(Reading time: 51 - 102 minutes)

 

" மா இவரு மட்டும் பார்க்க மாட்டாராம் .. நாம மட்டும் பார்க்கணுமாம் " என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள் சுபத்ரா... அப்போதும் அவள் பக்கம் திரும்பாதவன் ரகசியமாய் புன்னகைத்தான் ..

" ஐயோ பரவாயில்லை ,... இதுல என்ன இருக்கு அத்தை .. டைம் ஆகுது நான் சுபியை கூட்டிட்டு போகவா ? "

" ம்ம்ம் சரிங்க மாப்பிளை .. ஆல் தி பெஸ்ட் சுபா" என அனைவரும் வாழ்த்த, செயற்கை புன்னகையை இழுத்து பிடித்து கொண்டு இதழில் நிறுத்தியவள், காரில் ஏறியதும் வேறு புறம் திரும்பி கொண்டாள்...

" மௌனமான நேரம் ....இள மனதில் என்ன பாரம் ? " -அர்ஜுன்

" ...."

" மௌனம் ஏன் மௌனமே வசந்த காலமா ? "

"..."

" மௌனமே பாடலாய் ஒரு பாட்டு பாட வேண்டும் "

" ...."

" பேச கூடாது ...வெறும் பேச்சில் சுகம் ஹோய் "

"...."

" பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே "

" ப்ச்ச்ச்ச் "

" அடேங்கப்பா இளவரசிக்கு ரொம்பதான் கோவம் போல "

" என் கோவம் எல்லாம் கூட யுவராஜர் கண்ணிலே படுதா ? "

" கோபம் மட்டுமா..? இன்னும் என்னென்னவோ இருக்கே "

" ஆமா ஆமா ... அதான் நீங்க என்னை பார்த்த லட்சணத்தை பார்த்தேனே... ஹ்ம்ம் "

" யம்மா ...பார்த்துடா ..கழுத்து சுளுக்கிட போகுது ... "

" அஜ்ஜு " என்றபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் சுபத்ரா ...

" உங்க மேல கோபமே  பட முடில அஜ்ஜு.... ரொம்ப மோசம் நீங்க ? "

" ஹா ஹா ஹா ... மோசமா ? அதுவும் நானா ? இதெல்லாம் அநியாயம் குட்டிமா .. கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு இவ்ளோ பட்ட பெயர் கொடுத்திட்டா, அப்பறம் கல்யாணத்துக்கு அப்பறம் என்ன பண்ணுவே நீ ? " முதலில் அவன் சொன்னது புரியாமல் விழித்தவன் அவன் குரும்பை அறிந்தவுடன் அவனை அடிக்க முயல, லாவகமாய் இடது கையால் அவளை இடையோடு அணைத்தான் அர்ஜுன் ..

" ச்சு என்ன அர்ஜுன் இது ? "

" இதுக்கு நான் போன தடவையே பெயர் சொன்னேனே குட்டிமா .மறந்து போச்சா ?? வேணும்னா மறுபடியும் முதல்ல இருந்து "

" ஒன்னும் வேணாம் தெய்வமே போதும்... சரி முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லுங்க "

" கேள்வியின் நாயகிக்கு என் பக்கத்துல உட்கார்ந்தாலே கேள்விதான் வரும் போல... எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடியே கேட்ட்டுடு  செல்லம் .. கல்யாணத்துக்கு பிறகு உனக்கு பேச வாய்ப்பே கிடைக்காது "

"வெவ்வெவ்வெவ்வெவ்வெவ்வெ "

" ஹா ஹா சரி என்ன கேள்வி ? "

" ஏன் வீட்டுக்கு வந்ததும் என்னை பார்க்கல? "

" யாரு பார்க்காம இருந்தது ? நான் வந்தது ல இருந்து உன்னைத்தானே பார்த்தேன் "

" பொய்"

" மெய் "

" நான் வந்தப்போ நீ என்னை பார்த்து அசந்து நின்னது, அதுக்கு பிறகு என்னையே வெச்சக் கண் வாங்காமல் பார்த்தது .. காதோரம் சுருண்டிருந்த உன் முடியை ஒதுக்கி விட்டது, வலது பக்கம் ஜிமிக்கியை சரி பண்ணது, வளையலை தட்டி தட்டி சத்தம் தந்தது, கால் கொலுசு சத்தம் கேட்கனும்னு ஜங்கு ஜங்குனு நடந்தது .. அபிராமி அத்தை ரகுவை திட்டும்போது வாயை பொத்திகிட்டு சிரிச்சது ... இப்படி எல்லாமே பார்த்தேனே "

" எப்படி அர்ஜுன் இதெல்லாம் ? "

" ஹஹஹஹ உன் முன்னாடி கண்ணாடி இருந்துச்சே அதுலத்தான் பார்த்தேன் "

மீண்டும் தன் வீட்டு ஹாலில் நிற்பது போல கற்பனை செய்து பார்த்தவளை பார்த்து கேலியாய் சிரித்தான் அர்ஜுன் ..

" ஹே மக்கு இளவரசி என்ன அப்டியே மேல பார்குற? ஆயா யாராவது வெத்தலையில் மை போட்டு பார்க்குறாங்களா ? "

" ச்சு போங்க பா .. ஆமா நான் இன்னைக்கு எப்டி இருக்கேன் " என்று கண் சிமிட்டினாள்..

காரை சட்டென நிறுத்தியவன் , அவள் பக்கம் திரும்பினான்

" ஏண்டி இப்படி பண்ணுற? "

" நான் என்ன பண்ணேன் பா ? "

" என்ன பண்ணியா ?? " என்றவன் அவள் இதழ்களை சிறைபிடித்தான்....  இதழ்கள்  இணைந்த நேரம் வார்த்தை மௌனமாய் போனது .. சிறிது நேரத்திற்கு பிறகு விலகியவன், எதுவும் நடக்காததை போல கண் சிமிட்டிவிட்டு ரேடியோவை உயிர்ப்பித்தான் ...

சித்திரமே சொல்லடி

முத்தமிட்டால் என்னடி ?

நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ

தொட்டு தொட்டு  நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ

அர்ஜுன் கண்களில் மின்னலுடன் அவளை பார்க்க, முக சிவந்தவளோ அடுத்த அலைவரிசையை உயிர்பிக்க, அடுத்த பாடலோ அவளின் கன்ன சிவப்பை கூட்டியது

இதழில் கதை எழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது ஆஆ

மனதில் சுகம் மலரும் மாலையிது

மான்விழி மயங்குது ஆஆ

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே

இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது

" ஹே ஏன் ரேடியோ அடைச்சிட்ட சுபி? "

" ம்ம்ம்ம் சும்மாதான்"

" அப்டியா .. சரி நான் உனக்காக சி டி ல பாட்டு பர்ன் பண்ணி வெச்சிருக்கேன் அதை போடு "

" இதுவே இப்டினா அது எப்படி இருக்கும்னு எனக்கும் தெரியும் அர்ஜுன் " என்றாள் சுபத்ரா...

" ஹா ஹா தெரிஞ்சா சரிதான் இளவரசி "

ங்க நம்ம அர்ஜுன் சுபி தங்கள் காதல் நாடகத்தை காலையிலேயே ஆரம்பிக்க ரகுராம், சூர்யா பிரகாஷ் மற்றும் சந்திர பிரகாஷுடன் ஆபீசிற்கு வந்து சேர்ந்தான் .. அன்று  ரகுராமிற்கு முக்கியமான நாள் .. அந்த கம்பனியில் நிர்வாகத்தில் இனி  ஜானகியும் ஒரு அங்கம் .. ரகுரமிற்கு அந்த கம்பனியில் இருக்கும் உரிமை அனைத்தும் அவளுக்கும் சரிசமமாக சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவன் செய்து வைத்திருந்தான் .. மேலும் அந்த கம்பனியை பொருத்தவரை சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொறுப்பும் செவ்வனே அவளிடம் ஒப்படைக்க படவுள்ளது..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.