(Reading time: 19 - 37 minutes)

 

ந்த துவிய ஏமாத்துறது ரொம்ப ஈஃஸியா இருந்தது. அவங்க ஃபாமிலி பிஸினஃஸை துவி ஹேன்டில் பண்ண ஆரம்பிச்சப்பதான் அவ அறிமுகம். தினமும் ஒரு பூவ அனுப்பி, நாலு மெஸஜ்...அவ நம்புற மாதிரி ஒரு சூசைட் அட்டம்ட், ஆட்டமெட்டிக்கா ஐ லவ் யூன்னுட்டா......

உனக்கு தெரிஞ்ச பொண்ணு....கொஞ்சம் லூசா வேற இருக்கா... எதுக்கும் யூஃஸ் ஆகும்னுதான் அவள ட்ரை பண்ணதே........எமோஷனல் பிளாக் மெயில் பண்ணா எல்லாத்துக்கும் அது தலைய ஆட்டும்...அப்படிதான் இந்த சி.டி எல்லாம்....சும்மா ஃப்ன்னுக்காக...

அவ குழந்த, கல்யாணம்னு சொல்ல ஆரம்பிச்சப்ப, அதே நேரம்தான் அவளும் உங்க வீட்டு இளவரசியும் பழக ஆரம்பிச்சாங்க...அடிச்சது எனக்கு ஜாக்பாட்...

எனக்கும் ரக்க்ஷத்துக்கும் ஆகாது.....தப்பு என் பேர்லதான்....இப்போ திருந்திட்டேன்....ரக்க்ஷத்ட்ட மன்னிப்பு கேட்க ட்ரை பண்றேன்...அவன் நம்ப மாட்டேங்கான்....

ரக்க்ஷத் ஒத்துகாம உன் அண்ணன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான்.....ரக்க்ஷத்துக்கு அவன் தங்கை மேல ரொம்ப பாசம்...அவ ரக்க்ஷத்ட்ட பேசினா அவன் கேட்பான்....

நீ அவள என்ன பார்க்க உன் வீட்டுக்கு ஏதாவது சொல்லி கூட்டிட்டு வா....நான் அவ கால்ல விழுந்து கெஞ்சுறதுல அவ அண்ணன்ட்ட என்ன, உன் அண்ணன்ட்டயே பேசி நம்மளுக்கு கல்யாணம் செய்து வச்சிடுவான்னு ஒரு மனம் திருந்தின பாவி மாதிரி சூப்பர் டிராமா போட்டேன்....சரின்னுட்டா....

விஷயம் வீட்டில இருக்கிற வேலைக்காரங்களுக்கு தெரிய வேண்டாமேன்னேன், அத்தனை பேரையும் அனுப்பிட்டு,  உன் தங்கயை அவ அண்ணன் ஜெஷுரன் கூப்பிடுறதா சொல்லி கூட்டிட்டு வந்துட்டா.

அப்புறம் என்ன இந்த துவி முட்டாளுக்கு தலைல ஒன்னு போட்டேன்...அது மயங்கி விழுந்துட்டு...அவ சத்தத்த கேட்டு, இது ஓடி வந்து நான் ரெடிபண்ணி வச்சிருந்த வலைல மாட்டியாச்சு....அந்த சி.டிதான்....

அப்பவே உன்ட்ட வந்து அழுவா...நீ அப்படியே ரத்த கண்ணீர் வடிப்பன்னு பார்த்துகிட்டே இருந்தேன்...ம்கூம்....ஆனாலும் அப்பவே இந்த சி.டி பேரத்துக்கு நான் வரலை....காரணம்....அவளுக்கு கல்யாணம் ஆன பிறகு விலை பேசினா நிறைய தருவன்னு நினச்சேன்.....இப்பவும் பண நெருக்கடி....கைவசம் இந்த சி.டிக்கள தவிர வேற விக்கதுக்குன்னு எதுவும் இல்ல...அதான்...விக்கலாம்னு பார்க்கேன்....

சரி....கதை போதும்..பேரம் பேசலாமா....” கத்தரிக்காய் வியாபாரம் போல சாதாரணமாய் சொன்னான் அருண்.

 ரக்க்ஷத்தும் எந்த உணர்வையும் காண்பிக்கவில்லை.

“என்ன விலை எதிர்பார்க்கிற...?”

“மத்ததுக்கெல்லாம் வெறும் ஆயிரம் கோடி கேட்டிருப்பேன்...இதுக்கு அதவிட அதிகாமா வேணும்...”

“நீ எவ்ளவு கேட்கிறன்னு புரியுதா உனக்கு...”

“அதான் முன்னாள் பிரதமரோட மகளதான கல்யாணம் பண்ண போற தாராளமா தரலாம்...”

“நீ இன்னும் என்ன விலைன்னு சொல்லல...”

“என்னால முன்னாடி மாதிரி சம்பாதிக்க முடியல...முடியவும் முடியாது....உடம்பும் போச்சு...தலைய பார்த்தியா...ஸ்கல்ல ஒரு போர்ஷன் மிஸ்ஸிங்...அதனால வாழ்க்கைக்கும் உட்கார்ந்து சாப்பிட நீ வழி பண்ணி தா...

தங்குற இடம்....சாப்பாடு...டிரஸ்ல இருந்து...நான் பண்ற அத்தன செலவுக்கும் நீ பொறுப்பு...அப்படி ஏதாவது ஒரு வழி வேணும்...என் ஒருநாள் செலவு எவ்ளவுன்னு உனக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கேன்....நான் கேட்கிறப்பல்லாம் கேட்கிற அளவு தா...போதும்...”

“தங்குற இடம், சாப்பாடு, டிரஃஸ்.....நாட் அ பஅட் டீல்.....இத செஞ்சு தரலாம்தான்....., பை த வே...நான் நின்னு பேசினதுக்கு முக்கிய காரணம் என் ரெண்டு தங்கைங்க விஷயத்திலயும் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க மட்டும்தான்.... இப்ப அன்டி நார்கோடிக் பீரோ வருவாங்க....நீ கேட்ட அந்த மூணையும் வாங்கி தராம விட மாட்டேன்...”

“சும்மா மிரட்டாத...உன்னை முழுக்க முழுக்க கவனிச்சுட்டுதான் வந்தேன்....உன்ட்ட பிஸ்டல் கூட கிடையாது இப்போ......கூட யாரும் வரலை....எந்த இன்ஃபோவையும் யார்ட்டயும் நீ பாஃஸ் பண்ண டிரை பண்ணல..பயந்து போய் உன் அண்ணன்  ஃபமிலிய ஒழிச்சு வச்சிருக்க, பெரிய இடம்னு உன் மாமனாரை வேற துணைக்கு உன் வீட்டில கொண்டு வந்து வச்சிருக்க, உன் அன்பு தங்கைக்கும், காதலிக்கும் அந்த கிழம் காவல்...எனக்கு பயந்து பம்மி இருக்கியே தவிர...எனக்கு எதிரா ஒரு துரும்ப கூட அசைக்கல....”

“ஆனா ஒன்னே ஒன்னு செஞ்சேன்...உன் ஆட்களை காமிச்சு கொடுக்கதான், நீ பேரம் பேச வர்றன்னு, உன்ட்ட பேச ஒத்துகிடுறதுக்கு முன்னாலேயே...கூட்டிட்டு வந்திருக்கியே உன் இம்மீடியட்ஸ் அவங்கட்ட சொல்லி இருந்தேன்..

உன்ன பத்தி தெரியாதா...இவ்ளவு நாளா பார்க்கனே...இததான் நீ செய்வன்னு எனக்கும் தெரியும்.....நீ என்ன பேசுனியோ அது இங்க இருந்து லைவ் வீடியோ டெலிகாஸ்ட் அவங்களுக்குதான். அவங்க அப்படி ஒரு அரேஞ்ச்மேண்ட் செய்து வச்சிருந்தாங்க....உன் ஆட்கள் பாரு.. உன்ன மாதிரிதான இருப்பாங்க....

 முதல் டீலே நீ அவங்க தலைக்குதான விலை பேசுன....அத ரெக்கார்ட் செய்து இதுக்குள்ள ஆன்டி நார்கோடிக்ஸ் டிபார்ட்மென்ட் கண்ட்ரோல் ரூமுக்கு அனுப்பி இருப்பாங்க..... இவங்க அப்ரூவர்ங்கிற வகையில இவங்களுக்கும் ஈஃஸி ஆகிடும்....

எனக்கு ஃபைவ் மினிட்ஸ் பெர்சனல் விஷயம் பேச கொடுத்தாங்க....பேசியாச்சு......”

அரண்டு போய் நம்பிக்கை இன்றி பார்த்தான் அருண்..

”நோ...நீ சும்மா பயம் காட்டுற...உன் தங்கச்சி விஷயத்த பத்தி பேசுறத என் ஆட்கள் கேட்க கூட நீ சம்மதிச்சிருக்க மாட்ட...”

“அவ என்னடா தப்பு பண்ணா, பாயந்து அழுது மறச்சு வைக்க...தப்பு பண்ணது நீ, நீயே இறுமாப்பா பேசுறப்ப அவளுக்கென்னடா....”

தட தட என்ற சத்தம், ஹெலிகாப்டர் ஒலி...சைரன்கள்...

சுற்றி வளைக்கபட்டது தெரிந்தது அருணுக்கு.

“டேய்....” வெறிபிடித்தவனாய் தன் பிஃஸ்டலை உறுவி, ரக்க்ஷத்தை குறி பார்த்தான் அருண்.

சிரித்தான் ரக்க்ஷத். “முட்டாள்னா அது நீதான். இத்தன செட்பண்ண உன் ஆட்கள் உன் பிஸ்டலுக்கு ஒரிஜினல் புல்லட்ஸ் லோட் செய்ய விட்டுருப்பாங்களான்னு கொஞ்சம் யோசி...” சட்டை செய்யாது திரும்பி நடந்தான்.

வந்த ஆத்திரத்தில் அதை வீசி எரிந்து விட்டு அடுத்த வழியை தேடினான் அருண்.

அந்த பிஃஸ்டலை குனிந்து கையில் எடுத்தான் ரக்க்ஷத். புன்னகை முகத்தில்.

“உன் ஆட்கள் புல்லட் லோட் செய்ய விட்டுருப்பாங்களான்னு யோசின்னு தான சொன்னேன்...அந்த புல்லட் டூப்ளிகேட்னு சொல்லவே இல்லையே... “ என்றவன் அந்த பிஸ்டலை மேலும் கீழுமாக திருப்பி பார்த்தான்.

 “ஒரு சின்ன ஃபைட் கூட இல்லாம உன் பிஃஸ்டலை வாங்கிட்டு வர்றேன்னு சொல்லி இருந்தேன் என் ஃப்ரண்டுட்ட...சும்மா ஒரு ஃபன்னுக்காக...அதான் ஜெஷுர்ட்ட....

அப்புறம் இன்னொரு முக்கிய விஷயம் எங்கே சூசைட் பண்ணி தப்பிச்சிடுவியோன்னு ஒரு சின்ன டென்ஷன்....இருநூறு வருஷத்துக்கு குறையாம ஜெயில் கிடைக்கும் இங்க...சாகுற வரை நீ ஜெயில்ல இருக்கனுமே...இப்படி செத்து தப்பிச்சுட்டனா...அதான்.”

காவல் துறை,அன்டி நார்கோடிக்ஸ் பீரோ அதன் கடமையை செய்தது.

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:752}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.