷம் ஜெஷுர்ட்ட ஆருவ அறிமுக படுத்தி வச்சப்ப அவளுக்கு அவன் மேல ஈடுபாடு இருந்திச்சுன்னு எனக்கு புரிஞ்சிது. அப்புறம் திடீர்னு துவி ஆரு ரெண்டு பேரும் வித்யாசமா நடந்துகிட்டாங்க. ஒருவகையில ஆரு, துவியால எதோ ஹர்ட் ஆகிட்டான்னு நினைச்சுகிட்டோம். ஜெஷுர்க்கும் துவிய சமாளிக்க வேண்டி இருந்தது.

அதனால இந்த கல்யாண பேச்சுக்கு ஒரு டெம்ரவரி ப்ரேக்.

இப்போ சூழ்நிலை ஒத்துவர மாதிரி இருந்தது, ஆருவும் நல்லா இருந்தா, ஜெஷுரும் வெளிப்படையா கேட்டான்....அதனாலதான் திரும்பவும் இந்த பேச்ச ஆரம்பிச்சது. ஆனால் அவ வித்யாசமா நடந்துகிட்டா....

துவிய நினைச்சு ஜெஷுர விலக்குறாளோன்னு பட்டது. என்ட்ட எல்லாத்தையும் அளப்புற ஆரு  ஏனோ இதபத்தி பேசலை. அதான் உன்னவிட்டு கேட்க சொன்னேன். நீ எடுத்ததும் சொன்ன காரணம் எனக்கு வேற மாதிரி புரிஞ்சிது.

ஜெஷுர்க்கு ஆரா மேல விருப்பம் இருக்குன்னு முன்னமே எனக்கு தோணும். எதுவும் அவட்ட...அளவுக்கு மீறி...அவளுக்கு பிடிக்காத மாதிரி...நடந்திருப்பானோன்னு....ஜெஷுர் நல்லவந்தான் , ஆனாலும் இந்த விஷயத்தில யார் எந்த சூழ்நிலைல தப்பு செய்வாங்கன்னு யாருக்கு தெரியும்? “

“இப்போ?”

அதிர்ச்சியாய் கேட்டாள் நிரல்யா. இப்போ இவனுக்கு எல்லாம் தெரியுமோ?

“அருணை பத்தி நிறைய தெரிய வந்திருக்குது அதான்.” அவன் குரலுக்குள் உள் ஓடியதோ இரும்பு நதி?

 “நாளைக்கு எட்மாண்டன் போறேன்...நீயும் என் கூட வந்தன்னா நல்லா இருக்கும். ஆரு நம்ம கூடதான் இருப்பா....வர்றியாடா? அங்கிள்ட்ட நான் பெர்மிஷன் கேட்கிறேன்....”

மறுநாள் எட்மண்டன் பயணம்.

சென்று சேர்ந்ததும் இவள் எதிர்பார்த்தது போல் விமானநிலையத்துக்கு வரவேற்க ஆரணி வரவில்லை.  ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு.

“அருண் எப்ப என்ன செய்வான்னு சொல்லமுடியாது. அதான் அவள வர வேண்டாம்னு சொல்லிட்டேன். ஸேஃப்டி ரீசன்ஸ்...” இவள் முகமறிந்து ரக்க்ஷத்தான் பதில் சொன்னான்

அங்கு தொடங்கிய ஸேஃப்டி ரீசன்ஸ் நொடிக்கு நொடி தொடர்ந்தது.

அங்கு வீட்டில் ஆரணி, அரண்யாவை கண்டதும் தான் சற்று இலகுவாகியது இவள் இதயம். அதுவரை தான் இறுக்கமாக உணர்ந்திருப்பதே அப்பொழுதுதான் புரிந்தது. இவள் அங்கு சென்றடைந்த சிறுது நேரத்தில் அக்க்ஷத் குடும்பம் விடை பெற்று எங்கோ சென்றது. ஏன்? 

உணவு முடிந்ததும். வரவேற்பறையில் சிறு சல சலப்பு கேட்டு திரும்பி பார்த்தால்...இவளது அப்பா.

“அப்பா....” ஆச்சரியம் இவளிடம் மட்டுமல்ல, அனைவரிடமுமே!!

“மாப்பிள்ள பேசினப்போ ஏதோ  பாதுகாப்புக்காக தான் நிருவ இங்க கூப்பிட்டுட்டு வர்றார்னு தோணிச்சு. அதான் நானும் வந்தேன். என்னால முடிஞ்சத நானும் செய்றேன்” என்றார்.

உள்ளுக்குள் கொல்லும் இறுக்கம் ஏன் என புரிந்தது நிரல்யாவிற்கு. ஏதோ பெரிய ஆபத்தை எதிர்நோக்கும் சூழல் சுற்றிலும். என்னதது?

தன்னவனை துளிர்த்த கண்களுடன் காயம் பட்ட பார்வை பார்த்தாள்.

முதல் தளத்திலிருந்த லாஞ்ச் இவள் பாதம் காண காரணமாகியது அப்பார்வை.

ருண் என்ட்ட வேல செஞ்சது. அவன் ஃப்ராடுலன்ஸ், அரெஃஸ்ட், பிரிஃஸன் எல்லாம் உனக்கு தெரியும்....அவன் அடுத்து ட்ரக் மாஃபியாவாகிட்டான்.....உலகம் முழுக்க அவன் பிஃஸினஸ் போய்ட்டு இருந்தது....என் மேல அவனுக்கு பொறாமை...பழி வாங்கனும்கிற வெறி.....அதனால் நம்ம குடும்பத்த டார்கட் செய்றான்.....

பயப்படாதே... அவன் இப்போ செத்த பாம்பு....

அவன் பிஃஸினஃஸ் எல்லாம் போச்சு...அந்தந்த கவர்மெண்ட்ஸ் அத செஞ்சு முடிச்சுட்டாங்க....இப்போ அவன்ட்ட ஒரு பைசா கிடையாது...ஆனா அவனால சம்பாதிச்ச சில கூலிகாரங்க சிலர் அவனுக்கு இன்னும் துணைக்கு இருக்காங்க...இவனால திரும்ப ஏதாவது கிடைக்குமான்னு அலையுறாங்க...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.