(Reading time: 19 - 37 minutes)

 

ப்ப வாய்ப்பு கிடச்சாலும் அருண்  நம்ம குடும்பத்த டார்கட் செய்றான்...லீகல் ஆக்க்ஷன்ல மாட்டிகிற மாதிரி பப்ளிக்கா செய்யாம.... எதையாவது செய்துட்டே இருக்கான்....இன்னைக்கு என்ட்ட பேச வர்றேன்னு சொல்லி இருக்கான்.

பேச போறேன்.....இது நிக்கனும்

அழுத்தமாய் சொன்னான்.

“இப்படி என்ன அங்க வர சொல்லிட்டு, இங்க  வீட்டில யாரையாவது கடத்தி வச்சு  மிரட்ட கூடாது....அவன் அதுமாதிரி ஏதாவது கண்டிப்பா செய்வான்...... அதான் எல்லாரையும்  ஸேஃப்டி ஸோனுக்கு கொண்டு வந்தாச்சு. எல்லாரும் ஒரே வீட்டில் இருந்தாலும் ப்ரச்சனை...அந்த வீட்டை மட்டும் பிடிச்சான்னா போதுமே...அதான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்தில இருக்கனும்னு...

உங்கப்பாவ நான் வர சொல்லலை...ஆனாலும் அவங்க வந்தது நல்லது.

நீ, ஆரு, உங்கப்பா இந்த வீட்டில இருந்து ரகசியமா நான் சொல்ற இடத்துக்கு போயிடுவீங்க...உங்கப்பா இங்க இருக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கும் வெளிய இருந்து பார்க்க...”

அவன் சொல்லிகொண்டு போக “உங்க கூட யாரெல்லாம் வர்றாங்க?” அவளுக்கு தேவையான ஒரே தகவல் அதுதான் என்பதுபோல் வந்தது அவள் கேள்வி.

“கூட வர்றவங்க ஸேஃப்டி பத்தியும் நான் கவலபட வேண்டி இருக்கும்....அதனால..” அவன் தனியாளாக போகிறான் என்ற பொருள் புரிய, அதற்கு மறுப்பை அவன் சொல்லி முடிக்கும் முன் அறிவித்தாள்.

“நானும் கண்டிப்பா உங்க கூட வர்றேன். இது ஃபைனல்” இதுக்கு மேல் பேச எதுவுமில்லை என்பது போல் அவள் திரும்ப எத்தனிக்க

“லயாம்மா  திரும்பி வருவேண்டா....கண்டிப்பா” என்றான் அவன்.

அவன் சொன்ன வார்த்தை உள்ளத்துள் எதை தொட்டது என அவளுக்கு புரியவில்லை. நூலகத்தில் ஒரு புத்தகம் எடுக்க முயலும் போது சுவர் முழுவதுமிருந்த மொத்த புத்தகமும் சரிந்து விழுந்தால் எப்படி இருக்குமோ அப்படி அத்தனை வகை உணர்வுகளை, நினைவுகளை அது அவளுள் இழுத்து சரித்தது.

வாய் பொத்தி மௌனமாய் இருக்க வேண்டும் என்றது ஒரு மனநிலை, மறு மனமோ கதறி அழு என்றது. தனிமைக்கு கூட்டி போ என்றது ஒரு மனம், தாங்காது தோள் மீது சாய்ந்து அழு என்றது அடுத்தது.

மௌனமாய் அவன் முகம் பார்த்தவளின் கண்ணில் நீர்வீழ்ச்சி.

வேகமாக படியிறங்கி சென்றுவிட்டாள்.

அடுத்த சில நிமிட நேரத்தில் அங்கு வந்திருந்த குப்பை லாரியில் இரண்டு ஆண்களுடன், ஆண் வேடமிட்டிருந்த இரண்டு பெண்களும் பயணம் செய்தனர். அந்த பெண்கள் நிரல்யா, ஆரணி, ஆண்களில் ஒருவர் நிரல்யாவின் தந்தை. இது சொல்லி தெரிய வேண்டிய செய்தி இல்லை.

டுத்த சில மணி நேரத்தில் ரக்க்ஷத் அந்த வளாகத்தை அடைந்தான். சில நூறு ஏக்கர் பரப்பை சுற்றி ஓடியது அந்த வெள்ளை சுவர். அதன் தலை வாசல் வழியாக உள்ளே செலுத்தினான் தன் வாகனத்தை. உள்ளே பசும் பச்சை புல்வெளியில் பாந்தமாய் தூங்கிக்கொண்டிருந்தது நிசப்தம்.

தூரத்தில் தெரிந்தது அந்த ஒற்றை கட்டிடம். வெண்ணிறம் மாத்திரம் வர்ணமாய் பூசபட்டிருந்தது அதன் வெளிப்புறம். சர்ச் என்றது அதன் உச்சியிலிருந்த வசனம். ‘மை ரெடீமர் லிவ்ஸ்’

அவனை தவிர அந்த வளாகத்தில் இருந்ததெல்லாம் ஆறு அறிவை அடையாதவர்கள்.

உள்ளே கவனமாக நுழைந்தான். இரண்டாம் வரிசை இருக்கையில் சென்று அமர்ந்தான். சில நிமிடம் கழித்து ஆள் வரும் அரவம்.

திரும்பி பார்த்தான்.

வந்து கொண்டிருந்தவன் அருண். இவன் வயதுதான் அருணுக்கும். ஆனால் நாற்பது வயதுகாரன் போல் ஒரு தோற்றம். இரவல் வாங்கி அணிந்தது போல் ஒரு சூட். கண்களில் ரேபான். தலையில் ஒரு சமயம் பட்ட அடியின் அடையாளம் நேற்றி வரை ஒரு குழி ஓடியிருந்தது. அதை மறைக்க முடியை முன்னிழுத்து விட்டிருந்தாலும் இன்னுமாய் தெரிந்தது அது. எத்தனை அழகனாய் இருந்தவன் இப்படியா?

“நீ வார்த்தை தவற மாட்டன்னு தெரியும் ப்ரின்ஸ், அதான் நானும் தனியா வந்தேன்”

சொல்லியபடி மூன்றாம் வரிசை இருக்கையில் அமர்ந்தான். ‘ப்ரின்ஸ்’ என்றுதான் அவன் ரக்க்ஷத்தை அழைப்பது வழக்கம்.

“நீ பொய்க்கு பிதான்னு எனக்கு தெரியும், அதனால கதை சொல்றத நிறுத்திட்டு வந்த விஷயத்த பேசு”

“தெரிஞ்சுட்டா...அவனுங்க நம்ம பசங்க...வேற எங்க போவாங்க...அதான்....ஆனாலும் அவங்கள கூட காண்பிச்சு குடுக்க நான் ரெடி.....இதுவரை நான் ஹேண்டில் பண்ண அத்தனை ட்ரக் ஸ்மக்லர்ஸ், அவங்க ஃஸ்ட்ராங்ஹோல்ட்ஸ், அவங்க நெட்வொர்க், அவங்க மெத்தடாலஜி, வீக்னஸ் எல்லாம் டிடேய்லா சி.டில தாரேன்.....அதுக்கு எனக்கு ஒரு விலை வேணும்...”

“உலக போதை பொருள் கூட்டத்த ஒழிக்கிறதா நான் ஏதாவது சபதம் எடுத்திருக்கனா என்ன, இத விலை குடுத்து வாங்க...இதான் விஷயம்னா நான் கிளம்புறேன்...” அலட்சியமாய் கிளம்பினான் ரக்க்ஷத்.

‘பே’ என விழித்தான் அருண் ஒரு கணம். உண்மையிலேயே வேண்டாமா? நீதான் என் காண்டாக்ஸை ஊருக்கு ஊரு நாட்டுக்கு நாடு மாட்டிவிட்டுகிட்டு இருக்கன்னு நினச்சேன்,நீ இல்லயா....ஆராய்ச்சியாய் பார்த்தவன்....சரி இன்னொரு பேரம் இருக்குது, இத நீ கண்டிப்பா ஒத்துப்ப...”

.கிரமமாய் அமைக்கபட்டிருந்த இருக்கைகளுக்கு நடுவில் இருந்த நடைபாதையில், நடையை தொடர்ந்தான் ரக்க்ஷத்.

“என்ன இவ்ளவு பெரிய ஆள்னு நினச்சிருக்கியா ரொம்ப சந்தோஷம்...” எதிரில் தெரிந்த வாசலைவிட்டு விழியை திருப்பவில்லை அவன்.

தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற அருண், சென்றுகொண்டிருக்கும் ரக்க்ஷத்தின் முதுகை பார்த்து பேசினான்.

“உன் வீட்டில யார் மேலயும் இனி கை வைக்க மாட்டேன்...ஒதுங்கிர்றேன்....என்ன விலை தருவ?”

“உனக்கு பயந்து நான் இங்க பேரம் பேச வரலை...உறுப்படியா ஏதாவது இருந்தா பேசு...யூ நோ மை டைம் ஸ் டாலர்ஸ்” திரும்பி பாராது சொன்னான்.

வாசலை அடைந்திருந்தான் ரக்க்ஷத். வெளியே ஆராய்தலாக கண்களை ஓட்டினான். தன் ஸன் கிளாஃஸை எடுத்து மாட்டினான். காலை கட்டிடத்தை விட்டு வெளியே எடுத்து வைக்க இருந்த நொடி அருண் பேசினான்.

“துவியோட சி டிக்கு என்ன விலை தருவ?”

அதே இடத்தில் அசையாது இயல்பாய் நிற்பது போல் நின்றான் ரக்க்ஷத். “நான் என்ன அவ அண்ணனா?” திரும்பி பார்க்கவில்லை ரக்க்ஷத்.

“ அவ மேல உங்க வீட்டில உள்ளவங்களுக்கு பாசம் உண்டுண்ணு நினச்சேன்.....உன் அண்ணன் தானே அவள ஒளிச்சு வச்சதே...”

“அப்படியா இத நீ அண்ணாட்டதான் கேட்கனும்...”

“அவ என் கைல கிடச்சா இந்த சி.டி வச்சுதான் காலம் தள்ளலாம்னு நினச்சேன்...சரி போகுது...துவி சி.டியான்னு நீ அதிர்ச்சியாகல...அப்படின்னா உனக்கு விஷயம் ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்போல....ஸோ உன் அருமை தங்கச்சி...அந்த செல்லுலாய்ட் பொம்ம ...ஆரணி அவ கதையும் தெரிஞ்சிருக்கனுமே....அவ சி.டிக்கு என்ன விலை தருவ....”

திரும்பி பார்த்தான் ரக்க்ஷத். .துவி நீ அவள லவ் பண்றன்னு நினச்சு உன் கூட சுத்துனா, அவ கன்சீவ் ஆனதும் நீ கழட்டி விட்டுட்ட...அதோட அவள மிரட்ட வேறு செய்த...இத இப்ப கொஞ்சம் முன்னால உன்னபத்தி தீவிரமா துருவினப்ப கேள்விபட்டேன்...அவ சி.டி...புரியுது....என் தங்கை....??  உன்னை...சான்ஸே இல்ல....”

“அதுல ஒரு ட்ரிக் இருக்கு ப்ரின்ஸ்.....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.